அந்தர் கி பாத் (ஹிந்தியில படிங்கோ)

ஹிந்தியில் நேக்குப் பிடித்த வார்த்தை...

Phir milangay..

இதனுடைய அர்த்தம்....  (ஹிந்தி தெரியாதவாளுக்கு)


" மறுபடியும் சந்திப்போம்"


இதை ஏன் இப்ப சொல்ற?🤔... அப்படின்னு நீங்க கேட்கலாம்...


காரணம் இருக்கிறது....


காரணத்தோடு ஒரு கதையும் இருக்கிறது..


இதில்.... பாதி கதை... மீதி நிஜம்.🤫..

எது நிஜம்.... எது கதை அது அவா அவா கற்பனைக்கு...


என்னோட  brain ஹார்ட் டிஸ்க்கில் இருந்தது.... by default ... இன்னைக்கு இதை எழுதனும் போல தோணித்து .... 


கதைக்கு பேர் வெச்சுட்டு எழுத ஆரம்பிச்சுட்டேன்....


இதில் வரும் பெயர்களும்... சம்பவங்களும் கற்பனையே...


( இப்படியெல்லாம் டைட்டில் போடாம, இப்பல்லாம் எழுதவே முடியறதில்லை... ஏதோ... முன்னெச்சரிக்கையா போட்டு வச்சுட்டா, தப்பித்தவறி ஆத்துக்காரி  இந்த writting  படிச்சுட்டா ....இது எல்லாம் கதை அப்படின்னு சொல்லி சமாளிச்சிடலாமோன்னோ 😜)


நான் கல்லூரியில் படிச்சிண்டிருந்த காலம்....😊 (வே பேக் to my colleage days ....year 1982...

அப்போ நேக்கு வயசு 23)

என்னத்த படிச்சு கிழிச்ச.... அப்படின்னு இப்ப கேட்காதேள் ...😉 ஏன்னா.... நான் ... என்னுடைய சப்ஜெக்ட்ல.... யுனிவர்சிட்டி third rank  ஹோல்டராக்கும்👍 ....🤣


இப்ப சொல்லாட்டி... எப்ப சொல்லிக்கிறது..

(காலர் இல்லாத ஷர்ட் நான் போட்டிருந்தாலும். காலர் இருக்கிறமாதிரி தூக்கி விட்டுண்டு இருக்கேன்👍.).          லஞ்ச் ப்ரேக் time...

வெளியே செம வெயில்.... கிளாஸ் ரூமில்... அமைதியா உக்காந்திருந்தேன்... 🤣🤣🤣🤣என்ன சிரிக்கிறீங்க.... அப்ப எல்லாம் நான் ரொம்ப நல்ல பையனாக்கும் ... (Of course.. இப்பவுந்தான்).😛


" கிஷோர்.... உன்னைய பிரின்சிபல் கூப்பிடுறார்"... என்கிட்ட சொன்னவா  யாருன்னு  இப்ப நேக்கு ஞாபகம் இல்லை....🤔


நேக்கு ரொம்ப டென்ஷன்.... 


நான் ரொம்ப பயந்தவன்... நான் ஒண்ணுமே செய்யலியே .....

என்னை ஏன் பிரின்சிபால் கூப்பிடுறார்....🤔


பலத்த சிந்தனையோடு அவரை போய் பார்த்தேன்...


" வாங்க கிஷோர்.." என்று சொல்லி என்னை வரவேற்று... என்னை உட்காரச் சொல்லி... அவருக்கு எதிரே இருந்த நாற்காலியை காண்பித்தார். 


"பரவால்ல சார்"... நான் பயத்தில் இருந்தேன்.😟


"உங்களுக்கு ஹிந்தி தெரியும் தானே.."...


 என்று என்னை  அவர் கேள்வி கேட்டு.... நான் தெரியாது என்று பதில் சொல்லும் முன்....🧐


நாளைக்கு  டெல்லியிலேந்து  (Delhi school of Social work ) Students நம்ம காலேஜ்க்கு வரா.... நீங்கதான் அவாளுக்கெல்லாம் கம்பெனி ( accompany) கொடுக்கணும்.மதுரையை சுற்றி  காமிக்கணும்.(எவன்டா அவன்.. எனக்கு ஹிந்தி  தெரியுமுன்னு பிரின்ஸ்பலண்ட  போட்டு கொடுத்தது😡 )  இருந்தாலும் Principal சொன்ன அந்த கடைசி ரெண்டு வரி.... நேக்கு  ரொம்ப புடிச்சு போச்சு... ( கரும்பு தின்ன கூலியா... அட்டெண்டன்ஸ் கொடுத்து காலேஜ் செலவுல ஊர்சுத்தி பார்க்கிறதுன்னா  யாருக்குத்தான் பிடிக்காது.... அதுவும் அதில ஏதாவது ஒரு சூப்பர் தேவதை இருந்தான்னா..)🤣🤣🤣                Nextday....காலையிலேயே எந்திரிச்சு... நீட்டா டிரஸ் பண்ணிண்டு.... அந்த காலத்து  கமல் மாதிரி இருப்பேனாக்கும்😊.(இந்த நினைப்புதான் பொழப்பைக் கெடுக்குது... மைண்ட் வாய்ஸ் நெனச்சிண்டு சத்தமா பேசுறேள்)... காலேஜுக்கு வராச்சே... எல்லாம்  எனக்காக வெயிட் டிங்... approximately 15 students... அதுல ரெண்டு தேவதைகள்.... ஒரு ஸ்ரீதேவி☺️... மற்றது குஷ்பூ..😏.( நிறைய  சாப்பிடுவா போல...குண்டா இருந்தா...)... பிரின்சிபால் எல்லோரையும் எனக்கு அறிமுகப்படுத்தினார்.... கை குலுக்கிக் கொண்டோம்🤝.... Including ஸ்ரீதேவி..😘.

 நண்பர்களை முதலில் நான் கூட்டி சென்ற இடம் ... the  famous திருமலை நாயக்கர் மஹால் (நான் பிறந்து வளர்ந்தது மதுரையில் தான் என்றாலும்  திருமலை நாயக்கர் மஹால் போவது இதுதான் முதன்முறை🙄.) மகாலில் உள்ளே ஒளியும் ஒலியும் நடந்துண்டிருந்தது.திருமலை நாயக்கர்  மகாலை பற்றி  நேக்குத் தெரிந்ததை அவாளுக்கு ஆங்கிலம் கலந்த ஹிந்தியில் சொல்லிண்டிருந்தேன். நடு நடுவே... ஸ்ரீதேவி இருமிக் கொண்டே இருப்பது என் காதில் விழுந்தது.(உசுரே போகுது உசிரே போகுது

உதட்ட நீ கொஞ்சம் சுளிக்கையிலே😘).....மனசுல பட்டாம் பூச்சி பறந்தது.🦋.. பட்சி சொன்னது...🐦 கிஷோர்... இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாதே... பயன்படுத்தி.. ஸ்ரீதேவியண்ட  பேசு...(உடம்பும் மனசும் தூரம்.. தூரம்...

ஒட்ட நினைக்கேன் ஆகல...

மனசு சொல்லும் நல்ல சொல்ல

மாய உடம்பு கேக்கல). Super ego and Id (impulses) சண்டையில் id.. ஜெயித்தது. Excuse me... கியா பாத் ஹை... Are you not feeling well? (எப்படிடா கிஷோர் இவ்வளவு கரிசனையோடு கேட்டே).                      Yes...🤧... (புல்லாங்குழலை தொண்டையில் வைத்து தைத்த மாதிரி இனிமையான குரல்) தொண்டையில் கிச்சு கிச்சு சத்தத்துடன் பதில் கூறினா  ஸ்ரீதேவி.            (எட்ட இருக்கும் சூரியன் பார்த்து

மொட்டு விரிக்குது தாமர..

தொட்டு விடாத தூரம் இருந்தும்

சொந்த பந்தமும் போகல)

Shall I take you to a doctor? என்று கேட்டவுடன் கண்களை அகல விரித்து  (ஸ்ரீதேவிக்கு கண்கள் பெருசு) தலையை மேலும் கீழும் ஆட்டினா. திருமலை நாயக்கர் மஹாலுக்கு பக்கத்துல  பந்தடி 3  சந்தில்... என்னுடைய பிரதர் இன் law வின் friend டாக்டர்.. ஒரு கிளினிக் வைத்திருந்தார். ஸ்ரீதேவியை அவர் கிட்ட கூட்டிண்டு போனேன். டாக்டர் எங்க இரண்டு பேரையும் பார்த்து.. மனசுல ஏதோ தப்பா புரிஞ்சிண்ட மாதிரி இருந்தது. அவசர அவசரமா... அவருக்கு புரியிற மாதிரி.. வந்த விஷயத்தைச் சொன்னேன். ஸ்ரீதேவியை டெஸ்ட் பண்ணி... ஜலதோஷத்திற்கு மருந்து கொடுத்தார். ஃபீஸ் எவ்வளவுன்னு கேட்டுண்டே... ஸ்ரீதேவி பர்ஸை திறந்தா. பரவாயில்லை ப்ளீஸ்  ஃபீஸ் வேணாம்... அப்படின்னு டாக்டர் சொன்னார். ஸ்ரீதேவி என்னை ஹீரோ மாதிரி பார்த்தா.               (ஓ மாமேன் தவிக்குறேன்,

மடி பிச்ச கேக்குறேன்,

மனச தாடி என் மணிக்குயிலே). என்னோட பிரைன் கம்ப்யூட்டரில்... Random Axis memory இல்... கண்ணத் தொறக்கும் போது எல்லாம் by default அவா  முகம் தான் வந்து நின்னது. என்ன முயன்றும் டெலிட் செய்ய முடியல. திருமலை நாயக்கர் மகால் பார்த்து முடித்த பிறகு... அங்கிருந்து காந்தி musem கூட்டிண்டு போனேன். பிறகு... வீடு தான் வேற எங்க போறது. அடுத்த நாள் எனக்கு internal எக்ஸாம்...🙇‍♂️ ஆகையால் அவாளோடு ஊர்  சுத்த ... என்னுடைய சீனியர் ஒருத்தரை அனுப்பி வைச்சாங்க😢. அந்த சீனியர் என்கிட்ட ஒரு விஷயத்தைச் சொன்னார்.🧐 Delhi students எல்லாம் இன்னைக்கு ஈவ்னிங் ட்ரெயின்ல மெட்ராஸ் போறாங்கன்னு.    I wanted to meet ஸ்ரீதேவி again. Train கிளம்புறதுக்கு 5 நிமிஷா முன்னாடி அவங்க கம்பார்ட்மெண்டில்  ஸ்ரீதேவியை👩‍🦰 தேடி கண்டு பிடிச்சுட்டேன்... என்னை பார்த்த உடனே ஸ்ரீதேவியும் ஓடி வந்தா🏃‍♀️. என் கையில் ஒரு பெரிய கவர் கொடுத்துட்டு... வண்டிக்கு க்ரீன் சிக்னல் போட்டவுடனே... Phir milangay... என்று சொல்லிட்டு... வண்டியில ஏறிட்டா.💃💃🕺      விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே

இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப்  பொழுதினில்

வந்துவிடு


அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பித் தந்து விடு. ஸ்டேஷனில் இருந்து கிளம்பிய ட்ரெய்ன பார்த்து என்னால் பாட மட்டுமே முடிந்தது.😭😭😭😭😭 அவா கொடுத்த கவரில்... முத்து முத்தான அவா கையெழுத்தில.. ஹிந்தியில் ஒரு  கடிதம்.  நேக்கு ஹிந்தி ஏதோ (தோடா தோடா மாலும்) கொஞ்சம் பேச வரும்...😒 ஆனா படிக்கத்தான் கஷ்டம்.😔... அதுல அப்படி என்ன எழுதி இருந்தான்னு பிரெட்னஸ் கிட்ட கேட்கவும் தயக்கமா இருந்துச்சு. (பிரின்ஸ்பல் கிட்ட போட்டு குடுத்துட்டா🤭) மறுநா சாயங்காலமா மாடில அந்த லெட்டர கையில வச்சுண்டு யோசனையா இருந்தப்ப,🥺 பக்கத்து வீட்டு மார்வாடி பையன் ஓடி வந்தான்.  அண்ணே அந்த காத்தாடிய எடுத்துக் கொடுங்கோன்னு.... அவனை வச்சி என் லெட்டர படிக்க நினைச்சி... ஓகே எடுத்து தரேன்... ஆனா இதுல ஹிந்தில என்ன எழுதி இருக்குனு நீ படிச்சி சொல்லணும்னு கேக்க.... அவனும் சரிண்ணேனு சட்டுனு அந்த லெட்டர வாங்கி....  பாய் ஆப்கோ பஹுத் தண்ணியவாத். கபி  தில்லி ஆவோகே தோ ஹமாரே கர் சரூர் ஆனா..... இதுதான் அதில் இருந்தது. பையன் படித்ததும். நான் கலங்கிய விழிகளுடன் காத்தாடிய எடுத்துக் கொடுத்தேன். என்னோட மனசுல அவ மேல ஒரு காதல் இன்னும் இருக்கு... என்னுடைய ஸ்ரீதேவியை டெல்லியில் யாராவது பார்த்தா சொல்லுங்கோ... அவளுக்காக நான் இன்னும் காத்துண்டு தான் இருக்கேன்....😢.( அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே

நண்பனே...

இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே

அது ஏன் ஏன் நண்பனே... சன் டிவியில்... நடிகர் திலகம்... ஓடி ஆடி பாடி கொண்டு இருந்தார்🤧)

போடா.. ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்.... 


செல் போன் வசனம் பேசியது😳.    


 (ஆச்சரியப்பட வேண்டாம்..caller tune அப்படிச் செட் பண்ணி வச்சிருக்கேன்.) 


வழக்கம்போல் unknown   phone நம்பர் கிட்ட இருந்து போன். 


ஹலோ...யார் பேசுவது? .  

                             

Sir.. நான் ரஜினி பேசுறேன்.  

    

ஒரு சின்ன வயசு பையன் குரல். 


யாரு.... படையப்பா ரஜினி யா....(கிண்டலாக கேட்டேன்) 


மறுபக்கம் சிரிப்பொலி.    

  

Sir... நான் சிறுகதை குரூப்ல ஒரு member. உங்க   phir milangay...( அந்தர் ki பாத்) இப்பதான் படிச்சு முடிச்சேன். சூப்பர் பதிவு sir. எங்கிருந்து சுட்டீங்க sir.😜.         Ek Duuje Ke Liye படக் கதை மாதிரி இருந்தது.  அதனால் கேட்டேன்.    


அம்பி.. என் வாழ்க்கையில் நடந்த கதை அம்பி.


நானே 40 வருட காதலை தொலைச்சிட்டு நொந்து போய் இருக்கேன். காதலியை சகோதரி என்று இன்று சொல்ல வச்சுட்ட.(ஹிந்தி படிச்சிருந்தா அன்னைக்கே தெரிஞ்சிருக்கும்😩)


அது சரி... அந்தக் காலத்தில் கமல் மாதிரி இருப்பிங்க என எழுதி இருந்தீங்க...16 வயதினிலே கமல் மாதிரியா🤔.? 


(என்ன வச்சு காமெடி கீமடி பண்ணலையே) 


தம்பி சிவப்பு ரோஜாக்கள் கமலஹாசன் மாதிரி இருப்பேன்..

பதிலில் ஈகோ தலை தூக்கி இருந்தது.  


இன்னொரு டவுட் சார் உங்க முன்னாள் காதலி இன்றைய சகோதரி... ஸ்ரீதேவி....மூ ஆ மு... ஸ்ரீதேவியா... அல்லது மூ ஆ  பி... ஸ்ரீதேவியா🤔....  

                           

நீ சொல்றது புரியல அம்பி... புரியிற மாதிரி கேளு... இன்னும் கொஞ்ச நேரத்துல.... ஆத்துக்காரி எந்திரிச்சிருவா.... காபி போட்டுக் கொடுக்கணும். என் அவசரம் எனக்கு.


அதாவது சார்.... மூக்கு ஆபரேஷன் முன் ஸ்ரீதேவியா.... அல்லது மூக்கு ஆபரேஷன் பின் ஸ்ரீதேவியா....😜.... 


டேய் கொய்யால... என் கையிலே மாட்டினா செத்த நீ ...

Comments

Popular posts from this blog

"கோலமாவு கோகிலா".

நன்றி

என்னுள் எழுந்த முதல் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்....