என்னுள் எழுந்த முதல் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்....
மனதில் எழுகின்ற எண்ணங்களை.... எழுத்து வடிவில் கொண்டு வருவதற்கு...
மொழி ஆளுமை தேவைப்படுகிறது... எண்ணுவதை எண்ணியபடியே.... வாசகர்களுக்கு கொண்டு செல்வதற்கு... சரியான வார்த்தைகள்... வரிகள்... பிழையின்றி வந்து விழ.... தவம் செய்திருக்க வேண்டும்...
அந்த வரம் பெற்ற எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்களுக்கு
(தமிழ் மொழியின் மேலும்.... ஆன்மிகத்திலும் என்னை காதல் கொள்ள செய்த வைத்த குரு )
முதற்கண் வணக்கம்🙏
என்றும் போல் அன்றும்... காலை மலர்ந்தது...
What you have in store today for me.🤔..God... என்று மனதில் எழுந்த சிந்தனையுடன்.... அன்றைய வேலைகளை தொடர்ந்தேன்....
ஜூன் 11ஆம் நாள்...
என் தந்தை இந்த மண்ணுலகிலிருந்து மறைந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன...
அவருடைய அன்பும் அரவணைப்பும்... அவர் படிப்பிற்கு கொடுத்த முதலிடமும்... என்னுள் பசுமரத்தாணி போல் பதிந்து இருந்தது...
அந்த நினைவுகளுடன் கரைந்து இருந்த பொழுது....
" சார்....."
ஒரு சன்னமான குரல்... என்னை அழைத்தது.
நல்ல சிந்தனைகளுடன் கரைந்து பொழுதும் யாராவது என்னை டிஸ்டர்ப் செய்தால் எனக்கு பிடிப்பதில்லை...
" யாருங்க.... என்ன வேணும் உங்களுக்கு?"
எனது கேள்விகளில் வெறுப்பை கலந்திருந்தேன்.
" வரும்போது அம்மாவை பார்த்தேன்... ஆபீஸுக்கு போய்க்கிட்டு இருந்தாங்க..... கத்தி சாணை... பிடிக்கணும்னு சொன்னாங்க... அதான் உங்களை கூப்பிட்டேன்"
ஹெட் ஆஃபீஸ் ஆர்டர்... Dissobey பண்ண முடியாது...
மூன்று கத்திகளை தேடி கண்டுபிடித்து அவரிடம் கொடுத்தேன்...
சாணை பிடித்தார்....
நான் அதை வேடிக்கை பார்த்தேன்...
அவர் கண்களில்... ஒரு சோகம் ஒளிந்து கொண்டு இருப்பது எனக்கு தெரிந்தது.... ஆனால் நான் அதைப்பற்றி அவரிடம் கேட்கவில்லை...
கத்தி முனைகள் கூர்மை ஆயின...
" எவ்வளவு?"
" 80 ரூபாய் கொடுங்க சார்..."... குரலில் ஒரு தயக்கம்.
" இந்தச் சின்ன வேலைக்கு என்பது ரூபாயா?... அறுபது ரூபாய் வெச்சுக்குங்க"...
என்று கூறிக்கொண்டே புதிய மூன்று இருபது ரூபாய் நோட்டுக்களை அவளிடம் கொடுத்தேன்.
கையில் வாங்கிக் கொண்டார். ஆனால் அந்த இடத்தை விட்டு நகரவில்லை...
என்னுடைய முகத்தை மேலும் ஒருமுறை உற்றுப் பார்த்தார்...
நானும் அவரைப் பார்த்தேன்..
மேற்கொண்டு 20 ரூபாயை கொடுத்து விடலாமா என்று எண்ணுகையில்...
என் கையில் ஒரு பேப்பரை கொடுத்தார்...
அதை படிக்காமலே கண்களால் என்ன என்று கேட்டேன்...
" என்னுடைய இரு பெண் குழந்தைகள்... கார்ப்பரேஷன் ஸ்கூல் படிக்கிறாங்க... அவங்களுக்கு நோட்டு வாங்க காசு இல்ல.... உங்களால் உதவி செய்ய முடியுமா?...."
தயங்கித்... தயங்கி... என்னை கேட்டார்.
" எவ்வளவு ஆகும்?"
இது நான்....
" ஒரு ஆயிரம் ரூபாய் ஆகும்"... இது அவருடைய பதில்.
அவர் கொடுத்த காகிதத்தில்... அவருடைய மகள்களின் பெயர்... படிக்கும் பள்ளியின் பெயர்...
வகுப்பு.. மற்றும் வேண்டிய நோட்புக்குகள் பற்றிய குறிப்பு இருந்தது....
எனக்குள் என்ன தோன்றியதோ.... அந்தப் பேப்பரை ஒரு போட்டோ காப்பி எடுத்துக் கொண்டேன்... அவருடைய பெயரையும்... செல் நம்பரை வாங்கி கொண்டு...
" மாலைக்குள் உங்களுக்கு போன் செய்கிறேன்" என்று கூறி அனுப்பி வைத்தேன்.
" சரிங்கய்யா"... சென்றுவிட்டார்.
தந்தையின் நினைவு வந்தது....
தந்தை மறைந்த இந்த தினத்தில்...
அவருக்குப் பிடித்தமான ஒரு நல்ல காரியத்தை... செய்ய வேண்டும்....
இதற்காக இறைவன் எனக்கு கொடுத்த வாய்ப்பு என்று எண்ணி...
கவர்மெண்ட் ஸ்கூலில் பணிபுரியும்... என் நண்பனின் மனைவியிடம்... மேற்கண்ட பள்ளியில் இந்த குழந்தைகள் படிக்கிறதா என்பதை ஊர்ஜிதப்படுத்த சொன்னேன்.
இரண்டு மணி நேரம் கழித்து.... நண்பனின் மனைவியிடமிருந்து.... வாட்ஸ் அப்பில் வந்த செய்தி... அந்தக் குழந்தைகள்... அந்தப் பள்ளியில்... அந்த வகுப்பில்... படிப்பது ஊர்ஜிதப்படுத்தியது.
மாலையில்... காகிதத்தில் எழுதப்பட்ட நோட்டுகளை வாங்கச் சென்றேன்...
கடையில் நிறைய கூட்டம்....
வாங்கி முடிப்பதற்கு ஒரு மணி நேரம் ஆகிவிட்டது... அதிலும் பல சந்தேகங்கள்.... அனைத்து சந்தேகத்தையும்... அவரிடம் தொலைபேசியில் பேசி.... வாங்கி முடித்தேன்.
2,100 ரூபாய்...
இன்று காலையில் வந்து வாங்கிச் செல்கிறேன் என்றார்.
மனநிறைவு...
மனதில்... தந்தையாரின் முகம் தோன்றியது...
" ஹாட்ஸ் ஆப் கிஷோர்... Well done and keep it up..."
என்று என் தந்தை என் காதில் கூற.... என் கண்களில்... சிற்றருவி..
என் தந்தையின் படத்திற்கு பூ வைத்து பூஜித்தேன்.🙏🏻..
தந்தையே...
எங்களை வழிநடத்த
எங்களுடன் எப்பொழுதும் இருங்கள்...
நீங்கள் செய்த நல்ல கர்மாக்களால்.. நாங்கள் அத்தனையும் பெற்று மனநிறைவுடன்வளமோடு வாழ்கிறோம்...
நன்றி அப்பா🙏."
என் மேல் விழுந்த மழைத் துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்...
உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்... உனக்குள் தானே நான் இருந்தேன்"
கிஷோர் குமார் R
சன் ஆப் டி ஆர் ராஜா..🙏
மனம் நெகிழ்ந்தது. நல்ல விஷயம் செய்திருக்கிறீர்கள். உங்கள் தந்தையின் ஆன்மா நிறைந்திருக்கும். அவர் காட்டிய வழி!!
ReplyDeleteகீதா