பூக்களே சற்று ஓய்வெடுங்கள்....

 பூக்களே சற்று ஓய்வெடுங்கள்....

💃🏼💃🏼💃🏼💃🏼💃🏼💃🏼


மணப்பெண்ணின் தலையில் நேர் வகிடு எடுத்தது போல்....

அந்த சாலை நேர்த்தியாக இருந்தது.


பெருவிரலால்... ஆக்சிலரேட்டரில் சிறிய அழுத்தம் கண்டவுடன்... சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது புத்தம் புது VENU கார்....


அதை அனாவசியமாக....

ஒற்றை விரலால்....

அதன் ஸ்டேரிங்கை...

ரஜினி ஸ்டைலில்.😁 பிடித்து  கொண்டிருந்தேன்



எனக்கு பயணம் என்றால் ரொம்ப பிடிக்கும்...😍


அதுவும் காரில் பயணம் என்றால் மிகவும் பிடிக்கும்....😁


குடும்பத்தோடு காரில் பயணம் செய்யும்பொழுது மகிழ்ச்சி தருவது....😋


தொடங்கும் இடத்திலிருந்து செல்லும் இடம் வரை....


ஒருவரோடு ஒருவர் அரட்டை அடித்துக் கொண்டு செல்வது....(நோ great escape for anyone )..🤣


 படிக்கும்

மகளுக்கு கல்லூரிக்கு

செல்லத் தேவையில்லை....🙇‍♀


மனைவிக்கு சமைக்கத் தேவையில்லை...😘


எனக்கு ஆபீஸ் போக தேவையில்லை....😉


ஆகையால் பயணங்கள் 

எனக்கு என்றுமே பிடிக்கும் செயல்... 


அதுவும் இம்முறை புத்தம் புதிதாக வாங்கிய VENU  காரில் பயணம்.....


Venu காரில் ... சித் ஸ்ரீராம் குரலில் கசிந்த...


"கண்ணில் மழை...

நெஞ்சில் இடி..

மின்னல் எழ..

அங்கும் இங்கும் நம் நினைவுகள் வந்தாடுதே...."


பாடலை...

 முணுமுணுத்துக் கொண்டே...💃🏼


சாலையில் இருந்து கண்களை வெளிநடப்பு செய்யாமல்...


வழிமேல் விழி வைத்து...


காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தேன்


ஒவ்வொரு பயணமும் எனக்கு ஒரு பாடமாக அமைகிறது....


இம்முறை....

இந்தப் பயணம்...

எனக்கு கற்றுக் கொடுத்த பாடம்...

இதோ உங்களுக்காக...


"டமால்"....


😳🤭🤫..


பயணங்கள் நமக்கு நிறைய கற்றுத் தருகின்றன....👌


நாம் பல நேரங்களில் அந்தப் பாடத்தை கற்றுக்கொள்ள தவறவிடுகிறோம்....


"டமால்"...

என்ற பெரும் சத்தத்தை கேட்டவுடன் என்னை அறியாமலே....

ஆக்சிலேட்டரை இருந்த எனது கால்கள்....

பிரேக் இடம் சென்று தஞ்சம் புகுந்தன...


"சரக்".... என்ற சத்தத்துடன் வண்டியை நிறுத்தினேன்...


நான் எதன் மீதும் மோதவில்லை என்பதை ஊர்ஜிதம் செய்துகொண்டு... சப்தம் வந்த காரணத்தை அறிய...


பின்னிருக்கையில் திரும்பிப்பார்த்தேன்..


என் மகள்...


"ஃபிளாட் டயர் டாடி"... என்று என்னிடம் கூறியதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை....


High way இல் காரை ஓரமாக நிறுத்தினேன்...


பின்புறம் சென்று பார்த்தபோதுதான் தெரிந்தது ....

இடது பக்கம் பின்புறம் உள்ள டயர்... வெடித்து..

ஒரு வாரம் சாப்பிடாமல் இருந்த ஒட்டிய வயிறு போல்... தரையில் சம்மணம் போட்டு அமர்ந்து இருந்தது.🤪



எனக்கு...

 என்ன செய்வதென்று தெரியவில்லை...🤔


மதிய நேரம்...

நல்ல வெயில்...🙇‍♀


பூட்டில் ( டிக்கி) ஸ்டெப்னி இருந்தபோதிலும்,


என் தொப்பை....

 வெடித்த டயரை இடம் மாறுவதற்கு இடம் கொடுக்கவில்லை...🙈


சாலையின் ஓரமாக நின்று கொண்டு போவோர் வருவோரிடம் உதவி கேட்டுக் கொண்டிருந்தேன்...


வேகமாக வந்த டூவீலர் என் அருகில் நின்றது...🚶


உதவி செய்ய ஒருவர் கிடைத்துவிட்டார் என்று மனதில் நினைத்த மாத்திரத்தில்...


"கொஞ்ச நேரத்துக்கு முன்னால் தான் அந்த இடத்தில் ஆக்சிடெண்ட் ஆனது.... அதை கவனிக்காமல் நீங்க வேகமாக ஓட்டிட்டு வந்த போதே நினைச்சேன்.. உங்க கார்  டயர் பஞ்சர் ஆகிவிடும் என்று..  அதே மாதிரி ஆயிருச்சு"

என்றார்.😇


உதவி செய்ய வந்தார் என்று நினைத்தேன்... ஆனால் அறிவுரை சொல்லிட்டு போனார்.

ஆக்சிடென்ட் ஆன இடத்தை கடக்கும்போது காரை மெதுவாக ஓட்டணும்.

வேகமாகப் போகும்போது... சூடேறிய டயரில்... ஏதாவது இரும்பு பட்டால் பஞ்சர் ஆகி விடும்.😳


பக்கத்தில் பஞ்சர் கடை எதுவும் தென்படவில்லை....


வருவோர் போவோரிடம் பஞ்சர் சரிபார்க்கும் கார் மெக்கானிக்கை அனுப்பி வைக்குமாறு கூறினேன். தலையாட்டி விட்டு சென்றார்கள் ஆனால் உதவிக்கு யாரும் வரவில்லை....😓


அரைமணி நேரத்துக்குப் பிறகு....

ஒரு லாரி மெதுவாக என்னை கடந்து சென்றது....🚚


நான் உதவி கேட்காமலேயே லாரி ஓரம்கட்டி நின்றது....


லாரி ஓட்டுனர் இறங்கி வந்தார்...🚶‍♂️


என்ன என்று கேட்டார்....


நடந்ததைக் கூறி விட்டு டயர் வெடித்து போயிருந்ததை காட்டினேன்...🧏‍♂️


அவருடைய உதவியாளர் ( கிளீனரை) கொண்டு டயரை மாற்ற உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டேன்... 🙏🏻


அவருக்கு உதவியாளர் இல்லை ....

தனிய ஓட்டிக் கொண்டு வந்திருந்தார்...

ஒல்லியான தேகம்...

அழுக்கான வேஷ்டி கசங்கிய சட்டை....

நடுத்தர வயது...

தொப்பையில்லா வயிறு...🚶


என்னிடம் சாவியை வாங்கி ... 

டிக்கியை திறந்து.... ஸ்டெப்பிணியை மெதுவாக  எடுத்தார்....


பிறகு தரையில் அமர்ந்து....

வெடித்த டயரை...

கழட்டி எடுத்தார்...


நான் அவருக்கு உதவி செய்ய முன் வந்த போதும்...  

அதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை...


அவர் எதுவும் பேசாமல்...

சிறிது நேரத்தில்....

ஸ்டெப்னி மாற்றிவிட்டு

கார் கீயை என் கையில் திணித்தார்...🤝


அவருக்கு நன்றி கூறி விட்டு... 


பையிலுள்ள பர்சை திறந்து ஒரு நூறு ரூபாயை அவரிடம் நீட்டினேன்.....


அதை வாங்க மறுத்தார்...


காரணத்தை அறியாமல்...

திரும்பவும் 200 ரூபாயை அவரிடம் நீட்டினேன்....


அவர் உதட்டில் ஒரு புன்சிரிப்பு...


"நான் செய்யும் உதவிக்கு பணம் வாங்குவதில்லை"...

என்று அவர் கூறியபோது எனக்கு வியப்பாக இருந்தது...👌


மனதில் சங்கடத்துடன்...

"நீங்கள் யார் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?

என்று மெதுவாக கேட்டேன்....


அவர் சொன்ன பதில் என்னை மெய்சிலிர்க்க வைத்து....


**(என்ன அவருடைய பதில்🤷‍♂...

 ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு....😘)**

                   விளைந்து

தலை சாய்ந்து

நிற்கும்

நெற்கதிர்கள்

மனிதர்களுக்கு

சொல்கின்றன

பணிவாய்

இருப்பவனே

பக்குவமடைந்தவன்!!!!!!!!


ஒருவரிடம் பணிவு இல்லாத போது அந்த இடத்தை தற்பெருமை ஆக்கிரமித்து விடுகிறது. தற்பெருமை உள்ளவனிடம் உப்புக்குக்கூட பணிவை எதிர்பார்க்க முடியாது. ஒன்று இருந்தால் மற்றொன்று விலகிபோய்விடும்.🤷‍♂



மகிழ்ச்சி. .


நம் கதைக்கு வருவோம்....


செய்த உதவிக்கு பணம் கொடுத்ததை மறுத்த அந்த மனிதர்.. 

 இந்த உதவி செய்வதன் நோக்கம் என்ன.. 🤔


நான் அவரிடம் கேட்ட கேள்விக்கு அவர் தந்த பதில் இதோ....


"நான் பக்கத்து கிராமத்தில் விவசாயம் பார்க்கும் விவசாயி...


என் நண்பர்...

லாரி டிரைவர்.... உடம்பு சரியில்லாததால்,.என்னை உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டார்...

ஆகையால் நான் லாரி ஓட்டிக்கொண்டு வந்தேன். சுடும் மதிய வெயிலில் குடும்பத்தோடு அல்லல் படுகிறீர்கள் என்ற எண்ணத்தில் உங்களுக்கு உதவி செய்தேன்.....

இந்த வாய்ப்புக் கொடுத்ததற்கு உங்களுக்கும் , அந்த இறைவனுக்கும் நன்றி" என்று கூறி... நான் யார் என்று கேட்டு அறியாமலேயே சென்றுவிட்டார்.


இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டே...

வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க....

சிறிது தூரம் தள்ளி இருந்த மர நிழலில் காரை நிறுத்தினேன்....


வெள்ளையும் சொள்ளையுமாய்....

ஆடை உடுத்தி இருந்த ஒரு மனிதர்..... என் அருகில் வந்து நின்றார்.


நான் அவரை கண்டு கொள்ளவில்லை...


ஆனால் அவரோ என்னிடம் பேச முற்படுவது போல் தெரிந்தது....


நான் அவர் கண்களை சந்தித்த ஒரே நிமிடத்தில்.... ஒரு சிறு புன்னகை பூத்தார்.


"சார்....

முருகன் ஐயா உங்களுடன் என்ன பேசிக்கொண்டிருந்தார்.

ஏதாவது பிரச்சனையா?"


என்று வழக்கத்துக்கு மாறாக....தாழ்ந்த குரலில் பேசினார்.


நான் நடந்ததை அவரிடம் கூறினேன்...


"அவர் செய்த உதவிக்கு நான் சொல்லும் நன்றியைக் கூட காதில் வாங்காமல்.... பணத்தையும் வாங்கிக் கொள்ளாமல்... சென்றுவிட்டார்" என்று அவரிடம் கூறினேன்.


இம்முறை அவருடைய புன்முறுவல்.... சிரிப்பாக மாறியது.


"முருகன் ஐயா....

15 லாரிக்கு ஓனர்....

பக்கத்து ஊரில் பல ஏக்கரில் விவசாயம் செய்கிறார்....

தனக்கு கீழ் வேலை செய்யும் லாரி டிரைவருக்கு திடீரென்று உடம்பு சரியில்லாமல் போகவே அந்த லாரியை இன்றைக்கு ஓட்டிக் கொண்டு வந்திருக்கிறார்....

மற்றவர்க்கு உதவி செய்வதில் அவருக்கு நிகர் அவரே...."


அவர் சொல்லச் சொல்ல.... தொலைவில்  அவர் ஓட்டிச் சென்ற லாரி  சிறியதாக தெரிந்தாலும்... என் மனதில் அவர் உருவம் விஸ்வரூபமாக தெரிந்தது....


"எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து ."



பணிவு என்பது எல்லோருக்கும் நன்மை தரும்; பணக்காரர்களிடத்தில்  அது இருந்தால், அவர்களுக்கு மேலும் செல்வம் கிடைததது போல இருக்கும்.


எந்த நிலையிலும் மாறுபாடமல் இருப்பவனின் பணிவு, மலையை விடப் பெரியது, உயர்வானது.🙏🏻


அவசர அவசரமாக இந்த பதிவை நான் இங்கே பதிவு செய்வதில் ஒரு நோக்கம் இருக்கிறது....


நான் இதற்கு முன் எழுதிய... 

மழைக்கு ஒதுங்கிய இடத்தில்... என்ற பதிப்பை படித்துவிட்டு என்னுடைய வாசகி ஒருவர்....


"உங்கள் முக்திநாத் பயணக் கட்டுரையை படித்தேன்... மகிழ்ந்தேன்.

அதனோடு சேர்ந்து நீங்கள் எழுதிய "மழைக்கு ஒதுங்கிய இடத்தில் நிகழ்வையும் படித்தேன்.

நாமும் அந்த பெரியவர் போல் மாற முடியுமா? என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது. நன்றி." என்று என்னிடம் கூறினார்.


அன்று முழுவதும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.


என்னுடைய எழுத்து ஒருவருடைய மனதில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்ற எண்ணம் என்னை சந்தோஷப்படுத்தியது. 


ஆகையால் இரண்டாவது நிகழ்வாக...

மேற்கூறிய பயண அனுபவத்தை உங்களிடம் பரிமாறிக் கொண்டேன்.


"பதவி உயரும் போது பணிவு வர வேண்டும் துணிவும் வரவேண்டும் தோழா...


பாதை தவறாமல் பண்பு குறையாமல்... பழக வேண்டும் தோழா..."


பாடலைக் கேட்டுக் கொண்டே மீதி பயணத்தை தொடர்ந்தேன்.


*பூக்களே சற்று ஓய்வெடுங்கள்....

உங்களை விட உயர்வானவர்...

அவர் வந்துவிட்டார்...*🏃


💃🏼💃🏼💃🏼💃🏼💃🏼💃🏼

Comments

Popular posts from this blog

"கோலமாவு கோகிலா".

நன்றி

என்னுள் எழுந்த முதல் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்....