Posts

Showing posts from December, 2021

யார் அந்த நிலவு

நைட் ஃபுல்லா யோசிச்சு யோசிச்சு கதை எழுதின காரணத்தினால் 🤔 மதிய சாப்பாட்டிற்கு பிறகு தூக்கம்.. தூக்கமாக🥱🥱 வந்தது... நைட்டு புல்லா கண்விழித்து கதை எழுத வேண்டியது பகல் நேரம் தூங்க வேண்டியது... இதுவே பொழப்பா போச்சு உங்களுக்கு😡... என்று my wife.... the Boss.... அங்கலாய்க்க.. ( எப்பவுமே சுப்ரபாதம் காலையில தானே🤨 ...) என்று மனசுல கேட்டுக்கொண்டே என் பெட்ரூமுக்கு போய் கண் அயர்ந்தேன்.😌 கண் அயர்ந்த பத்து நிமிடத்திற்குள் ஒரு போன் கால்..                          " *Hello Sir... Good afternoon...I am Sibi..calling from Pune ..How was your return journey?இனிமையான குரலில் சிபி..🧐 மறுமுனையில். All our friends are good and we had a good return journey இது நான்😎. அடுத்த செய்தியாக என்னிடம் அவர் கூறிய விஷயம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. 😳      நான் குரூப்பில்       " பயணிகள் கவனத்திற்கு" போஸ்ட் செய்தவுடன்... அநேகம்பேர்... இந்தியாவில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் அவருக்கு பணம் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று என்னிடம் கூறினார். மேலும் அவர் படித்து முடித்த WHO AM I புத்தகத்தை கொர

என்னுள் எழுந்த முதல் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்....

மனதில் எழுகின்ற எண்ணங்களை.... எழுத்து வடிவில் கொண்டு வருவதற்கு... மொழி ஆளுமை தேவைப்படுகிறது... எண்ணுவதை எண்ணியபடியே.... வாசகர்களுக்கு கொண்டு செல்வதற்கு... சரியான வார்த்தைகள்... வரிகள்... பிழையின்றி வந்து விழ.... தவம் செய்திருக்க வேண்டும்... அந்த வரம் பெற்ற எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்களுக்கு  (தமிழ் மொழியின் மேலும்.... ஆன்மிகத்திலும் என்னை காதல் கொள்ள செய்த வைத்த குரு ) முதற்கண் வணக்கம்🙏 என்றும் போல் அன்றும்... காலை மலர்ந்தது... What you have in store today for me.🤔..God... என்று மனதில் எழுந்த சிந்தனையுடன்.... அன்றைய வேலைகளை தொடர்ந்தேன்.... ஜூன் 11ஆம் நாள்... என் தந்தை இந்த மண்ணுலகிலிருந்து மறைந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன... அவருடைய அன்பும் அரவணைப்பும்... அவர் படிப்பிற்கு கொடுத்த முதலிடமும்... என்னுள் பசுமரத்தாணி போல் பதிந்து இருந்தது... அந்த நினைவுகளுடன் கரைந்து இருந்த பொழுது....   " சார்....." ஒரு சன்னமான குரல்... என்னை அழைத்தது. நல்ல சிந்தனைகளுடன் கரைந்து பொழுதும் யாராவது என்னை டிஸ்டர்ப் செய்தால் எனக்கு பிடிப்பதில்லை... " யாருங்க.... என்ன வேணும் உங்களுக்கு?"

அந்தர் கி பாத் (ஹிந்தியில படிங்கோ)

ஹிந்தியில் நேக்குப் பிடித்த வார்த்தை... Phir milangay.. இதனுடைய அர்த்தம்....  (ஹிந்தி தெரியாதவாளுக்கு) " மறுபடியும் சந்திப்போம்" இதை ஏன் இப்ப சொல்ற?🤔... அப்படின்னு நீங்க கேட்கலாம்... காரணம் இருக்கிறது.... காரணத்தோடு ஒரு கதையும் இருக்கிறது.. இதில்.... பாதி கதை... மீதி நிஜம்.🤫.. எது நிஜம்.... எது கதை அது அவா அவா கற்பனைக்கு... என்னோட  brain ஹார்ட் டிஸ்க்கில் இருந்தது.... by default ... இன்னைக்கு இதை எழுதனும் போல தோணித்து ....  கதைக்கு பேர் வெச்சுட்டு எழுத ஆரம்பிச்சுட்டேன்.... இதில் வரும் பெயர்களும்... சம்பவங்களும் கற்பனையே... ( இப்படியெல்லாம் டைட்டில் போடாம, இப்பல்லாம் எழுதவே முடியறதில்லை... ஏதோ... முன்னெச்சரிக்கையா போட்டு வச்சுட்டா, தப்பித்தவறி ஆத்துக்காரி  இந்த writting  படிச்சுட்டா ....இது எல்லாம் கதை அப்படின்னு சொல்லி சமாளிச்சிடலாமோன்னோ 😜) நான் கல்லூரியில் படிச்சிண்டிருந்த காலம்....😊 (வே பேக் to my colleage days ....year 1982... அப்போ நேக்கு வயசு 23) என்னத்த படிச்சு கிழிச்ச.... அப்படின்னு இப்ப கேட்காதேள் ...😉 ஏன்னா.... நான் ... என்னுடைய சப்ஜெக்ட்ல.... யுனிவர்சிட்டி thir

"கோலமாவு கோகிலா".

        "மாலையில்... சில பழங்களை வாங்குவதற்காக... வெளியில் இருசக்கர வண்டியில் சென்றேன்.... எதிர்பாராத விதமாக... முன் சக்கரம் ஒரு கல்லில் மோதி வலது புறம் சரிந்து விழுந்தேன்... சடாரென்று வேகமாக வந்த கார் என்னை உரசிக் கொண்டு நிற்காமல் சென்றது.  "கிரேட் எஸ்கேப் uncle" பைக்கில் பாலோ செய்த இளைஞன் சொன்ன கமெண்ட்.  "ஏதோ புண்ணியம் செஞ்சிருக்கீங்க.. இல்லாட்டினா உங்களுக்கு நாளைக்கு பால்தான்"வழியில் சென்ற ஒருத்தர் சொன்ன வார்த்தை என் காதில் விழுந்தது. காலையில் நடந்த ஒரு சம்பவம் என் கண்முன்னே திரைப் படம் போல் ஓடியது.😌😌😌😌         இன்று ஞாயிற்றுக்கிழமை.. துயில் எழுந்தவுடன் (தூங்கி எழுந்தவுடன்)..... காலண்டரை பார்த்தேன்.... பொதுவாக வாரத்துக்கு இரண்டு நாட்கள் (கடா வாங்குவதற்கு முன்) நாள் குறிப்பை பார்ப்பது வழக்கம்.... புதன்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை.. அம்மா சொல்லிக்கொடுத்த வழக்கம்.... இன்றைக்கு சங்கடஹர சதுர்த்தி... மாமிசம் சாப்பிடக் கூடாது.... அம்மா படத்தை வணங்கி.. நன்றி  கூறிவிட்டு.... வீட்டின் முன் கதவை திறந்தேன்..                "கோலமாவு வாங்கலையோ கோலமாவு".....

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு

 Just for a relaxation 👍 ஐயா தர்மம் போடுங்கய்யா... corona பாதிப்பு வந்த பிறகு இந்த மாதிரியான குரல்கள் கேட்டு காதுகள் பழகிவிட்டன. தினமும் யாரோ ஒருவர்...  இல்லை இரண்டு பேர் யாசகம் கேட்டு வருவது வழக்கமாகி விட்டது. யாசகம் கேட்பவர்கள் வறுமை நிலையைப் பார்த்து இல்லை என்று சொல்ல மனது வரவில்லை. நானும் சளைக்காமல் என்னால் முடிந்தவரை அஞ்சோ பத்தோ இருபதோ... கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றேன். இம்முறை கொடுக்கும் போது பக்கத்தில் நண்பர் பார்த்துக்கொண்டிருந்தார்.       Don't encourage these peple அப்படின்னு எனக்கு அட்வைஸ் பண்ணினார். இவங்களெல்லாம் பகல்ல வேவு பார்க்க வராங்க... நைட்ல திருடுவதற்கு பிளான் போடுவாங்க. நண்பர் கூறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. பசின்னு கேக்குறாங்க ஒரு பத்து ரூபாய் நம்ம கொடுத்தா நம்ம ரொம்ப ஒண்ணும் குறைஞ்சு போகப் போவதில்லை கடவுள் எனக்கு மூன்று நேரம் சாப்பிடுவதற்கு கொடுத்திருக்கிறார்... அவருக்கு நன்றி சொல்ற மாதிரி பசி  என்று வர்றவங்களுக்கு  ஒரு பத்து ரூபா கொடுப்பதில் தப்பில்லை. கொடுக்கணும்னு மனசு இருந்தா போதும்... கைல காசு இல்லாட்டியும்... நாம சாப்பிடுகிற சாப்பாட்டில் பாதி கொடு

சிறு ரயில் பயணம்..

என்ன வெயில்... என்ன வெயில்.... இப்பவே கண்ணக் கட்டுது டா சாமி....🤧 என்று புலம்பிக்கொண்டே... கூட்டமாக இருந்த (என்னைக்கு காலியாயிருந்தது) எலெக்ட்ரிக் ட்ரெயினில் ஏறினேன். எங்கும் வேர்வை நாற்றம்....😷 உட்கார இடம் கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில்.... ஒரு மத்திய வயதுக்காரர்.... என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்🤨... நான்  எம் ஏ... சோசியல் வொர்க்கில்.... சைக்காலஜி... ஸ்பெஷலைசேஷன் செய்து இருந்ததனால்.... மனிதர்களின் முகத்தைப் பார்த்தே.... என்னால் அவர்களுடைய மன ஓட்டத்தை படிக்க முடியும்...😉 (எனக்கு Eric Berne நின் transaction analysis அறிமுகப்படுத்திய... எனது குருநாதர் ரமண ஐயாவுக்கு நன்றி) அடுத்து வரும் ஸ்டேஷனில் அவர் இறங்கப் போகிறார்... அவர் பார்வை சொன்னது...🤪 அவரை நோக்கி.... மெதுவாக நகர்ந்து.... அவருடைய பக்கத்தில் நின்று கொண்டேன்... என்னடா வாழ்க்கை இது.... வெளியே பயங்கர வெயில்.... உள்ளே பயங்கரக் கூட்டம்.... கையில வெயிட்டான பை... எவ்வளவு நேரம் இப்படியே நிக்கிறது.... போறாத குறைக்கு காலையில பொங்கல், வடை , இட்லி சாம்பார்... ஒரு பிடி பிடிச்சாச்சு.... ரொம்ப நேரம் நிக்க முடியல.... ந

நன்றி

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.🙏🏻 சொல்லாமல் விட்ட நன்றியொன்று பல்லிடுக்கில் சிக்கிக்கொண்ட எடுக்கவியலா உணவுத்துணுக்கென பாடாய்ப்படுத்துகிறது😪 மனசுக்குள் மலர்ந்து உரியவரிடம் வெளிப்படுத்தாத நன்றியொன்று அமைதியான இரவில் தகரத்தில் உராய்ந்து சப்தமெழுப்பும் ஆணியென உராய்ந்துகொண்டேயிருக்கிறது😭 நெஞ்சுக்குள் பூத்து நெஞ்சுக்குள்ளேயே நின்றுவிட்ட நன்றி ஒரு முள்ளென மாறி சுருக் சுருக் எனக் குத்திக்கொண்டேயிருக்கிறது😲 சொல்லியிருக்கவேண்டிய நன்றிதான்😌 நாக்கை அசைத்து சொல்லென மாற்றி வெளிப்படுத்தியிருக்க வேண்டிய நன்றிதான்😘 உரியவரிடம் சேர்ப்பிக்காமல் உள்ளுக்குள்ளேயே வைத்துக்கொண்டதில் ஊதிப்பெருத்து கனக்கிறது🙆‍♀️ சுமக்கமுடியாமல் நன்றியை அவ்வப்போது தெரிவித்துவிடுங்கள்😚 சொல்ல வந்த நன்றியை சொல்லாமல் வந்து சுமந்துகிடப்பது பேரவஸ்தை😩 தூக்கம் வராமல் சன்னல் திறந்து வானத்தைப் பார்க்கிறேன்🥱 அத்தனை நட்சத்திரங்களும் கேள்விக்குறிகளாகி கேள்வி கேட்கின்றன😳 சொல்லாத நன்றியை.... சிறு தவணைகளாக இன்று சொல்ல ஆரம்பிக்கிறேன்.... என்றும் எங்கும் வியாபித்திருக்கும் பரம் பொருளே...நன்றி🤘

ஒரு பக்க உ(க)தை

 Episode 1 சோணமுத்துக்கு தூக்கம் வரவில்லை...🙄 மெத்தையில் புரண்டு புரண்டு படுத்தான்... மருந்துக்குக்கூட கொசு இல்லாத அறை.... குளிரூட்டப்பட்ட ஏசி அறை... இருந்தாலும் தூக்கம் வரவில்லை....🤨 சிலருக்கு... ஆண்டவன்  அனைத்தையும் வேண்டும் அளவுக்கு கொடுத்துவிட்டு.... உறக்கத்தை தர மறந்துவிடுகிறான்.... காரணம்...🤔 இறைவனுக்கே வெளிச்சம்....😳 நண்பர்களோடு ஒரு full அடித்த பிறகு வருவது அல்ல ஒரு நல்ல உறக்கம்....🤭 பிறகு...🤔 நமக்குப் பிடித்த... கருத்து ஒருமித்த... பெண்ணோடு சந்தோஷமாக அனுபவித்த கலவிக்கு பிறகு வருவதுதான் ஆழ்த   உறக்கம்....🤫 இதை நான் கூறவில்லை....😒 நல்ல கலவி.. ஒரு ஆழ்நிலை தியானத்திற்கு ஒப்பாகும் என்று ஓஷோ கூறுகிறார்....🤥 அது சரி... நம் கதையின் நாயகன்.... சோனமுத்தனுக்கு தூக்கம் வராததற்கு காரணம்.... மாலையில் அவனுக்கு வந்த phone call.... யாரிடம் இருந்து வந்த phone call... சொல்லலாமா வேண்டாமா....🤔 சோனமுத்தன் என்னைப்பார்த்து முறைக்கிறான்😡 அவனை சமாதானப்படுத்தி விட்டு பிறகு அவன் கதையை தொடர்கிறேன்....😴 EPISODE 2 🤘🤘🤘 தூக்கம் என்பது... இரவின் அதிசயம். அமாவாசையின் கும்மிருட்டு…  பெளர்ணமியின் வெ

பயணிகள் கவனத்திற்கு

 "பயணிகள் கவனத்திற்கு" தொடர்-1 எனது அடுத்த படைப்பின் தலைப்பு....... நண்பர்களின் வேண்டுதலுக்கு இணங்கி..... ஏதாவது ஒன்றை பற்றி... எழுத வேண்டும் என்ற எண்ணம் தலைதூக்க...ஒரு ரயில் பயணத்தைப் பற்றி... எழுத முற்படுகிறேன். என்னோடு பயணிக்க விரும்புகிறவர்கள்... இன்றைக்கே முன்பதிவு செய்து கொள்ளலாம்....  🤪                 பயணிகள் கவனத்திற்கு, வண்டி எண் 6669, சென்னையிலிருந்து பாம்பே வரை செல்லும் பாம்பே எக்ஸ்பிரஸ், தடம் எண் 6 ல் இருந்து 10 மணி 40 நிமிடத்திற்கு புறப்படும். யாத்ரிகா க்ருபயா ஜாயங்கே, காடி நம்பர்….”..... இம்முறை நான் பயணிக்க இருப்பது.... சென்னை டு புனே.. ஜன்னலோரத்தில் இருப்பிடம்... என்னுடைய இருப்பிடத்தின் எதிரில்..... இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க... சற்றும் யாரையும் கண்டுகொள்ளாமல்... தான் கையில் வைத்திருக்கும் புத்தகத்திலே புதைந்து இருக்கும்.. ஓர் இளைஞன்....(ம்.. இளம் பெண்ணாக இருந்திருந்தால்.. பயணம் சிறப்பாக  இருந்திருக்கும்😉.... இது சோணமுத்தனின் மைண்ட் வாய்ஸ்😁).... அவர் வைத்திருந்த புத்தகத்தின் தலைப்பு.....         "WHO AM I"....by தயானந்த சரஸ்வதி.... இவர் தான்

பயணம் and பொங்கல்

பயணம் and  பொங்கல் தொடர்-1 என் மனதுக்கு இனிய 😍 நண்பர்களே...🙏🏻 வெகு நாட்களுக்குப் பிறகு இதோ உங்களிடம் அளவளாகா வந்திருக்கிறேன்....😊. எனது அம்மாவின் மறைவுக்குப் பிறகு😭... மதுரைக்கு எனது முதலாவது பயணம்.... அம்மாவின் 45 வது நாள் காரியத்திற்காக...🙏🏻. எனது பயணத்தின் நேரலை உங்கள் கவனத்திற்கு... பயணங்கள் என்பது ஒரு நிகழ்வு.... அந்த நிகழ்வு சிறு சிறு சம்பவங்கள்... நல்லதும் கெட்டதும் நிறைந்தது... அந்த சிறுசிறு நிகழ்வினை உள்வாங்கி... அது நமக்குள் உண்டாக்கிய பாதிப்புகளை... நிகழ்வுகளை... எழுத்துக்களைக் கொண்டு ஆவணமாக்கி.... இதோ அவை உங்களுக்காக....🤘 "காரோன" காலத்தில்... ஒரு மாநிலத்தில்  இருந்து மற்றொரு மாநிலத்துக்குச் செல்ல... E பாஸ் அவசியமாகிறது. May 29 தேதி.... மதுரை பயணம் நிச்சயம் ஆகிய வுடன்.....28 ஆம் தேதி E pass  ஆன்லைனில் விண்ணப்பித்தேன். என் முயற்சி பலமுறை மறுதலிக்கப் பட்டது... காரணம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்🤘. முயற்சி திருவினையாக்கும்... என்பதை மனதில் கொண்டு... பலமுறை பல காரணங்கள் முறையிட்டு.... கடைசியில் E பாஸ் வாங்குவதில் வெற்றி பெற்றேன். மதுரை கார்ப்பரேஷனுக்கு என் நன்றி

பூக்களே சற்று ஓய்வெடுங்கள்....

 பூக்களே சற்று ஓய்வெடுங்கள்.... 💃🏼💃🏼💃🏼💃🏼💃🏼💃🏼 மணப்பெண்ணின் தலையில் நேர் வகிடு எடுத்தது போல்.... அந்த சாலை நேர்த்தியாக இருந்தது. பெருவிரலால்... ஆக்சிலரேட்டரில் சிறிய அழுத்தம் கண்டவுடன்... சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது புத்தம் புது VENU கார்.... அதை அனாவசியமாக.... ஒற்றை விரலால்.... அதன் ஸ்டேரிங்கை... ரஜினி ஸ்டைலில்.😁 பிடித்து  கொண்டிருந்தேன் எனக்கு பயணம் என்றால் ரொம்ப பிடிக்கும்...😍 அதுவும் காரில் பயணம் என்றால் மிகவும் பிடிக்கும்....😁 குடும்பத்தோடு காரில் பயணம் செய்யும்பொழுது மகிழ்ச்சி தருவது....😋 தொடங்கும் இடத்திலிருந்து செல்லும் இடம் வரை.... ஒருவரோடு ஒருவர் அரட்டை அடித்துக் கொண்டு செல்வது....(நோ great escape for anyone )..🤣  படிக்கும் மகளுக்கு கல்லூரிக்கு செல்லத் தேவையில்லை....🙇‍♀ மனைவிக்கு சமைக்கத் தேவையில்லை...😘 எனக்கு ஆபீஸ் போக தேவையில்லை....😉 ஆகையால் பயணங்கள்  எனக்கு என்றுமே பிடிக்கும் செயல்...  அதுவும் இம்முறை புத்தம் புதிதாக வாங்கிய VENU  காரில் பயணம்..... Venu காரில் ... சித் ஸ்ரீராம் குரலில் கசிந்த... "கண்ணில் மழை... நெஞ்சில் இடி.. மின்னல் எழ.. அங்கும் இ

மழைக்கு ஒதுங்கிய இடத்தில்....

 மழைக்கு ஒதுங்கிய இடத்தில்.... தொடர்-1 அது ஒரு மழைக்காலம்..🐧⛅.. கள்ளுண்ட கிழவன்,🎅👨‍🦯 கால்பரப்பி தள்ளாடி நடப்பது போல், வான் மேகங்கள், அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தது...குடை இல்லாமல் நான் வெளியே... மதுரை ரயில் ஆர் நகர் இரண்டாவது தெருவில் நடந்து கொண்டிருந்தேன். அன்று காலையில்தான் புனே நகரில் இருந்து ரயிலில் வந்திருந்ததால் எனக்கு களைப்பாக இருந்தது.😥😓😴🥱 ரயில் பயணங்கள், விமானப் பயணங்களை போல், வசதியாக இருப்பதில்லை. ஆனால் அது எனக்கு வழக்கமான ஒன்றாகும். பணி நிமித்தமாக அங்கு (புனே) நான்கு வருடங்கள் இருந்தபடியால்.... இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சென்னை, மதுரை வந்து போவது வழக்கமாகி விட்டது. அன்றைக்கு மதுரைக்கு விஜயம் செய்ததும் ஒரு காரணமாகத்தான். பொருளாதார நெருக்கடியில்... அசோக் நகர் (மதுரை) முதல் தெருவில் ஒரு மனை வாங்கி அதில் வீடு கட்டிக் கொண்டிருந்தேன். அதன் மேற்பார்வைக்காக தான் இந்த விசிட்.🤨 "என் மேல் விழுந்த மழைத்துளியே...  இத்தனை நாளாய் எங்கிருந்தாய்..." காதலனின் கன்னத்தில் விழுந்த,காதலியின் முதல் முத்தத்தை போல்... என்  கன்னத்தில் விழுந்த முதல் மழைத்துளி... கவிஞரின் 

பேயுடன் பேச என் 9 அழுத்தவும்.

பேயுடன் பேச என் 9 அழுத்தவும். தொடர் -1 காலை.... ☀️ சூரிய ஒளி பட்டு ... எல்லா ஜீவராசிகளும்🦆🦅🦉🦇🐛🕷️🐘🦧 தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கும்  நேரம்.... சென்னை கடற்கரைக்கு... கால்நடைக்காக வந்த மனித கூட்டங்கள் அங்கங்கே...🚶🏻‍♀️🚶‍♂️👩‍🦯🏃‍♂️🚶‍♂️. அந்த கடல் கரையின் ஓரத்தில் உள்ள... பிரம்மாண்டமான பங்களாவின்..🏣 வரவேற்பரையில்... டேபிள் மேல்.... பிரிக்கப்படாத அன்றைய செய்தித்தாள்... அதற்குப் பக்கத்தில் ஆவி பறக்கும் தேநீர் கோப்பை....☕ யாருக்காகவே காத்துக்கொண்டிருந்தது.... சில மணித்துளிகளுக்கு பிறகு.... ஒரு அழகான கை.... அந்த தேனீர் கோப்பையை.... கையில் எடுத்துக் கொண்டே.... கண்களால் அந்த  செய்தித்தாளின் தலைப்புச் செய்தியை... பார்வையிடுகிறது... (இவள் தான் நம் கதையின் கதாநாயகி... நிஷா.... வயது 35... அழகான உடல்வாகு... பொலிவான கம்பீரமான தோற்றம்... இரண்டாம் முறை  பார்க்க ஏங்க வைக்கும் முகம்...🙍‍♀️ தொழில்... மனோதத்துவ டாக்டர்...) தலைப்புச் செய்தி.. "டாக்டர் சுமன் காணவில்லை. 11 நாட்களாக , DCP சங்கர் தலைமையில்...போலீஸ் வலை வீச்சு"🧐 (டாக்டர் சுமன்... நிஷாவின் கணவர்.... வயது 55...😳. இந்த