மழைக்கு ஒதுங்கிய இடத்தில்....
மழைக்கு ஒதுங்கிய இடத்தில்....
தொடர்-1
அது ஒரு மழைக்காலம்..🐧⛅.. கள்ளுண்ட கிழவன்,🎅👨🦯 கால்பரப்பி தள்ளாடி நடப்பது போல், வான் மேகங்கள், அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தது...குடை இல்லாமல் நான் வெளியே... மதுரை ரயில் ஆர் நகர் இரண்டாவது தெருவில் நடந்து கொண்டிருந்தேன். அன்று காலையில்தான் புனே நகரில் இருந்து ரயிலில் வந்திருந்ததால் எனக்கு களைப்பாக இருந்தது.😥😓😴🥱 ரயில் பயணங்கள், விமானப் பயணங்களை போல், வசதியாக இருப்பதில்லை. ஆனால் அது எனக்கு வழக்கமான ஒன்றாகும். பணி நிமித்தமாக அங்கு (புனே) நான்கு வருடங்கள் இருந்தபடியால்.... இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சென்னை, மதுரை வந்து போவது வழக்கமாகி விட்டது. அன்றைக்கு மதுரைக்கு விஜயம் செய்ததும் ஒரு காரணமாகத்தான். பொருளாதார நெருக்கடியில்... அசோக் நகர் (மதுரை) முதல் தெருவில் ஒரு மனை வாங்கி அதில் வீடு கட்டிக் கொண்டிருந்தேன். அதன் மேற்பார்வைக்காக தான் இந்த விசிட்.🤨
"என் மேல் விழுந்த மழைத்துளியே... இத்தனை நாளாய் எங்கிருந்தாய்..." காதலனின் கன்னத்தில் விழுந்த,காதலியின் முதல் முத்தத்தை போல்... என் கன்னத்தில் விழுந்த முதல் மழைத்துளி... கவிஞரின் இந்த வரியை நினைவூட்டியது. எந்த ஒரு இளைஞனுக்கும்👨⚕️அந்த முதல் முத்தத்தை மறக்க முடிவதே இல்லை. நான் நடையை துரிதப்படுத்தினேன்🏃♂️🏃♂️🏃♂️. மழை கொட்டும் முன் நான் வந்த வேலையை முடித்தாக வேண்டும். மழை மேகம், என்னை விட வேகமாக செயல்பட்டது. முன் அறிவிப்பின்றி வந்த விருந்தாளியை போல்... மழை .... மேற்கூரை கட்டி முடிக்காத என் வீட்டில் ,கொட்டி தீர்த்தது. தேடிய உடனே கிடைத்த
முதல் புகலிடம், அருகில் இருந்த குடிசை. முன்னறிவிப்பின்றி உள்ளே செல்லலாமா.... வேண்டாமா ....🤔 மனதில் ஒரு பட்டிமன்றம் ஓடியது...
"யாரது?....🧐 உள்ளேயிருந்து ஒரு அன்பான குரல்....
"நான் தாங்க இந்த பில்டிங் ஓனர்.... Construction பார்க்க வந்தேன்.... மழை வந்துவிட்டது... அதான்..."😟பதில் சொல்லி முடிக்கும் முன் அந்த அன்பான குரல் என்னை உள்ளே அழைத்தது..... மழையில் இருந்து தப்பிக்க வேறு வழியின்றி உள்ளே சென்றேன். அங்கே.......😒
தொடர்-2
மழை..... தனிமை.... குடிசை.... நான்.....😉🤭. (உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு இருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல... நான் ரொம்ப நல்லவன்...(நம்பி விட்டோம் என்று நீங்கள் கோரசாக கூறுவது என் காதில் விழுகிறது🤣🤣🤣🤣). அங்கே குடிசைக்குள்... கும்மிருட்டு குத்தகைக்கு எடுத்திருந்தது. என்னால் எதையும் தெளிவாக பார்க்க முடியவில்லை. விரகு அடுப்பு எரிந்து கொண்டிருந்தது. அதன் வெளிச்சத்தில் என் கண்ணில் பட்டது சில பாத்திரங்கள் ஆங்காங்கே.... மழை தண்ணீரை குடிநீராக மாற்றுவாதற்கு ஏதுவாக... கூரை தடுப்பையும் மீறி வந்து கொண்டிருந்த மழை நீரை நிரப்பிக் கொண்டிருந்தது. மிளகு ரசம் அடுப்பில் கொதித்துக் கொண்டே இருப்பது என்னுடைய நாசி👃 எனக்கு காட்டிக் கொடுத்தது. குறுக்கே கட்டப்பட்ட கயிற்றில் சில துணிமணிகள் காற்றில் ஆடிக் கொண்டிருந்தன. கிடைத்த வெளிச்சத்தில்...👀 குரலுக்குச் சொந்தக்காரர் தரிசனம் கிடைக்கவில்லை. சில நிமிடங்கள் மௌனமாக கரைந்த பிறகு என் கண்களுக்கு ஒன்றும் தெரியவில்லை என்றேன். இருட்டு அவருக்கு பழகிய விஷயம் போல.... "இதோ" என்றார். நம் கதையின் ஹீரோவை பார்க்கும் ஆர்வத்தில் நான் ஆயத்தமானேன்.🧐 சர்க்கார் படத்தில் முருகதாஸ்... அப்படத்தின் நாயகனான விஜய்யை அறிமுகப்படுத்தியது போல் முதலில் தீக்குச்சி வெளிச்சத்தில் எனக்கு தெரிந்தது அவருடைய கைகள்.... பிறகு மெழுகுவர்த்தி.... நெருப்பை ஊதி அணைக்க எத்தனிக்கும் போது அவருடைய முகம் எனக்கு தெரிந்தது. விஜய் முகத்தை திரையில் கண்ட ரசிகர்களின் கைத்தட்டல் போல்... வானத்தில் இடி இடித்தது. அவர் உதட்டு இதழ்களில் என்னை பார்த்து ஒரு புன்சிரிப்பு.😊 ஒரு மாதம் குறையாமல் முகச்சவரம் கண்டிராத முகம்🎅... கனிவான கண்கள் ஒரு நல்ல மனிதரை சந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு என்னுடைய ஆறாம் அறிவு எனக்கு உணர்த்தியது. மௌனத்தை கலைக்க இம்முறை நான் முந்திக் கொண்டேன். "நீங்க .....என்ன வேலை செய்றீங்க?"..... கேட்கலாமா வேண்டாமா என்று ஒரு தயக்கத்தோடு.... அவரிடம் கேட்டேன்.
"கடவுளுக்கு நன்றி... இந்த வயதிலும் எனக்கு ஒரு வேலை கொடுத்திருக்கிறார் கடவுள்......வாட்ச்மேன் வேலை"
இருகரம் கூப்பி,🙏🏻 கும்பிட்டு அவர் கூறிய விதம் ,என்னை பிரமிக்க வைத்தது.
"தனியாகவா இருக்கிறீர்கள்?".😒😒 உங்கள் மனைவி, குழந்தைகள் எங்கே என்ற கேள்வி என் முகத்தில் தோன்றி மறைந்தது. என் மனதில் தோன்றிய கேள்வியை புரிந்து கொண்ட அவர், மனைவி சில வருடங்களுக்கு முன், காச நோயினால் பாதிக்கப்பட்டு, இறந்துவிட்டாள் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொண்டார். ஆனால் சில நொடிகளில்.... அவர் அந்த வருத்தத்தை மறைத்துக் கொண்டு.... "ஆனால் என் மகன்👨⚕️ என்னை நன்றாகப் பார்த்துக் கொள்கிறான். பக்கத்தில் தான் குடும்பத்தோடு வசிக்கிறான்... ஒரு நல்ல மகனை எனக்குக் கொடுத்த அந்த கடவுளுக்கு நன்றி"என்று முடித்தார்.
ஒவ்வொரு சின்ன விஷயத்திற்கும், அவர் கடவுளுக்கு நன்றி கூறியதை கேட்க எனக்கு விசித்திரமாக இருந்தது. ஐந்து நிமிடத்துக்குள்.....என் கண்களுக்கு...... இருட்டு பழகிப் போய் இருந்த காரணத்தினால்.. அவர் முகத்தை உன்னிப்பாக பார்க்க முடிந்தது. அவர் கண்களில் ஒன்று.... பூ விழுந்த கண் போல் தோன்றியது. நான் பார்த்த பார்வையில் என்னை புரிந்து கொண்ட அவர்...
"எனக்கு வலது கண் தெரியாது" என்று... முகத்தில் ஒரு சலனமும் இல்லாமல் கூறினார்.
நான் அவரை ஆச்சரியத்துடன் பார்க்கும் பொழுது "கடவுளுக்கு நன்றி... என்னுடைய இடது கண் நன்றாக தெரியும்".. என்று மகிழ்ச்சியுடன் கூறினார். வாழ்க்கையில் இதுவரை இப்படிப்பட்ட மனிதரை நான் சந்தித்ததில்லை. இவருடைய சொல்லும் செயலும் என்னை மௌனம் ஆக்கியது.
"சூடாக மிளகு ரசம் சாப்பிடுகிறீர்களா? மழைக்கு நன்றாக இருக்கும்"..... இந்த நிலையிலும் அவருடைய விருந்தோம்பல் எனக்கு பிடித்திருந்தது. என்னுடைய பதிலை எதிர்பார்க்காமல்...ஒரு பேப்பர் டம்ளர் நிறைய மிளகு ரசத்தை என்னிடம் நீட்டினார். அதனுடைய சூட்டையும், நறுமணத்தையும், ரசித்துக்கொண்டே ...
"மூன்று நேரமும் நீங்களே சமைத்து கொள்கிறீர்களா?"என்று கேட்டேன்.
இம்முறை அவர் புன்னகைத்தது என் காதில் சற்று சத்தமாகவே கேட்டது.
"நான் ஒரு நாளைக்கு ஒரு வேளை தான் சாப்பிடுவேன் . அந்த சாப்பாட்டை கொடுத்ததற்காக கடவுளுக்கு நன்றி".... எந்தவித வருத்தமும்... ஏமாற்றமும்.... இல்லாமல் அவரிடம் இருந்து பதில் வந்தது. மிளகு ரசத்தின் ருசி என் நாக்கு ரசித்தது...ஆனால் "நெருஞ்சி முள்" என் இதயத்தை தைத்தது.
ஒன்றுமே இல்லாமல் இருக்கின்ற ஒருவரால் எப்படி நிமிடத்திற்கு நிமிடம் கடவுளுக்கு நன்றி சொல்ல முடிகிறது. எல்லாம் இருந்தும்.. நாம் கடவுளுக்கு நன்றி சொல்ல மறந்து.. மேலும் மேலும்... அவரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
இறைவன் மக்களுக்கு தேவையானதை எப்பொழுதுமே கொடுத்திருக்கிறான்..... ஆனால் அவன் பேராசைக்கு என்றுமே கொடுத்ததில்லை. ......மழை நின்றிருந்தது.... அவருக்கு நன்றி கூறிவிட்டு.... குடிசையை விட்டு வெளியே வந்தேன்.
அருகிலிருந்த கோயிலிலிருந்து மணி ஓசை கேட்டது.... கூடவே பாடலும் கேட்டது....
"குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா".... எனக்கு இந்தப் பாடலை அந்த முதியவர் பாடியது போல கேட்டது காதில்.....
Praise the Lord.... இந்த முதியவரை சந்திக்க வாய்ப்பளித்ததற்கு கடவுளுக்கு நன்றி கூறி விட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். அடுத்த வாரம்..... அதே இடத்திற்கு நான் சென்ற பொழுது ......இன்னும் சில ஆச்சர்யங்கள் எனக்கு காத்திருந்தது. காத்திருங்கள்.... பிரைஸ் தி லார்ட்...🙏
தொடர்-3
மழைக்கு ஒதுங்கிய இடத்தில் கதை தொடர்கிறது.... 💃💃💃💃💃💃பிரைஸ் தி லார்ட்.🙏🏻 மதுரைக்கு வந்து ஒரு வாரம் ..... இமை மூடித் திறப்பதற்குள்.... முடிந்துவிட்டிருந்தது. ஆனால்.... அந்த முதியவரின் குரல் என் காதில்👂 ஒலித்துக் கொண்டே இருந்தது.... அவர் நினைவு வரும் போதெல்லாம் நான் மௌனமானேன்..😌.. தனித்திருத்தல்😞 விழித்திருத்தல்😟 பசித்திருத்தல்.....😣 எனக்குப் பிடித்த விஷயம் ஆகிவிட்டது... அடுத்த நேர உணவுக்கு உத்தரவாதம் இல்லாதபோதிலும்..... அன்பான மனைவியை இழந்த போதிலும்.... கண்பார்வையை இழந்த போதிலும்... வாழ்க்கையில் ஒருவர் எப்படி கடவுளுக்கு நன்றி கூற முடிகிறது.🤭🤔🤥 அவரை கண்டு பேசிய நாள் முதல் என்னில் ஒரு மாற்றத்தை உணர்ந்தேன்..🙄 எனக்குக் கிடைத்துள்ள ஒவ்வொரு விஷயத்திற்காகவும் கடவுளுக்கு நன்றி சொல்ல ஆரம்பித்தேன்.🤘 அந்த செய்கை என் மனதில் ஒரு அமைதியை தந்தது.... அந்த அமைதி ... எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. இந்த அருமையான படிப்பினை தந்த அந்த முதியவரை திரும்பவும் ஒரு தடவை சந்திக்க மனம் அலைபாய்ந்தது. எனக்குத் தெரியாமலே என் கால்கள் அவர் இருந்த இடத்தை நோக்கி நடக்கத் தொடங்கியது.
கண்கள் அவரை காண பரபரத்தன.... ஆனால் அங்கே குடிசை காணவில்லை.... என்ன ஆச்சரியம் ...ஒரே வாரத்திற்குள் குடிசை இருந்த தடமே தெரியவில்லையே... என்ன செய்வதென்று தெரியாமல் ஆச்சரியத்தோடு அங்கே நின்றிருந்தேன். மனதில் ஒரு சின்ன சந்தேகம்.... இதுவும் நான் கண்ட கனவா...🥴 நிச்சயமாக அப்படி இருக்க வாய்ப்பில்லை. பிறகு அந்த குடிசை எங்கே? நான் சந்தித்த அந்த முதியவர் எங்கே?... என்னுள்ளே இன்னும் பல கேள்விகள்..... செய்வதறியாது திகைத்து நின்றிருந்தேன்.
"என்ன சார் வேணும்? யாரைத் தேடுகிறீர்கள்?" .... தெருக்களை சுத்தம் செய்யும் தொழிலாளி👲 என்னிடம் கேட்டார். நான் மிகவும் தயக்கத்தோடு "ஒரு வாரத்துக்கு முன்னே... இங்கே இருந்த குடிசையில்... இருந்த முதியவரை பார்க்க வந்தேன்"😎 என்று குரல் தழுதழுக்க அவரிடம் கேட்டேன். அந்தக் கேள்விக்கு.... எனக்கு கிடைத்த பதில் என்னை அதிர வைத்தது.🙆♂️ ஆம்.... அவர் இறந்து விட்டிருந்தார். அவரை சந்தித்த அடுத்த நாளே... ஏன் இந்த கொடுமை இறைவா... என் கண்ணில் கண்ணீர் துளி கண்ட அந்தத் தொழிலாளி..
."அவர் உங்களுக்கு என்ன உறவு..? என்று கேட்ட கேள்விக்கு என்னால் பதில் சொல்ல தெரியவில்லை.
"அவர் எனக்கு குரு" என்று என்னுடைய வாய் என்னை அறியாமலேயே முணுமுணுத்தது.
நான் சொன்ன பதிலில் அவர் திருப்தி அடையாமல் ,என் அருகில் மெதுவாக வந்தார்.அவர் கண்களிலும் கண்ணீர். எனக்கு ஒன்றும் புரியவில்லை....
"நீங்க ஏங்க அழுகிறீர்கள்?" தயக்கத்தோடு கேட்டேன்.
"அவர் எனக்கு கடவுள் மாதிரி...." அவரிடமிருந்து இருந்து வந்த பதில் ... என்னை மேலும் அவரிடம் கேள்வி கேட்க வைத்தது.
"கடவுள் மாதிரின்னா?" என் பார்வையாலே அவரைக் கேட்டேன்.
"ஐயா.... என்னுடைய குழந்தையை அவர்தான் படிக்கவைக்கிறார்...." அவரிடம் வந்த பதில் என்னை பிரமிக்க வைத்தது. ஏழ்மையிலும் தானம்.... கல்விதானம்.
"அவருக்கு ஒரு பையன் இருக்கிறதா ..என்கிட்டே சொன்னாரே...! "... என்னுடைய கேள்விக்கு அவர் தயக்கத்தோடு பதில் சொன்னார்.
" அது அவரது சொந்தப் பையன் இல்லைங்க... அவர் எடுத்து வளர்த்த பையன்.... அவனுக்கு காசு வேணும்கற போதெல்லாம்..... இவர்கிட்ட வந்து.... இவர் வச்சிருக்க காசு... எல்லாத்தையும் கொண்டு போய்விடுவான்... அவன் பொண்டாட்டியும் ... இந்தப் பெரியவரை வீட்டில சேர்க்கவில்லை. அந்த பெரியவர்... அவருடைய மனைவி இறந்ததிலிருந்து தனியாகவே வாழ்ந்தார். கடைசி வரைக்கும் அவரால் முடிஞ்சவரைக்கும் தான தர்மம் செய்து சந்தோஷமாக வாழ்ந்தார்... எனக்கு அவரு ஒரு கடவுள்"
பெரியவருக்காக கொண்டு வந்த பழங்களை.... அந்த தொழிலாளியிடம் கொடுத்தேன். என்னை அறியாமலேயே ... "எனக்கும் அவர் கடவுள்" என்று அவரிடம் கூறிக்கொண்டே
வீட்டுக்கு திரும்பினேன்.
அவரிடம் நான் கற்றுக்கொண்ட பாடம்....
"இருக்கின்ற வரையில் இறைவன் பெயரைச் சொல்லி விட்டு இறந்து போ.... மற்றவர்களுக்கு உதவியாக வாழக் கற்றுக்கொள்...... அமைதியாக இருப்பதற்கு பழக்கப் படுத்திக் கொள்....
இந்த உடம்பு , எந்த கணம் வேண்டுமானாலும் செத்துப் போய்விடும் என்று தெரிந்து கொண்டு விட்டால்.... எவ்வளவு குறைவாக உடுத்த முடியுமோ .... அவ்வளவு குறைவாக உடுத்துவாய் ... பசி போவதற்கு எவ்வளவு உண்ண வேண்டுமோ அது மட்டுமே உண்ணுவாய்.... வரும் நாட்கள் உயிர் வாழ்வதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ... அது மட்டும் செய்வாய் . இதன்படி வாழ்ந்தால்... பிறரை இழிவு படுத்துதல் ..... பிறர் பொருளை அபகரித்தல் என்கிற அபத்தமான விஷயங்கள் போய்விடும்.
வாசனை பூசிக்கொண்டும், உடைகளை மினிக்கி கொண்டும்,
நகைகளில் தன்னை அலங்கரித்துக் கொண்டும்,தன்னுடைய கௌரவத்தை தன் உடம்பால் வெளிப்படுத்துகிற முட்டாள்தனம் நின்றுபோகும். இந்த உடம்பு எப்பொழுது வேண்டுமானாலும் கவிழ்ந்து போகும் என்ற நினைப்போடு இரு... அப்பொழுது தர்ம சிந்தனை மேலோங்கும். உடம்பு அல்ல மனிதர்கள்.... உள்ளுக்குள் இருக்கிற ஆத்மா தரிசனத்தை பார்.
இறைவழி நின்றவர்களை இழித்துப் பேசவும்... இல்லாமல் செய்யவும்.... முயற்சி செய்தால் ,அந்த முயற்சி முறிந்து, முயற்சித்தவர் துயரத்தில் மூழ்கிப் போவார்.
நான் கற்றுக்கொண்ட பாடங்களை.... என்னுடைய பொக்கிஷங்களை.... பகிர்ந்து கொண்டேன்... பொக்கிஷங்களை எடுத்துக்கொள்வதும்... புறங்கையால் தள்ளி விடுவதும் உங்கள் விருப்பம். இந்த சந்தர்ப்பத்தை எனக்கு அளித்த இறைவனுக்கு நன்றி... Praise the lord🙏.
Comments
Post a Comment