பயணம் and பொங்கல்

பயணம் and  பொங்கல்

தொடர்-1


என் மனதுக்கு இனிய 😍 நண்பர்களே...🙏🏻 வெகு நாட்களுக்குப் பிறகு இதோ உங்களிடம் அளவளாகா வந்திருக்கிறேன்....😊. எனது அம்மாவின் மறைவுக்குப் பிறகு😭... மதுரைக்கு எனது முதலாவது பயணம்.... அம்மாவின் 45 வது நாள் காரியத்திற்காக...🙏🏻. எனது பயணத்தின் நேரலை உங்கள் கவனத்திற்கு... பயணங்கள் என்பது ஒரு நிகழ்வு.... அந்த நிகழ்வு சிறு சிறு சம்பவங்கள்... நல்லதும் கெட்டதும் நிறைந்தது... அந்த சிறுசிறு நிகழ்வினை உள்வாங்கி... அது நமக்குள் உண்டாக்கிய பாதிப்புகளை... நிகழ்வுகளை... எழுத்துக்களைக் கொண்டு ஆவணமாக்கி.... இதோ அவை உங்களுக்காக....🤘 "காரோன" காலத்தில்... ஒரு மாநிலத்தில்  இருந்து மற்றொரு மாநிலத்துக்குச் செல்ல... E பாஸ் அவசியமாகிறது. May 29 தேதி.... மதுரை பயணம் நிச்சயம் ஆகிய வுடன்.....28 ஆம் தேதி E pass  ஆன்லைனில் விண்ணப்பித்தேன். என் முயற்சி பலமுறை மறுதலிக்கப் பட்டது... காரணம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்🤘. முயற்சி திருவினையாக்கும்... என்பதை மனதில் கொண்டு... பலமுறை பல காரணங்கள் முறையிட்டு.... கடைசியில் E பாஸ் வாங்குவதில் வெற்றி பெற்றேன். மதுரை கார்ப்பரேஷனுக்கு என் நன்றி உரித்தாகுக... பயணத்திற்கு முன் ஏற்பாடாக..... எனது ஆருயிர் நண்பரை...(KVU 100)... ஆசை தீர குளிப்பாட்டினேன்... அவரும் அதையே விரும்பினார்... வெகுநாட்கள் உடை அணியாமல் வெயிலில் நின்றதால் ஏற்பட்ட அலுப்பு தீர.... நன்றாக ஒரு குற்றாலக் குளியல்... பிறகு அவருக்கு வயிறார சாப்பாடு....(full-tank பெட்ரோல்).... பிறகு அவருடைய காலுக்கு வழு ஏற்றுவதற்காக நைட்ரஜன் விட்டமின் (டயிருக்கு நைட்ரஜன் காற்று😁).... இம்முறை ஞாபகமாக... அவருடைய சின்ன வீட்டையும்🤔 (ஸ்டெப்னியை சொன்னேன்) கவனித்து... நைட்ரஜன் நிரப்பிக் கொண்டேன். சிங்கம்டா...💪😺. என்று கூறிக்கொண்டு... சின்னக் கண் சிமிட்டலோடு..😉... என்னை பார்த்து புன்முறுவல் பூத்தார். அந்தப் புன்முறுவல்....😊 அவர் அந்த (தல நான் ரெடி நீ ரெடியா?)  பயணத்துக்குத் தயார் என்பதை அடையாளப்படுத்தியது... 28 ஆம் தேதி இரவு.... நன்றாக உறங்கி🥱 காலையில் காலையில் எழுந்து பயணத்தைத் தொடர வேண்டும் என்ற எண்ணத்தோடு...(கைப்புள்ள... காலை நீட்டி விட்டத்தை பார்த்து படுத்துடு) சுகமான ஒரு உறக்கம். காலையில் எழுந்தவுடன் பயணத்தை தொடர்கிறேன்...🤣🤣🤣🤣🤣🤣🤣.


தொடர்-2


தொடரும் பயணம்....              💃💃💃💃💃💃சூரியக் கதிர்கள் பூமியை வந்தடையும் முன்... துயில் எழுந்தேன்...🥱 காலை மணி 5... கடிகாரம் காட்டியது... கிடைத்த செய்தியை மூளைக்கு அனுப்பியது கண்.... இருள் போர்த்திய பூமி ஜன்னல் வழியே தெரிந்தது.... சோம்பல் முறித்துக் கொண்டே படுக்கையை விட்டு எழுவதற்கு முற்பட்டேன்...😴 நித்திரை எனும் என் காதலி என்னை விட்டு அகல மறுத்தாள்...😍 நித்திரை காதலியை... இடக்கையால் பலமாக புறந்தள்ளிவிட்டு எழுந்தேன்....😉 காலைக்கடன்.... பேக்கிங் அண்ட் லோடிங்க்... என்ற பல "இத்தியாதி களை"... முடித்துக்கொண்டு... வாகனத்தில் அமரும் போது மணி 7.15 am. அருகில் துணைவியார்👩‍🌾 அமர... சில்லிட்ட          ஏசியை ஓடவிட்டு...          வாகனத்தின் வேகத்தை கலந்து யோசிக்கும் பொழுது... எனது KUV100... அசோக் பில்லர் வளைவினை... ரஜினி ஸ்டைலில் கடந்தது. கார்🚗 பயணம் புதிதல்ல.... ஆனால் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பயணிகளுடன்... பயணிக்கும் பொழுது ....கிடைக்கும் அனுபவங்கள் வெவ்வேறு...😜 நண்பர்களுடன் சென்றார் சிரிப்பலைகள்..😅.(அலப்பறைகள்)...  மனைவியோடு சொல்லும்போது எனக்குத் துணையாய் வருவது... சித் ஸ்ரீராம் சினிமா பாடல்கள்....

"என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்".... கண்களின் கவனம் சாலையில்... காதுகளின் கவனம் பாடல்லில்.... 100km வேகத்தில் சென்றாலும்... என்னை சிந்தாமல் சிதறாமல் சுமந்து செல்லும் எனது வாகனம்...8.30 am மணிக்கு என்னுடைய உத்தரவுக்கு எதிர்பாராமல்... வாகனம் பாலாஜி பவன் முன்னே நின்றது. Corona தயவால்😔 ஒன்லி பார்சல்.... வயிற்றிலிருந்து உத்தரவு வந்தது... "இரண்டு இட்லி ஒரு வடை (இரண்டு செட்.. ) 

ஒரு  செட் பூரி கிழங்கு.... ஒரு வெண் பொங்கல்" (இருவருக்கும் சேர்த்து)....

Rs.199...card உரச பட்டவுடன்... பண்டம் கைமாறியது. சாலை ஓரத்தில் மரநிழலில் அமர்ந்து உண்ணுவது ஒரு தனி சந்தோஷம்.அந்த சந்தோசத்தை குறைக்கும் வகையில் நடந்தது என்ன?🤔😳.

தொடர்-3

நிழலை தேடி... தொடரும் பயணம்... 💃💃💃💃💃💃 காலின்  பெருவிரலால் ஆக்ஸிலரேட்டரில் கொடுத்த அழுத்தத்தினால்.... சிறுத்தை போல் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது வாகனம்...🚕 அவ்வப்போது ஸ்பீடா மீட்டரை கவனிக்கும் போது...😒 வேகம் 120 km தாண்டி கொண்டிருந்தாலும் நான் வேகத்தை குறைக்கவில்லை... கொக்கரக்கோ கொக்கரக்கோ"🐓... சேவல் கூவியது... என்னுடைய மொபைலில் இருந்து வந்த caller tune...😁 அண்ணனிடம் இருந்து phone...🤓 ப்ளூடூத் ஆன் செய்து கொண்டேன்.... கிஷோர் எங்கே வந்துகிட்டு இருக்கே?"... அவர் குரலில் ஒரு அவசரம் தெரிந்தது. மேல்மருவத்தூர் தாண்டி....ஒரு பத்து கிலோமீட்டர் வந்திருக்கேன்... மதியம் 3 மணிக்குள் வீடு வந்து சேர்ந்தது விடுவேன்." என்று பதிலளித்து விட்டு... என்னுடைய கவனத்தை... சாலையோரம் வளர்ந்திருந்த மரங்களை 🌲🌳🌴மீது படர ஆரம்பித்தேன். மரம்" என்பது...மூன்று எழுத்துக்கள் கொண்ட சொல் மட்டும் இல்லை.... அதற்கும் மேல்...👀🙏🏻 தவம்செய்து இருந்தால்தான் ஒரு ஒரு மரத்தின் சினேகம்...😍 அருகாமை கிடைக்கும்... மரத்தின் நிழலில் தஞ்சம் அடையும் போது.... ஒரு தாய்🧚🏽‍♀️ மடியின்  சுகத்தை அனுபவிக்கலாம். என்னுடைய பள்ளிப் பருவத்தில் நான் வாழ்ந்த இடம் பசுமலை"... எனது வீட்டுக்கு 🏫 எதிரே... அரசமரமும் வேம்பு மரமும் பிணைந்து... இணைந்து வளர்ந்திருக்கும்.🤘 அதன் வேர்களில் பிள்ளையார் உறங்கிக் கொண்டிருப்பார். என்னுடைய எல்லா வேண்டுதல்களையும் அவர் நிறைவேற்றிக்கிறார்.... அந்த மரத்தின் அருகில்🌳 செல்லும்போதெல்லாம்... மனதுக்கு இதமான ஒரு சுகம் கிடைக்கும்... தாய் மகனை மடியில் கிடத்தி தலையை🥱 கோதி விடும் சுகம்... விடுமுறை நாட்களில்... விளையாட நண்பர்கள் கிடைக்காத பொழுது.... அந்த மரத்தில் ஏறி... சாய்ந்து வளர்ந்திருக்கும் தடித்த மரக்கிளைகளில்... கால நேரம் தெரியாமல்... உறங்கிய அனுபவம் எனக்கு உண்டு. 😊        சிறிது நேரத்துக்குள்... நான் வேண்டிய வண்ணம்... ஒரு (புளியமர) தேவதை இரண்டு கைகளையும் அகல விரித்து என்னை வரவேற்றாள். என்னுடைய உத்தரவுக்காக காத்திராமல்... என்னுடைய KUV100... சாலையோரத்தில் பத்திரமாக தன்னை கிடத்திக் கொண்டது. பசி வயிற்றைக் கிள்ள...கட்டிக் கொண்டு வந்த பார்சலை மெதுவாக திறக்க ஆரம்பித்தாள் துணைவியார். அப்பொழுதுதான் தெரிந்தது "வெண்பொங்கல்" மிஸ்ஸிங்...😭.... வெண்பொங்கல் இல்லாத பிரேக் பாஸ்ட்டா..😳... பார்சல் கொடுத்த ஹோட்டல் காரர் மீது எனக்கு கோபம்...😡... எனது கோபம் அடங்கும் முன்..

சாப்பிட ஏதாவது குடுங்க ஐயா... கார் ஜன்னல் ஓரத்தில் ஒரு குரல். உடையில் வறட்சி இருந்தாலும் உடலில் வறட்சி மாறாத....45 வயது தக்க கையேந்தும் மனிதன்...

எனக்கே பத்தல... இவன் வேற"... என்ற என் மன ஓட்டத்தை அறிந்த மனைவி...

அவனுக்கு ஒரு  100 ரூபா குடுங்க... ஏதாவது வாங்கி சாப்பிட்டு போகட்டும்"... என்று ரெக்கமெண்ட் செய்யும் போது எனக்கு கோபம் தான் வந்தது.  

   நான் இந்த ஊர்க்காரன் தாங்க.... வேலை ஏதாவது கிடைக்குமான்னு  நடந்து போய்கிட்டு இருக்கேன்... பசிக்குது... காலையிலிருந்து இன்னும் சாப்பிடல"

தளர்ந்த குரலில் பேசினார். சாப்பிட்ட கையை கழுவிவிட்டு...  ஈவதில்  என்னை விட என் மனைவி உயர்ந்து நிற்கிறாள் என்று அவளை மனதில் பாராட்டிக் கொண்டு., அவனுக்கு ஒரு ஐம்பது ரூபாயை கொடுத்தேன். ஹோட்டல் காரன் மீது இன்னும் எனக்கு கோபம் தணியவில்லை... பில்லை தேடினேன்... கிடைத்தது... அதில் உள்ள  தொலைபேசி நம்பருக்கு போன் செய்தேன். இரண்டாவது முறை முயற்சித்தபோது மறுமுனை பேசியது..

பாலாஜி பவன்..என்ன வேணும் சொல்லுங்க".. பணிவான குரல்.  இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உன்கிட்ட நான் டிபன் வாங்கினேன்... பில்லில் வெண் பொங்கலுக்கு 53 சார்ஜ் பண்ணிட்டே... ஆனா வெண்பொங்கல் கொடுக்கலை..." என்று கோபத்தின் உச்சியில் கத்தினேன். சாரி சார்".. குரலில் கொஞ்சம் வருத்தம் தெரிந்தது. பசியை விட ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற உணர்ச்சி மேலோங்கி இருந்தது.

 ஒழுங்கா 53 ரூபாய் என்னுடைய பேங்க் அக்கவுண்ட்ல கிரெடிட் குடுத்துரு... வாட்ஸ் அப்பில் அக்கவுண்ட் நம்பர்..IFSC CODE டீடெயில்ஸ் அனுப்புறேன்... என்று நான் கூறியவுடன் மறுமுனை அதை ஆமோதித்தது. சிறிது வினாடிகளில்... எனது வங்கிக் கணக்கில் 53 ரூபாய் வரவு வந்ததை... எனது மொபைல் செய்தி யாக கூறியது.😉.... அடுத்த நிகழ்வு... இன்னும் சில தூரம் பயணித்த பிறகு .😍

Comments

Popular posts from this blog

"கோலமாவு கோகிலா".

நன்றி

என்னுள் எழுந்த முதல் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்....