Posts

யார் அந்த நிலவு

நைட் ஃபுல்லா யோசிச்சு யோசிச்சு கதை எழுதின காரணத்தினால் 🤔 மதிய சாப்பாட்டிற்கு பிறகு தூக்கம்.. தூக்கமாக🥱🥱 வந்தது... நைட்டு புல்லா கண்விழித்து கதை எழுத வேண்டியது பகல் நேரம் தூங்க வேண்டியது... இதுவே பொழப்பா போச்சு உங்களுக்கு😡... என்று my wife.... the Boss.... அங்கலாய்க்க.. ( எப்பவுமே சுப்ரபாதம் காலையில தானே🤨 ...) என்று மனசுல கேட்டுக்கொண்டே என் பெட்ரூமுக்கு போய் கண் அயர்ந்தேன்.😌 கண் அயர்ந்த பத்து நிமிடத்திற்குள் ஒரு போன் கால்..                          " *Hello Sir... Good afternoon...I am Sibi..calling from Pune ..How was your return journey?இனிமையான குரலில் சிபி..🧐 மறுமுனையில். All our friends are good and we had a good return journey இது நான்😎. அடுத்த செய்தியாக என்னிடம் அவர் கூறிய விஷயம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. 😳      நான் குரூப்பில்       " பயணிகள் கவனத்திற்கு" போஸ்ட் செய்தவுடன்... அநேகம்பேர்... இந்தியாவில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் அவருக்கு பணம் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று என்னிடம் கூறினார். மேலும் அவர் படித்து முடித்த WHO AM I புத்தகத்தை கொர

என்னுள் எழுந்த முதல் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்....

மனதில் எழுகின்ற எண்ணங்களை.... எழுத்து வடிவில் கொண்டு வருவதற்கு... மொழி ஆளுமை தேவைப்படுகிறது... எண்ணுவதை எண்ணியபடியே.... வாசகர்களுக்கு கொண்டு செல்வதற்கு... சரியான வார்த்தைகள்... வரிகள்... பிழையின்றி வந்து விழ.... தவம் செய்திருக்க வேண்டும்... அந்த வரம் பெற்ற எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்களுக்கு  (தமிழ் மொழியின் மேலும்.... ஆன்மிகத்திலும் என்னை காதல் கொள்ள செய்த வைத்த குரு ) முதற்கண் வணக்கம்🙏 என்றும் போல் அன்றும்... காலை மலர்ந்தது... What you have in store today for me.🤔..God... என்று மனதில் எழுந்த சிந்தனையுடன்.... அன்றைய வேலைகளை தொடர்ந்தேன்.... ஜூன் 11ஆம் நாள்... என் தந்தை இந்த மண்ணுலகிலிருந்து மறைந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன... அவருடைய அன்பும் அரவணைப்பும்... அவர் படிப்பிற்கு கொடுத்த முதலிடமும்... என்னுள் பசுமரத்தாணி போல் பதிந்து இருந்தது... அந்த நினைவுகளுடன் கரைந்து இருந்த பொழுது....   " சார்....." ஒரு சன்னமான குரல்... என்னை அழைத்தது. நல்ல சிந்தனைகளுடன் கரைந்து பொழுதும் யாராவது என்னை டிஸ்டர்ப் செய்தால் எனக்கு பிடிப்பதில்லை... " யாருங்க.... என்ன வேணும் உங்களுக்கு?"

அந்தர் கி பாத் (ஹிந்தியில படிங்கோ)

ஹிந்தியில் நேக்குப் பிடித்த வார்த்தை... Phir milangay.. இதனுடைய அர்த்தம்....  (ஹிந்தி தெரியாதவாளுக்கு) " மறுபடியும் சந்திப்போம்" இதை ஏன் இப்ப சொல்ற?🤔... அப்படின்னு நீங்க கேட்கலாம்... காரணம் இருக்கிறது.... காரணத்தோடு ஒரு கதையும் இருக்கிறது.. இதில்.... பாதி கதை... மீதி நிஜம்.🤫.. எது நிஜம்.... எது கதை அது அவா அவா கற்பனைக்கு... என்னோட  brain ஹார்ட் டிஸ்க்கில் இருந்தது.... by default ... இன்னைக்கு இதை எழுதனும் போல தோணித்து ....  கதைக்கு பேர் வெச்சுட்டு எழுத ஆரம்பிச்சுட்டேன்.... இதில் வரும் பெயர்களும்... சம்பவங்களும் கற்பனையே... ( இப்படியெல்லாம் டைட்டில் போடாம, இப்பல்லாம் எழுதவே முடியறதில்லை... ஏதோ... முன்னெச்சரிக்கையா போட்டு வச்சுட்டா, தப்பித்தவறி ஆத்துக்காரி  இந்த writting  படிச்சுட்டா ....இது எல்லாம் கதை அப்படின்னு சொல்லி சமாளிச்சிடலாமோன்னோ 😜) நான் கல்லூரியில் படிச்சிண்டிருந்த காலம்....😊 (வே பேக் to my colleage days ....year 1982... அப்போ நேக்கு வயசு 23) என்னத்த படிச்சு கிழிச்ச.... அப்படின்னு இப்ப கேட்காதேள் ...😉 ஏன்னா.... நான் ... என்னுடைய சப்ஜெக்ட்ல.... யுனிவர்சிட்டி thir

"கோலமாவு கோகிலா".

        "மாலையில்... சில பழங்களை வாங்குவதற்காக... வெளியில் இருசக்கர வண்டியில் சென்றேன்.... எதிர்பாராத விதமாக... முன் சக்கரம் ஒரு கல்லில் மோதி வலது புறம் சரிந்து விழுந்தேன்... சடாரென்று வேகமாக வந்த கார் என்னை உரசிக் கொண்டு நிற்காமல் சென்றது.  "கிரேட் எஸ்கேப் uncle" பைக்கில் பாலோ செய்த இளைஞன் சொன்ன கமெண்ட்.  "ஏதோ புண்ணியம் செஞ்சிருக்கீங்க.. இல்லாட்டினா உங்களுக்கு நாளைக்கு பால்தான்"வழியில் சென்ற ஒருத்தர் சொன்ன வார்த்தை என் காதில் விழுந்தது. காலையில் நடந்த ஒரு சம்பவம் என் கண்முன்னே திரைப் படம் போல் ஓடியது.😌😌😌😌         இன்று ஞாயிற்றுக்கிழமை.. துயில் எழுந்தவுடன் (தூங்கி எழுந்தவுடன்)..... காலண்டரை பார்த்தேன்.... பொதுவாக வாரத்துக்கு இரண்டு நாட்கள் (கடா வாங்குவதற்கு முன்) நாள் குறிப்பை பார்ப்பது வழக்கம்.... புதன்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை.. அம்மா சொல்லிக்கொடுத்த வழக்கம்.... இன்றைக்கு சங்கடஹர சதுர்த்தி... மாமிசம் சாப்பிடக் கூடாது.... அம்மா படத்தை வணங்கி.. நன்றி  கூறிவிட்டு.... வீட்டின் முன் கதவை திறந்தேன்..                "கோலமாவு வாங்கலையோ கோலமாவு".....

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு

 Just for a relaxation 👍 ஐயா தர்மம் போடுங்கய்யா... corona பாதிப்பு வந்த பிறகு இந்த மாதிரியான குரல்கள் கேட்டு காதுகள் பழகிவிட்டன. தினமும் யாரோ ஒருவர்...  இல்லை இரண்டு பேர் யாசகம் கேட்டு வருவது வழக்கமாகி விட்டது. யாசகம் கேட்பவர்கள் வறுமை நிலையைப் பார்த்து இல்லை என்று சொல்ல மனது வரவில்லை. நானும் சளைக்காமல் என்னால் முடிந்தவரை அஞ்சோ பத்தோ இருபதோ... கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றேன். இம்முறை கொடுக்கும் போது பக்கத்தில் நண்பர் பார்த்துக்கொண்டிருந்தார்.       Don't encourage these peple அப்படின்னு எனக்கு அட்வைஸ் பண்ணினார். இவங்களெல்லாம் பகல்ல வேவு பார்க்க வராங்க... நைட்ல திருடுவதற்கு பிளான் போடுவாங்க. நண்பர் கூறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. பசின்னு கேக்குறாங்க ஒரு பத்து ரூபாய் நம்ம கொடுத்தா நம்ம ரொம்ப ஒண்ணும் குறைஞ்சு போகப் போவதில்லை கடவுள் எனக்கு மூன்று நேரம் சாப்பிடுவதற்கு கொடுத்திருக்கிறார்... அவருக்கு நன்றி சொல்ற மாதிரி பசி  என்று வர்றவங்களுக்கு  ஒரு பத்து ரூபா கொடுப்பதில் தப்பில்லை. கொடுக்கணும்னு மனசு இருந்தா போதும்... கைல காசு இல்லாட்டியும்... நாம சாப்பிடுகிற சாப்பாட்டில் பாதி கொடு

சிறு ரயில் பயணம்..

என்ன வெயில்... என்ன வெயில்.... இப்பவே கண்ணக் கட்டுது டா சாமி....🤧 என்று புலம்பிக்கொண்டே... கூட்டமாக இருந்த (என்னைக்கு காலியாயிருந்தது) எலெக்ட்ரிக் ட்ரெயினில் ஏறினேன். எங்கும் வேர்வை நாற்றம்....😷 உட்கார இடம் கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில்.... ஒரு மத்திய வயதுக்காரர்.... என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்🤨... நான்  எம் ஏ... சோசியல் வொர்க்கில்.... சைக்காலஜி... ஸ்பெஷலைசேஷன் செய்து இருந்ததனால்.... மனிதர்களின் முகத்தைப் பார்த்தே.... என்னால் அவர்களுடைய மன ஓட்டத்தை படிக்க முடியும்...😉 (எனக்கு Eric Berne நின் transaction analysis அறிமுகப்படுத்திய... எனது குருநாதர் ரமண ஐயாவுக்கு நன்றி) அடுத்து வரும் ஸ்டேஷனில் அவர் இறங்கப் போகிறார்... அவர் பார்வை சொன்னது...🤪 அவரை நோக்கி.... மெதுவாக நகர்ந்து.... அவருடைய பக்கத்தில் நின்று கொண்டேன்... என்னடா வாழ்க்கை இது.... வெளியே பயங்கர வெயில்.... உள்ளே பயங்கரக் கூட்டம்.... கையில வெயிட்டான பை... எவ்வளவு நேரம் இப்படியே நிக்கிறது.... போறாத குறைக்கு காலையில பொங்கல், வடை , இட்லி சாம்பார்... ஒரு பிடி பிடிச்சாச்சு.... ரொம்ப நேரம் நிக்க முடியல.... ந

நன்றி

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.🙏🏻 சொல்லாமல் விட்ட நன்றியொன்று பல்லிடுக்கில் சிக்கிக்கொண்ட எடுக்கவியலா உணவுத்துணுக்கென பாடாய்ப்படுத்துகிறது😪 மனசுக்குள் மலர்ந்து உரியவரிடம் வெளிப்படுத்தாத நன்றியொன்று அமைதியான இரவில் தகரத்தில் உராய்ந்து சப்தமெழுப்பும் ஆணியென உராய்ந்துகொண்டேயிருக்கிறது😭 நெஞ்சுக்குள் பூத்து நெஞ்சுக்குள்ளேயே நின்றுவிட்ட நன்றி ஒரு முள்ளென மாறி சுருக் சுருக் எனக் குத்திக்கொண்டேயிருக்கிறது😲 சொல்லியிருக்கவேண்டிய நன்றிதான்😌 நாக்கை அசைத்து சொல்லென மாற்றி வெளிப்படுத்தியிருக்க வேண்டிய நன்றிதான்😘 உரியவரிடம் சேர்ப்பிக்காமல் உள்ளுக்குள்ளேயே வைத்துக்கொண்டதில் ஊதிப்பெருத்து கனக்கிறது🙆‍♀️ சுமக்கமுடியாமல் நன்றியை அவ்வப்போது தெரிவித்துவிடுங்கள்😚 சொல்ல வந்த நன்றியை சொல்லாமல் வந்து சுமந்துகிடப்பது பேரவஸ்தை😩 தூக்கம் வராமல் சன்னல் திறந்து வானத்தைப் பார்க்கிறேன்🥱 அத்தனை நட்சத்திரங்களும் கேள்விக்குறிகளாகி கேள்வி கேட்கின்றன😳 சொல்லாத நன்றியை.... சிறு தவணைகளாக இன்று சொல்ல ஆரம்பிக்கிறேன்.... என்றும் எங்கும் வியாபித்திருக்கும் பரம் பொருளே...நன்றி🤘