பேயுடன் பேச என் 9 அழுத்தவும்.
பேயுடன் பேச என் 9 அழுத்தவும்.
தொடர் -1
காலை.... ☀️
சூரிய ஒளி பட்டு ...
எல்லா ஜீவராசிகளும்🦆🦅🦉🦇🐛🕷️🐘🦧 தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கும் நேரம்....
சென்னை கடற்கரைக்கு... கால்நடைக்காக வந்த மனித கூட்டங்கள் அங்கங்கே...🚶🏻♀️🚶♂️👩🦯🏃♂️🚶♂️.
அந்த கடல் கரையின் ஓரத்தில் உள்ள... பிரம்மாண்டமான பங்களாவின்..🏣 வரவேற்பரையில்... டேபிள் மேல்.... பிரிக்கப்படாத அன்றைய செய்தித்தாள்... அதற்குப் பக்கத்தில் ஆவி பறக்கும் தேநீர் கோப்பை....☕ யாருக்காகவே காத்துக்கொண்டிருந்தது....
சில மணித்துளிகளுக்கு பிறகு....
ஒரு அழகான கை.... அந்த தேனீர் கோப்பையை.... கையில் எடுத்துக் கொண்டே.... கண்களால் அந்த செய்தித்தாளின் தலைப்புச் செய்தியை... பார்வையிடுகிறது...
(இவள் தான் நம் கதையின் கதாநாயகி... நிஷா.... வயது 35... அழகான உடல்வாகு... பொலிவான கம்பீரமான தோற்றம்... இரண்டாம் முறை பார்க்க ஏங்க வைக்கும் முகம்...🙍♀️ தொழில்... மனோதத்துவ டாக்டர்...)
தலைப்புச் செய்தி..
"டாக்டர் சுமன் காணவில்லை. 11 நாட்களாக , DCP சங்கர் தலைமையில்...போலீஸ் வலை வீச்சு"🧐
(டாக்டர் சுமன்... நிஷாவின் கணவர்.... வயது 55...😳. இந்த பிரம்மாண்டமான பங்களாவின் சொந்தக்காரர். மேலும் இவர் பெயரில் சென்னையில் ஒரு multi speciality Hospital உண்டு. பல கோடிகளுக்கு அதிபதி)
நிஷாவின் கண்களில் சோகம்.😢.. தேநீர் அருந்திக் கொண்டே... சுமன் எங்கே சென்றிருப்பார்... யாராவது அவரை பணத்திற்காக கடத்தி இருப்பார்களா.... பலவித சிந்தனைகளுடன்செய்தித்தாளில் கவனத்தை செலுத்துகிறார்.
"டிங் டிங்".... அவர் கவனத்தை சிதறம் விதமாக காலிங் பெல்...
பணியாளர் கதவைத் திறக்க..... அங்கே DCP சங்கர்.🕵️♀️
"நான் DCP sankar...
நிஷா மேடத்தை... பார்க்க முடியுமா....
அவர் கணவர் காணாமல் போன விஷயமாக அவர்களிடத்தில் பேச வேண்டும்"😎
நிஷா தன் கண் பார்வையாலேயே... சங்கரை உள்ளே அனுமதிக்க, பணியாளருக்கு அனுமதி கொடுத்தார்.
உள்ளே வந்த சங்கர் ரிசப்ஷனில்... அமர்ந்தார். நிஷா... மெதுவாக அவரை நோக்கி நடந்து வந்து..
"எஸ் சொல்லுங்க" என்றார் நிஷா
"எவ்வளவு முயற்சி எடுத்தும் ..உங்கள் கணவரை கண்டுபிடிக்க முடியவில்லை"... சங்கர் வருத்தம் கலந்த குரலில் கூறினார்.
"இதைச் சொல்லுவதற்காகவா இவ்வளவு தூரம் என்னை பார்க்க வந்தீர்கள். அதை நான்.. ஏற்கனவே செய்தித்தாளில் படித்து விட்டேன்...
இதைத்தான்.. 11 நாட்களாக சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் என் கணவரை கண்டுபிடிப்பீர்கள்.. என்று எனக்கு தோன்றவில்லை.".. நிஷா கோபத்தின்😡 உச்சத்தில் இருந்தார்.
"உங்கள் கோபம் நியாயமானது... உங்கள் கணவர் பாண்டிச்சேரிக்குசென்னையில் இருந்து, எந்த வழியாகச் சென்றார் என்று தெரியவில்லை... எங்களுக்கு ஒரு தகவலும் கிடைக்கவில்லை..நாங்கள் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறோம்.... உங்களுக்கு ஏதாவது செய்தி கிடைத்தால் என்னிடம் கூறுங்கள்"... சங்கர் மிகப்பணிவுடன் பதிலளித்தார்.
நிஷா....சங்கரின் கண்களை நேருக்கு நேர் உற்றுப் பார்த்தார்...🤨
பிறகு அமைதியாக
" ம்ம்" என்ற ஒற்றைச் சொல்லில்... பதில் அளித்த நிஷாவிடம் விடைபெற்றுக் கொண்டு சங்கர் சென்றார்.
நிஷாவுக்கு........... டி சி பி சங்கரின் வருகை எரிச்சலூட்டியது... பதினோரு நாட்களாக தேடுதலில் எந்த முன்னேற்றமும் இல்லை... நிஷாவும் வெளியில் எங்கும் செல்லவில்லை.
ஒரு மாற்றத்திற்கு... இன்று... ஆஸ்பத்திரிக்கு செல்லலாம் என்ற எண்ணம் எழுந்தது. தன் கையில் தொலைபேசி எடுத்து.. ஆஸ்பத்திரிக்கு... தொடர்பு கொண்டார்.
"ஹலோ...
ஐயம் டாக்டர் நிஷா ஸ்பீக்கிங்"
மறுமுனையில் மிகவும் மரியாதையுடன் receptionist....
"எஸ் மேடம்"...
"நான் இன்றைக்கு ஆஸ்பத்திரிக்கு வருகிறேன்... வீட்டில் இருந்தால் டென்ஷன் ஆக இருக்கிறது....என் அறையை சுத்தம் செய்து... ரெடியாக வைக்கவும்...
டாக்டர் ரவி இடம் என் வருகையை அறிவிக்கவும்"
மறுமுனையில் இருந்து எந்தவித பதிலையும் எதிர்பார்க்காமல் நிஷா போனை கட் செய்தார்.
அரைமணி நேரத்தில்.... ஆஸ்பத்திரியில்... நிஷா ....அவரின் அறையில்.
நர்ஸ்... தன் கையில் கொண்டுவந்த நோயாளிகளின் பைல்களை டேபிள் மேல் வைக்கச் சொல்லிவிட்டு... ரவியை அழையுங்கள் ... என்று கூறினார் நிஷா.
சிறிது நேரத்தில் டாக்டர் ரவி அங்கே ஆஜர்...
கண்பார்வையால்...டாக்டர் ரவியை, தன் எதிரில் இருந்த இருக்கையில் அமரச் சொன்னார் நிஷா.
"குட் மார்னிங் மேடம்"
"ஹாய்.... டாக்டர் ரவி... ஹொவ் ஆர் யு? "
" ஐ அம் பைன் மேடம்"
சில விநாடி அமைதிக்குப் பிறகு..
"உங்கள் கணவரைப் பற்றி ஏதாவது செய்தி கிடைத்ததா மேடம்"...
டாக்டர் ரவியின் விசாரிப்பில் உண்மையான அக்கறை தெரிந்தது.
" போலீஸ் is useless... இன்று டிசிபி சங்கர் வீட்டுக்கு வந்திருந்தார்... முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் என்றார். 11 நாட்களாக ஒன்றுமே அவர்களால் கண்டறிய முடியவில்லை.
எனி வே... டாக்டர் சுமன் காணாமல் போனதில் இருந்து எனக்கு எதுவுமே கவனம் செலுத்த முடியவில்லை... நீங்கள் சில நாட்கள் ஆஸ்பத்திரியை பார்த்துக் கொள்ள முடியுமா".... குரல் தழுதழுக்க... நிஷா டாக்டர் ரவியிடம் கேட்டுக்கொண்டார்.
"நீங்கள் கவலைப்பட வேண்டாம் நான் பார்த்துக் கொள்கிறேன்" இது டாக்டரின் பதில்.
வேறு ஏதாவது செய்தி உண்டா.... என்று நிஷா கேட்ட கேள்விக்கு... டாக்டர் ரவி... டேபிள் மேல் இருந்த ஒரு ஃபைலை எடுத்துக் நிஷாவின் கையில் கொடுத்தார்.
"இது சிவாவின் கேஸ் பைல்... வயது 12 .... எல்லாவித மெடிக்கல் டெஸ்ட் பார்த்துவிட்டேன்... எந்தவித பிரச்சினையும் இல்லை…நாங்கள் அவரை டிஸ்சார்ஜ் செய்து விட்டோம்.ஆனால் சிவாவின் அப்பா உங்களை கன்சல்ட் செய்யாமல் ஆஸ்பத்திரியை விட்டு செல்லமாட்டேன் என்று பத்து நாளாக உங்கள் வருகைக்காக காத்துக்கொண்டிருக்கிறார்."
"Why? ...any problem?
"மெடிக்கல் ரிப்போர்ட்டில் எந்த ப்ராப்ளம் இல்லை... ஆனால் பையனிடம் பிராப்ளம் இருக்கிறது...
பத்து நாட்களாக... அவனுக்கு வலிப்பு (convulsion) வருகிறது.
ஆகையால்... நீங்கள் ஒருமுறை அவனைப் சோதித்து பாருங்கள்."
டாக்டர் ரவி கூறிய கூற்றை ஆமோதித்து... நிஷா நோயாளி சிவாவின் அறைக்கு செல்ல... அங்கே...🙈
தொடர் - 2
பேய் கதை தொடர்கிறது..🥶சிவா....
12 வயது சிறுவன்....👩⚕️
மாநிறம்.... பெரிய கண்கள்.... படுக்கையில் ஒருக்களித்து.... கண்திறந்து.... படுத்திருந்தான். சிவா, டாக்டர் நிஷா வருகையை... கண்டுகொள்ளவில்லை
படுக்கையின் அருகில்... சிவாவின் பெற்றோர்... கவலையுடன். டாக்டர் ரவி, டாக்டர் நிஷாவை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
" இவர்... டாக்டர் நிஷா... இந்த ஆஸ்பத்திரியின் சிஇஓ...."(CEO)
"வணக்கம் டாக்டர்"...🙏🏻
கண்களில் கண்ணீருடன் சிவாவின் அப்பா.😭
"உங்கள் மகனுக்கு ஒன்றுமில்லை... எல்லாம் சரியாகி விட்டது.... நீங்கள் உங்கள் மகனை அழைத்துச் செல்லலாம்.
All ரிப்போர்ட்ஸ் are நார்மல்".. டாக்டர் நிஷா அவரிடம் கூறினார்.
சிவாவின் அப்பா தயக்கத்துடன்........"என்னுடைய மகன்.... ஒவ்வொரு இரவிலும் .... வலிப்பு வந்து அவஸ்தைப்படுவதை... நான் வீடியோவில் படம் பிடித்திருக்கிறேன்.... சற்று பாருங்கள்..." என்று கூறிக்கொண்டே.. தன் கையிலிருந்த செல்போனை நிஷாவிடம் நீட்டினார்.
நிஷா அதை கையில் வாங்கிப் பார்த்தார்... வீடியோ ஓடியது... சிவா... படுக்கையில்... கை கால்களை வேகமாக உதறிக்கொண்டு.. தலையை மேலும் கீழுமாக ஆட்டிக்கொண்டு... பார்க்கவே பரிதாபமாக இருந்தது.
"சிவாவை... என்னுடைய ரூமுக்கு அழைத்து வாருங்கள்"... என்று கட்டளை இட்டு கொண்டே நிஷா தன் அறைக்கு சென்றார்.🚶🏻♀️
சில மணித்துளிகளுக்குள்... அனைவரும் நிசாவின் அறையில்...
"ஹாய்"... சிவாவை பார்த்து நிஷா....
சிவாவின் கண்களில் வெறிச்சோடிய பார்வை... சிறிதும் கண்ணிமைக்காமல் டாக்டர் நிஷாவை...
பார்த்து கொண்டிருந்தான்.🙄 அவனிடம் ஒரு வித சலனமும் இல்லை.
மறுபடியும் நிஷா...
"சிவா நான் உன்னிடம் சில கேள்விகள் கேட்கலாமா?"... சிவாவை பேசவைக்க வேண்டும் என்பது டாக்டர் நிஷாவின் நோக்கம்.
"ம்ம்..." ... மெல்லிய முனகல் சிவாவிடமிருந்து.
"சிவா நீ என்ன கிளாஸ் படிக்கிற?"
"5th.. ".... சிவாவின் உதடுகள் சின்னதாக அசைந்தன.
" நான் இந்த அறைக்கு, இதற்கு முன்னால் கூட வந்திருக்கிறேன்".சிவாவின் ... தெள்ளத் தெளிவான... அமைதியான... பதிலைக் கேட்டு... மற்ற நால்வரும்.... அதிர்ந்து போனார்கள்.😳.
"இந்த அறைக்கா?".... தன் ஆச்சரியத்தை மறைத்துக்கொண்டு சின்ன புன்முறுவலோடு சிவாவிடம் நிஷா கேட்டார்.
"ஆம்.... நான் இந்த அறைக்கு வந்த பொழுது... நீங்கள் அமர்ந்திருக்கும் டேபிள் சேர்.... இந்த ஏசி கருவியின் அருகில் இருந்தது".. சிவாவின் பதில்.
சிவாவின் பெற்றோர்கள்.... டாக்டர் நிஷாவின்... பதிலுக்காக காத்திருந்தார்கள்.
"அது உண்மைதான்... டேபிள் சேர் அங்குதான் இருந்தது... அது உனக்கு எப்படி தெரியும்?.🤔 ஆச்சரியத்துடன் நிஷா.
"எனக்கு எல்லாம் தெரியும்... உங்களைப் பற்றியும்....எனக்கு எல்லாம் தெரியும்.... நீங்கள் எங்கே பிறந்தீர்கள்... எங்கே படித்தீர்கள் .எப்பொழுது கல்யாணம்... அனைத்தும் தெரியும்"
சிவா கண்ணிமைக்காமல் கூறினான்.
"நீ என்னைப் பற்றி எங்கேயாவது படித்தாயா?"... நிஷாவின் கேள்வி சிவாவிடம்...
"நான் படித்த அறிந்து கொள்ளத் தேவையில்லை... என்னால் எல்லாம் சொல்ல முடியும்... உங்கள் கனவர், டாக்டர் சுமன் பற்றியும், எனக்கு எல்லாம் தெரியும்.."... சிவா அமைதியாக பேசினான்.
மனோதத்துவ டாக்டர் நிஷாவுக்கு... சிவாவின் பதில்கள்.... ஆச்சரியத்தை.. கொடுத்தது.
"என் கணவர் டாக்டர் சுமன் பற்றி உனக்கு என்ன தெரியும்... அவர் இப்பொழுது எங்கே இருக்கிறார்?"... நிஷாவிடம் இருந்து கேள்வி... கோபமாகும் வேகமாகவும்... வந்தது.
"உங்களது கணவர்... உயிரோடு இல்லை."..😢 சிவாவிடம் இருந்து வந்த தீர்க்கமான பதிலால் நிஷா பதட்டம் அடைந்தார்.
"நீங்கள்....மரணத்தைப் பற்றி பயப்படவே வேண்டாம்.... மரணம் இனிமையானது...ஒருமுறை முயற்சித்துப் பாருங்கள்"
சிவாவின் வார்த்தைகளைக் கேட்டு...
கண்களில் கண்ணீருடன் அந்த அறையை விட்டு வெளியேறினார்.. டாக்டர் நிஷா.
டாக்டர் ரவி... கிடைத்த தகவல்களை... டிசிபி சங்கரிடம்... தெரிவித்தார். சில நொடிகளில் dcp சங்கர் ஆஸ்பத்திரியில்... சிவாவின் முன்னே...
" ஹாய்..சிவா....
உனக்கு... டாக்டர் சுமன்.. எங்கே இருக்கிறார் என்று தெரியும் என்று... டாக்டர் ரவி கூறினார்...
அது உண்மையா"... சங்கரின் குரலில் சிறிது அழுத்தம் இருந்தது.
"ஆம்... ஆனால்... இப்போது அவர் உயிரோடு இல்லை.... மகாபலிபுரம் அருகே....5 km அருகில் உள்ள காட்டில்.... அவர் தற்கொலை செய்து கொண்டார்... அவர் உடல் .... அவர் சென்ற காரில் இருக்கிறது."
சிவா கூறிய பதிலை கேட்ட சங்கர் .... சிறுவன் சிவாவை... முறைத்துப் பார்த்தார்.
சிவாவின் முகத்தில் எந்த சலனமும் தெரியவில்லை...
சங்கர் நேரத்தை வீணடிக்காமல்.... தாமதிக்காமல்.... உடனே செயல்பட்டார்.... அவர் போலீஸ் ஜீப்.... ஈசிஆர் வழியாக..... மகாபலிபுரத்தை நோக்கி பறந்தது....🚘
தொடர் -3
(Ghost has started it’s Game🥴🤒😴)🚘 ...
சங்கரின் ஜீப்.... ஈசிஆர் ரோட்டில்.... மகாபலிபுரத்தை.... கடந்து மெதுவாக சென்று கொண்டிருந்தது.... இதுவரைக்கும் ஒரு தடையும் இல்லை.... சிவா கூறியது பொய்யா?....
சங்கர் மனதில் சந்தேகம்🤔....
"எங்கேயாவது ஏதாவது தடையம் தெரிகிறதா?"... சங்கர் ஜீப்பில் அமர்ந்துள்ள மற்றவர்களிடம் கேட்டார். யாரிடம் இருந்தும் எந்த பதிலும் இல்லை.
ஜீப்.... ஒரு சின்ன பாலத்தை கடந்து சென்று கொண்டிருந்தது... பாலத்தின் கீழே அடர்ந்த காடு.... பாலத்தின் ஓரத்தில்...
ஒரு இடத்தில்... தடுப்புச்சுவர்... உடைந்து இருப்பது சங்கரன் கண்ணில் தட்டுப்பட்டது.
"நாம் மகாபலிபுரத்தை கடந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறோம்" என்று கேட்ட சங்கரின் கேள்விக்கு....
"சுமார் ஐந்து கிலோமீட்டர் " என்று உடனடியாக பதில் வந்தது.
சங்கர் ஜீப்பை நிறுத்தச் சொன்னார். மற்றவர்களை, ஏதாவது தடையும் தெரிகிறதா என்று பாருங்கள்... என்று கட்டளை இட்டு விட்டு... ஜீப்பில் இருந்து சிந்தனையுடன்... கீழே இறங்கி... ஒரு சிகரெட்டை பற்றவைத்தார். (cigarette smoking is injurious to health)
மற்றவர்கள்.... பாலத்தின் கீழே.... அடர்ந்த... மரங்களின் கீழே... தொடர்ந்து தேடினார்கள்.
" சார்.... இங்கே ஒரு கார் மரத்தில் சிக்கி தொங்கிக் கொண்டிருக்கிறது. வந்து பாருங்கள்"... பதட்டமாக ஒரு கான்ஸ்டபிள் கூறியது... சங்கரின் காதில் விழுந்தது. பற்ற வைத்த சிகரெட்டை... கீழே போட்டுவிட்டு... உடனடியாக.... கான்ஸ்டபில் காட்டிய இடத்தில்... மரக்கிளையில்... ஒரு கார் சிக்கி தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். கஷ்டப்பட்டு காரை தரையில் இறக்கினார்கள். காரில் .... அழுகிய நிலையில்..... ஒரு மனித....சடலம்.
சிவா சொன்னது உண்மை என்றால் இது டாக்டர் சுமன் உடல் ஆகத்தான் இருக்க வேண்டும்.
சங்கர் உடனடியாக.... நிஷாவுக்கு போன் செய்தார்.
" மகாபலிபுரம் அருகே.... ஆக்ஸிடெண்ட் ஆன காரை... கண்டுபிடித்திருக்கிறோம். உள்ளே ஒரு சடலம் இருக்கிறது"... sankar நிஷாவிடம் சொல்லி முடிப்பதற்குள்....
" அது டாக்டர் சுமனா?"...
பதட்டமான குரலில் நிஷா.
"அந்த உடல்... சுமனா.. இல்லையா... என்பதை நீங்க தான் ஊர்ஜிதப்படுத்த வேண்டும்... உடலை ராயப்பேட்டை அரசாங்க ஆஸ்பத்திரிக்கு கொண்டு சொல்லுகிறோம்... நீங்கள் அங்கு உடனே வாருங்கள்"... சங்கர் நிஷாவுக்கு பதிலளித்துவிட்டு...
"ஏன் இந்த தற்கொலை?"
மனதில் எழுந்த கேள்வியுடன்.... ராயப்பேட்டை.. ஆஸ்பத்திரியை நோக்கி பயணமானார்.
சங்கரின் வருகைக்காக... நிஷா... ஆஸ்பத்திரி வாசலில் காத்திருந்தார்.
சடலத்தின் மேல் இருந்த துணியை விலக்கி நிஷாவுக்கு.... சடலத்தின் முகம் காட்டப்பட்டது.
நிஷாவின் கண்களில் கண்ணீர்.... மெதுவாக... ஆம் ... அது சுமனின் சடலமே......என்று தலையை அசைத்தார்...
சங்கரின் மனதில்... சிவா.... பலமாக சிரித்தான்.... சிவாவுக்கு இது எப்படித் தெரிந்தது... அவனிடமே கேட்டு விடுவோம் என்று.... சிவா... இருக்கும் இடத்தை ... சிறிதும் தாமதிக்காமல்.. வந்து சேர்ந்தார்.
சிவாவின் தந்தை... சிவாவின் அருகில்.... அமர்ந்து அன்றைய நாளிதழை படித்துக் கொண்டிருந்தார்.
சங்கர் சிவாவின் அப்பாவிடம்
" சார்.... சிறிது நேரம்... அறையை விட்டு வெளியே... இருக்கிறீர்களா?... நான் சிவாவிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும்."
சிவா... சின்னப் பையன்.... அவனுக்கு ஒன்றும் தெரியாது... என்று சிவாவின் அப்பா சங்கரிடம் கூறிய போதும்... சங்கர் சிவாவிடம் பேசியே ஆக வேண்டும்... என்ற தீர்மானத்துடன் இருந்தார்.
" அப்பா சிறிது நேரம் வெளியில் இருங்கள்.... நானும் அவரோடு சிறிது நேரம் தனிமையில் பேச வேண்டும்"... சிவா கூறியதை கேட்டு சிவாவின் அப்பா அதிர்ச்சி அடைந்தார்.
அமைதியுடன்... கண்களைக் கசக்கிக் கொண்டே.... அந்த அறையை விட்டு நகர்ந்தார்.
சங்கரின் கண்கள்... சிவாவின் கண்களை நேருக்கு நேர் சந்தித்தன...
சிறிது நேர மௌனத்திற்கு பிறகு...
"சிவா.... சுமன் தற்கொலை செய்து கொண்டது உனக்கு எப்படி தெரியும்.... உனக்கும் அந்த தற்கொலைக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது.... உனக்குத் தெரிந்த எல்லா உண்மையையும் சொல்லி விடு.... இல்லையென்றால்..... உன் அப்பாவையும் அம்மாவையும்..... சிறையில் வைத்து சித்திரவதை செய்வேன்"
என்று மிரட்டும் தொனியில்... சங்கர்.. சிவாவிடம் கூறினார்.
சிவாவின் முகத்தில் பயம் இல்லை.... மாறாக அவனுடைய உதட்டில் ஒரு சின்ன புன்னகை...
சிவா கேட்ட அடுத்த கேள்வி.... சங்கரை உருக்குலையச் செய்து.
"எனக்கு எல்லாம் தெரியும்.... சுனிதாவின்... ஒரு கால் கொலுசு உன்னிடம் பத்திரமாக இருக்கிறதா?"
சிவா... சங்கரிடம் கேட்ட இந்த கேள்வி.. இடிபோல் சங்கரின் தலையில் இறங்கியது...
சங்கர்... தலைசுற்றி பக்கத்திலிருந்த நாற்காலியில் சாய்ந்தார்....
யாருக்கும் தெரியாமல் நான் ... என் கள்ளக்காதலி சுனிதாவை... கொலை செய்தது.... சிவாவுக்கு எப்படி தெரிந்தது...
சங்கருக்கு...அந்த ஏசி அறையிலும்... பயத்தில் எக்கச்சக்கமாய் வேர்த்தது...
சிவாவின் உதட்டில் சிரிப்பு மறையவில்லை...
சில மாதங்களுக்கு முன்... நடந்த சம்பவங்கள்.... சங்கரின் மனத்திரையில் ஓடியது....
(பேய்.... தன் ஆட்டத்தை தொடரும்🤣🤣🤣🤣🤣🤣🤣🤣... தவறு செய்பவர்கள்.... தண்டிக்கப்படுவார்கள்... Remember.... The YOU...in you....is watching you... always)
தொடர் - 4
சங்கரின் ஃப்ளாஷ்பேக்...😇
சில மாதங்களுக்கு
முன்....😢
சங்கர்..... சென்னையில் போஸ்டிங் வாங்கி வருவதற்கு முன்னால்.... திருநெல்வேலியில்... சில நாட்கள் பணிபுரிந்தார்.... திருமணம் ஆகியும்... மனைவியை சென்னையில்... தன்னுடைய சொந்த பங்களாவில்... அண்ணாநகரில் குடும்பம் வைத்திருந்தார்.
வேலை நிமித்தமாக... குற்றாலம்... தென்காசி... நெல்லை... மற்றும் பல இடங்களுக்கு... சங்கர் சென்று வந்து கொண்டிருந்தார்.
அப்பொழுது ஏற்பட்டது தான் சுனிதாவின் சிநேகிதம்....😍🤪
சுனிதா... அழகி மட்டுமல்ல.... பேரழகி...🤷♀️
ஒரு இசைப்பிரியை...
சங்கர் திருமணம் ஆனவர் என்பது தெரியாமல்.... சுனிதா சங்கரை காதலித்தாள்...😍
இந்தக் காதல் கனிந்து... சுனிதா கர்ப்பமானாள்.
விபரீதத்தை.... அறிந்த சங்கர்.... சுனிதாவிடம்.... கருவை கலைக்க சொன்னார். சுனிதா மறுத்தாள்.... விளைவு.... sankar.... சுனிதா உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது.... தலையணையை முகத்தில் அழுத்தி.... சுனிதாவை கொடூரமாகக் கொலை செய்தார்....🥶
மாரடைப்பால் நேர்ந்த மரணம்... என்று மற்றவர்களை நம்ப வைத்தார்...
கொலை நடந்த சில நாட்களுக்கு பிறகு...சங்கரின் கண்ணில்பட்டது சுனிதாவின் ஒற்றை கொலுசு.... அவள் உறங்கிய கட்டிலின் அருகில்....
ஒற்றைக் கொலுசை... சங்கர் எடுக்க குனிந்த போது.... கட்டிலின் அடியில் இருந்து சுனிதாவின் கை.... சங்கரின் கையைப் பிடித்து இழுத்தது போல்🤨 ஒரு பிரம்மை சங்கருக்கு....
ஒற்றைக் கொலுசை பத்திரமாக எடுத்து வைத்தார்... ஆனாலும்.... இரவு நேரத்தில்.... கொலுசுச் சத்தம் அவனை பயமுறுத்திக் கொண்டே இருந்தது...😟
சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள.... சங்கரன்கோயிலின்... அருகே அமர்ந்துள்ள பாம்பாட்டிச் சித்தர்... சமாதி அருகில் சந்தித்த... பாண்டியன் பூஜாரியை... அணுகினார்.
பாண்டியன் பூஜாரி.... கொடுத்த தாயத்தை.... கழுத்தில் போட்டுக்கொண்ட முதல் கொலுசு சத்தம் கேட்கவில்லை.
பிளாஷ்பேக் ends.
சங்கருக்கு இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை....
யாருக்குமே தெரியாது என்று நினைத்த.... கொலைச் சம்பவம்.... சிவாவுக்கு எப்படி தெரிந்தது... தன்னிடம் இருக்கும் சுனிதாவின் ஒற்றை கொலுசு பற்றி எப்படித் தெரிந்தது.🤨
இரவு நேரமாக இருந்தாலும்... சிவாவின் அப்பாவை தன் அறைக்கு வரவழைத்தார் சங்கர்.
சங்கரின் முன்னே... சிவாவின் அப்பா இருக்கையில் அமர்ந்தார். அவர் மனதில் பயம் ....உடலில் நடுக்கம்.
"சாரி.... உங்களை இரவு நேரத்தில் தொந்தரவு செய்கிறேன்... டாக்டர் சுமன் தற்கொலை சம்பவம்.... உங்கள் மகனுக்கு எப்படித் தெரியும்..."
சிவாவின் அப்பாவின் கண்களில் கண்ணீர்...
தன் கையிலிருந்த... செல்போனில்... படமாக்கப்பட்ட ஒரு வீடியோவை சங்கரிடம் காட்டினார். அதில் சிவா வலிப்பு வந்து... கஷ்டப்படுவதை படமாக்கப்பட்டிருந்தது.
" இந்த மாதிரி வலிப்பு வரும்போது எல்லாம்... சிவ ஏதேதோ பிதற்றுகிறான்... எனக்கு ஒன்றும் புரியவில்லை'... சிவாவின் அப்பா அழுதபடியே கூறினார்.😭
"எப்பொழுதிலிருந்து இந்த வலிப்பு சிவாவுக்கு வந்தது?🧐
சங்கர் கேட்ட கேள்விக்கு சிவாவின் அப்பா சொன்ன பதில்....
(பதில் ரொம்ப நீளம்.... ஆகையால் அடுத்த எபிசோடில் தொடருவோம்)😳
தொடர் -5
சிவாவின் அப்பா... தயக்கத்துடன் பதில்... சொல்ல ஆரம்பித்தார்...
ஒன் மேர் ப்ளாஷ்பேக்...
சில நாட்களுக்கு முன்... நானும் என் மனைவியும்... சிவாவுடன்.... பெங்களூரில் இருந்து சென்னைக்கு... ஊர் சுற்றிப் பார்த்துவிட்டு சில பொருட்கள் வாங்குவதற்காக... வந்திருந்தேம்...
அப்பொழுது நாம் தங்கிய ஹோட்டல்... குவாலிட்டி இன்..... தங்கிய ரூம் நம்பர் 13.... ஐந்தாவது மாடி...
தங்கிய இரண்டாவது நாள்.... நானும் என் மனைவியும்... சில பொருட்கள் வாங்குவதற்காக வெளியே செல்லும் போது.... சிவா... அறையில் தனியாக.... டிவி பார்த்து கொண்டு இருக்கிறேன்.... என்று கூறி எங்களோடு வர மறுத்து விட்டான்.... நானும்.... அவன் வெயிலில் அலையாமல் அறையில் ரெஸ்ட் எடுக்கட்டும்.... என்று நினைத்து...அறையில் அவனைத் தனியே விட்டு விட்டு மனைவியுடன் வெளியே சென்றேன்.
மூன்று மணிநேரங்கள்... வெளியே செலவழித்து விட்டு ....அறைக்கு திரும்பி வரும் பொழுது...😳 தொலைக்காட்சியில்... கூடுதல் சத்தத்துடன்.... சில காட்சிகளில் ஓடிக்கொண்டிருந்தன... அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த சிவா.... வலிப்பு வந்து... கட்டிலில்.... மேலும் கீழும் தூக்கி போட்ட படி... ஏதேதோ வாயில் வந்தபடி உளறிக் கொண்டிருந்தான்.
அன்றிலிருந்து... அவனுடைய வலிப்பு குணமடையவில்லை... அதற்காகத்தான்.... சிவாவை குணப்படுத்த... டாக்டர் நிஷாவிடம்... கூட்டி வந்தேன். எல்லா மெடிக்கல் ரிப்போர்ட்டும் நார்மல்.... ஆனால் வலிப்பு நிற்கவில்லை....
சிவாவின் அப்பா... விம்மி விம்மி அழ ஆரம்பித்தார்.
சங்கருக்கு ஒன்றும் புரியவில்லை....
சிவாவின் உடம்பிற்கு என்ன?
குழப்பத்துடன்....
சிவா வலிப்பு வந்து அவதிப்படும் அந்த சின்ன வீடியோவை.... அவர் கைத்தொலைபேசியில்மாற்றிக் கொண்டார்.
சிவாவின் அப்பா... சங்கரிடம் இருந்து.. விடைபெற்றுச் சென்றவுடன்....
சங்கர் .... உடனடியாக தனது உதவியாளரை அழைத்து... குவாலிட்டி இன்... விடுதிக்கு சென்று... சிவாவின் அப்பா... குடும்பத்துடன் அங்கு தங்கி இருந்ததை உறுதி செய்து கொண்டு வரச் சொன்னார். மேலும்.... அந்த விடுதியின் ரகசிய வீடியோ கேமராவில்... ஒரு மாதத்தில் பதிவான... எல்லா பதிவையும்... கொண்டுவரச் சொன்னார்.
சங்கர் மனம் அமைதி அடையவில்லை... திருடனுக்கு தேள் கொட்டியது போல்... அவர் மனம் அலைக்கழித்தது....
அவசர அவசரமாக....தன் குழப்பத்திற்கு விடை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்.... பாண்டியன் பூஜாரிக்கு... தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
"சாமி..... நான் தான் சங்கர் பேசுகிறேன்... என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?"
எதிர்முனையில் இருந்து சில நிமிடங்கள் மௌனம்.
" ம்ம்... நீங்கள்... எந்த சங்கர் பேசுகிறீர்கள்?... எனக்கு நிறைய சங்கர் பேர் கொண்ட நண்பர்கள் அறிமுகம் இருக்கிறது... அதில் நீங்கள் யார்?"..🤣🤣🤣🤣.... பலத்த சிரிப்புடன் அவருடைய பதில்.
" நான் (டிப்டி கமிஷனர் ஆப் போலீஸ்) DCP சங்கர்"... என்று சங்கர் கூறினார்.
" அந்த shankara... எப்படி இருக்கிறீர்கள்?... சுனிதா இன்னும் பயமுறுத்துகிறாளா?..🤣🤣🤣🤣.. நான் கொடுத்த தாயத்தை... நீங்கள் அணிந்திருக்கும் வரையில்... உங்களுக்கு ஒரு தொந்தரவும் வராது. சொல்லுங்கள்... இப்பொழுது என்ன வேண்டும்?..."
அவர் குரலில் இருந்த ஆளுமை... சங்கருக்கு சற்று துணிவு தந்தது.
"நான் உங்களுக்கு, கைத்தொலைபேசியில் ஒரு வீடியோ காட்சியை அனுப்புகிறேன் அதை பார்த்துவிட்டு எனக்கு உதவி செய்யுங்கள்"... என்று கூறி சிவாவின் வீடியோவை.... பாண்டியன் பூஜாரிக்கு அனுப்பி வைத்தார்.
சிறுது நேரத்தில் பூஜாரி இடம் இருந்து வந்த பதில்.... சங்கரை நிலைகுலையச் செய்தது.
"சங்கர்.... இனிமேல் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.... அந்த சிறுவனின் உடம்பில்.... பேய் புகுந்துள்ளது....அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்துப் பேச வேண்டாம். அது உங்களை.... சமயம் பார்த்து கொல்ல காத்திருக்கிறது..... முக்கியமாக.... நான் பூஜை செய்து கொடுத்த... தாயத்தை கழுத்தில் இருந்து கழட்ட வேண்டாம். அது உங்கள் உயிருக்கு ஆபத்து. முடிந்தால் அந்த சிறுவனை கொன்று விடவும்"
சங்கருக்கு பயம்... சிவாவின் உடம்பில்... சுனிதாவின்...ஆவி புகுந்து இருக்குமா...🤔. அல்லது வேறு ஏதாவது ஆவியா.. சுமனின் தற்கொலைக்குக் கூட அந்த ஆவி தான் காரணமா?🤔... என்று பலவித சிந்தனைகளுடன்... அமர்ந்திருக்கும் பொழுது...
"ட்ரிங் ட்ரிங்".... மறுபடியும் கைத்தொலைபேசி...g அவனை அழைத்தது...
அதில் வந்த செய்தி...🙉.
(இன்றைக்கு இது போதும்....☺)
தொடர் -6
தொலைபேசியில் பேசியது சங்கரின் உதவியாளர், "குவாலிட்டிஇன்"விடுதியில் இருந்து.🕵️♀️
சிவாவின் அப்பா.... அவருடைய குடும்பத்துடன்.. 13 ஆம் நம்பர்.. அறையில்... தங்கியது... ஊர்ஜிதமாகியது.🧐
கூடவே இன்னொரு தகவல்.... அவர்கள் அந்த அறையில் தங்குவதற்கு முன்
.. அதே அறையில் தங்கிய.... (பாலசுப்ரமணியன் என்ற பாலா) பாலா.🕵️♂️.. ஐந்தாவது மாடியிலிருந்து குதித்து... தற்கொலை செய்து கொண்டார்.😳😲🤭.(ஒரு கதையில்.. எத்தனை கொலை... எத்தனை தற்கொலை ...
அம்மாடி😟... கதை எழுதுற எனக்கே இப்படி கண்ண கட்டுதே.... படிக்கிற உங்களுக்கு எப்படி இருக்கும்😳)
பாலா...
யார் இந்த பாலா...?🤨
ஏன் இந்த அறையில் தனியாக தங்கினார்?😒
ஏன் தற்கொலை செய்து கொண்டார்?...😏
சங்கருக்கு இந்த கேள்விக்கெல்லாம் பதில் கிடைக்கவில்லை.😢
ஆனால்... ஒரு மணி நேரத்தில் அவர் கையில் கிடைத்தது... குவாலிட்டி இன் விடுதியின்... கேமராக்களின்... ஒரு மாத பதிவுகள்... பென்டிரைவில்.😎
அவசர அவசரமாக.... தன்னிடம் உள்ள கம்ப்யூட்டரில்....
பென்டிரைவை.... கனெக்ட் செய்து... அமைதியாக அதை பார்க்க தொடங்கினார்.👀
கம்ப்யூட்டர் திரையில் படம் பதிவு ஓடத்தொடங்கியது... சங்கர் கவனத்தைச் சிதறவிடாமல்... தன்னுள் எழுந்த கேள்விகளுக்கு ஏதாவது பதில் கிடைக்குமா... என்ற நோக்கத்தோடு... கண் சிமிட்டாமல்.... கவனித்த காரணத்தினால்...ஒரு செய்தி கிடைத்தது...🧐.
குவாலிட்டி இன் விடுதியின் கார் பார்க்கிங்கில்.... டாக்டர் நிஷாவின் கார்... வந்து நிற்பதும்.... அதிலிருந்து நிஷா.... விடுதியில் செல்வதும்... சில மணி நேரம் கழித்து.... அவர் திரும்பிச் செல்வதும்... ஐந்தாவது மாடியிலிருந்து... பாலா தரையில் தொப்பென்று விழுவதும்... பதிவாகியிருந்தது.
நிஷா ஏன் அந்த விடுதிக்கு சென்றார்?
நிஷாவுக்கும் பாலாவுக்கும் என்ன தொடர்பு?
இது தற்செயலாக நடந்த சம்பவமா?...
அனைத்துக் கேள்விகளுக்கும் விடை கிடைக்க... பாலாவின் தற்கொலையை.. விசாரித்த இன்ஸ்பெக்டர் மனோவிற்கு போன் செய்தார்.
இன்ஸ்பெக்டர் மனோ கொடுத்த விவரங்கள்....
பாலா....
25 வயது ....
M.A. Social work.. மதுரைக் கல்லூரியில் படித்தவர்.
மனோ தத்துவத்தில்
மேல் படிப்பை தொடர... பெங்களூரில் உள்ள... NIMHANS இல்... சேர்ந்து .. படிக்கும் பொழுது... லிண்டா என்ற சக கல்லூரி தோழியிடம்... காதல் வயப்பட்டு... அந்தக் காதல் கைகூடாமல் போனதனால்... டிப்ரஷன் ஆகி.... ட்ரீட்மென்ட் க்காக.... சென்னையில் அந்த அறையில் தங்கியதாக... ரிப்போர்ட் செய்யப்பட்டிருக்கிறது.
தற்கொலைக்கு காரணம்.... காதல் தோல்வி... டிப்ரஷன்..(Depression)....
சங்கருக்கு..
ஒரு சின்ன சந்தேகம்... டாக்டர் நிஷா.... டிரீட்மெண்டுக்காக... பாலாவை சந்தித்து இருக்கலாம் அல்லவா...😒....
தன் மனதில் எழுந்த சந்தேகத்தை தெளிவுபடுத்திக்கொள்ள...
"டிரிங்.... டிரிங்"
சங்கர்... டாக்டர் நிஷாவை தொலைபேசியில் அழைத்தார்.
"நிஷா... நான் சங்கர் பேசுகிறேன்... உங்கள் கணவர் தற்கொலை விஷயமாக.... உங்களை என் அறையில் சந்திக்க முடியுமா?."🤥
நல்ல தூக்கத்தில் இருந்த நிஷா...🥱
"என்ன?.... இந்த இரவு நேரத்திலா?.... காலையில் பேசிக் கொள்ளலாமே?"..😴
என்று சொல்லி... தொலைபேசியை வைக்கும் முன்...
" குவாலிட்டி இன் விடுதியில்... சில மாதங்களுக்கு முன்... தற்கொலை செய்து கொண்ட பாலாவை உங்களுக்குத் தெரியுமா?".... என்று சங்கர் கேட்க....
டாக்டர் நிஷா பதட்டமடைந்தார்..😰..
நிஷாவின் உறக்கம் கலைந்தது....😟😞😏😒...
ஏனிந்த பதட்டம்?
விரைவில் தெரிந்து தெரிந்துகொள்ளலாம்...😜
தொடர் -7
(பேயுடன் பேச என் 9 அழுத்தவும்👀🥶 தொடர்கிறது) சங்கர்🕵️♂️ கேள்வியால் பதற்றமடைந்த டாக்டர் நிஷா....👩🎤 உடனே சங்கரை காண வருவதாக தொலைபேசியில் சொல்ல.... அடுத்த அரை மணி நேரத்தில்.... சங்கரின் அறையில் இருந்தார்.🚶🏻♀️
"பாலாவை உங்களுக்கு எப்படி தெரியும்?...🤨 பாலா தற்கொலை செய்து கொண்ட நாளில்... நீங்கள் எதற்கு குவாலிட்டி இன் விடுதிக்கு சென்றீர்கள்?"...😒 சங்கர் கேட்ட கேள்விகளுக்கு... பதில் கூறாமல் அமைதியாக இருந்தார்.
சங்கர்... அமைதியாக... கம்ப்யூட்டர் திரையில் ஓடிக்கொண்டிருந்த.. விடுதியின் பதிவுகளை டாக்டர் நிஷாவிடம் காண்பித்தார்.
டாக்டர் நிஷா மெதுவாக ..........பாலா... அவருக்கு அறிமுகமான கதையை சொல்லத் தொடங்கினார்.🤷♀️
மற்றும் ஒரு பிளாஷ்பேக்...🤪
காதல் தோல்வியால்... டிப்ரஷனில்... கஷ்டப்பட்ட பாலாவை... மனோதத்துவ... ட்ரீட்மென்ட் காக டாக்டர் நிஷாவின் ஹாஸ்பிட்டலில் சேர்க்கப்பட்டார். பாலா பலமுறை... தற்கொலை செய்து கொள்ள.. முயன்று... மற்றவர்களால் காப்பாற்றப்பட்டவர்.
நிஷா பாலாவிடம்...
"பாலா.... காதல் என்பது...
சில கெமிக்கல் ரியாக்ஷனால்... உடம்பில்... மனதில்.. ஏற்படும் மாற்றங்கள்.
அதைப் புரிந்து கொண்டால்.... மனதை பக்குவப் படுத்திக் கொள்ளலாம்."...
பாலா... நிஷா சொல்வதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான்... நிஷாவின் வார்த்தைகளாலும்... கொடுக்கும் மருந்துகளாலும்.... சிறிது முன்னேற்றம் பாலாவிடம் தெரிந்தது.
ஒரு நாள்.....
"டாக்டர்.... உங்கள் வார்த்தைகளாலும்.... மாத்திரை மருந்துகளாலும்.... என்னிடம் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.... எனக்கு.... ஹாஸ்பிட்டலில் இருந்து சில மணி நேரம்.. வெளியே செல்ல வேண்டும் போல் இருக்கிறது... இதோ... அருகில் இருக்கும் கடற்கரைக்கு அழைத்துச் செல்லுங்கள்"... டாக்டர் நிஷாவிடம் சிறு குழந்தை போல் கெஞ்சினான் பாலா.
நிஷாவுக்கு மறுப்புச்சொல்ல முடியவில்லை.... அதே சமயத்தில்... வெளியில் கடற்கரையில்... பாலா தற்கொலை செய்து கொள்ள முயன்றால் 🤔... பலத்த யோசனைக்குப் பிறகு... நிஷா சம்மதித்தார்.
அந்தி மயங்கும் மாலை நேரம்... இருவரும் கடற்கரையில் நடந்து சென்றார்கள்.... கடல் அலைகள் ... ஒவ்வொரு முறையும் கரைக்கு வந்து .... அவர்களுடைய பாதங்களை தொட்டுத்... தடவிச் சென்றது...
15 நிமிட நடைக்கு பிறகு... நன்கு இருட்டி விட்டது.... எல்லோரும் கடற்கரையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தார்கள்...
நிஷாவும் பாலாவிடம்.... ஆஸ்பத்திரிக்கு திரும்பிச் செல்லலாம்.... என்று கூற.... பாலா மறுத்தான்.
அவனுடன் நடப்பது நிஷாவுக்கு சுகமான அனுபவம் என்றாலும்...
அந்தத் தனிமை... அவளுக்கு பயத்தைத் தந்தது.
சிறுது நேரத்தில் வந்த பெரிய கடல் அலை..... பாலாவை.... டாக்டர் நிஷா மேல் சாய்த்தது.
தனிமை...
பாலாவின் ஆன்மை..
அவனிடமிருந்து வந்த நல்ல வாசம்.... நிஷாவை தன்னிலை இழக்கச் செய்தது....☺😘😍.
அவர்கள் இருவராலும்.... இயற்கைக்கு மாறாக நடந்து கொள்ள முடியவில்லை....
பஞ்சு.... நெருப்பு பற்றிக்கொள்ள.... ஒரே ஒரு கடல் அலை போதுமானதாக இருந்தது.....
இருவரும் சுகமாக கரைந்தார்கள்....
சுய நினைவுக்கு வந்த உடன்.... இருவரும்.... ஆஸ்பத்திரிக்கு திரும்பி வந்தார்கள்.
நிஷாவுக்கும்... இது பிடித்து இருந்தது.... ஆகையால்.... பாலா அழைத்த போதெல்லாம்... இருவரும்... மாலை வேளையில் அடிக்கடி... கடற்கரையில் நடைப் பயணம் மேற்கொண்டார்கள்.
சில நாட்களுக்குப் பிறகு... நிஷாவால்... ஒருவாரத்திற்கு... சில காரணங்களுக்காக.... ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியவில்லை.
நிஷாவுக்கு.... பாலாவிடம் இருந்து அழைப்புகள்... கைத்தொலைபேசியில் வந்த வண்ணமாகவே இருந்தது. நிஷா அதற்கு பதில் அளிக்கவில்லை.
ஒரு பகல் நேரத்தில்.... நிஷா தன் கணவர் சுமன் உடன் சேர்ந்து உணவு அருந்திக் கொண்டிருக்கும் வேலையில்.... பாலா நிஷாவை தேடி வீட்டுக்கு வந்து விட்டான்.
டாக்டர் சுமன் நிஷாவை கண்டித்தார். மனநோயாளி பாலா ஏன் வீட்டிற்கு வருகிறார்?. நோயாளிகளை அப்படி பழக்கப்படுத்த வேண்டாம்....என்று நிஷாவிடம் கூற ....
நிஷா....
வீட்டில் இருந்து வெளியில் வந்து... கார்டனில்... நிஷா வுக்காக.... காத்திருந்த பாலாவை... ஆஸ்பத்திரிக்கு திரும்பிச் செல்லும்படி கூறினார். பாலா அதற்கு மறுத்து விட்டான்.
"நிஷா... நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது... தினமும்... நான் உன்னை சந்தித்தே ஆக வேண்டும்.உன்னை சந்திக்கா விட்டால் எனக்கு மறுபடியும் தற்கொலை எண்ணம் வருகிறது" என்று பதிலளித்தான் பாலா.😢
நிஷாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை....
நிஷாவுக்கு பயம் தொற்றிக்கொண்டது.
மனதில் ஒரு சின்ன திட்டத்தை வகுத்துக் கொண்டாள்.
பாலாவிடம்.... குவாலிட்டி இன் ஹோட்டல் ரூம் நம்பர் 13.... மாலையில் சந்திக்கிறேன் என்று கூறி பாலவை அனுப்பி வைத்தார்.
மாலையில் விடுதியில் நடந்தது என்ன?
கொலையா தற்கொலையா.... தொடரும்...😉
தொடர் -8
(பேயுடன் பேச என் 9 அழுத்தவும்🙄 தொடர்கிறது) பாலாவுக்கு மகிழ்ச்சி....
ஆஸ்பத்திரியில்... தனிமை கிடைக்காது...
குவாலிட்டி இன் விடுதியில்.... 13 ஆம் நம்பர் அறையை.... புக் செய்தான். ஐந்தாவது மாடி.....அந்த அறையின்.. பெட்ரூம்... பால்கனியில் இருந்து.... சென்னை நகரத்தை பார்ப்பதற்கு சொர்க்கலோகம் போல் தெரிந்தது. பாலா.... நிஷா வரவுக்காக காத்திருந்தான். அந்த இரவுதான்.... அவனுடைய கடைசி இரவாக இருக்கப் போவது என்பது தெரியாமல்.🙄
சரியாக இரவு எட்டு மணிக்கு... டாக்டர் நிஷா... பாலா தங்கியிருந்த அறையின் கதவை தட்டினாள்.
அவளுக்காகவே காத்திருந்த... பாலா கதவைத் திறந்தான்.😍
நிஷா மிக நேர்த்தியாக உடை அணிந்திருந்தாள். நீல நிற ஜீன்ஸ் பேண்ட்....👩🎤 வெள்ளை நிற லூஸ் மேல் சட்டை... அவளுடைய அழகை மேன் மேலும் மெருகூட்டியது...
சட்டைக்கு மேல் அவள் அணிந்திருந்த hood.....
அவள் அழகை.... சற்றும் மறைக்க முடியாமல் தவித்தது....
(அவளை யாரும் அடையாளம் கண்டு கொள்ளக் கூடாது.. என்பதில் அவள் கவனம் இருந்தது)
அவன் முகத்தில்
புன்னகை... சிறு குழந்தை கையில்... ஒரு அழகான பொம்மை கிடைத்தது போல்... அவனுக்கு மகிழ்ச்சி.😂
நிஷாவை நெருங்கி வா.. என்று அழைத்தான். நிஷா அமைதியாக... பாலாவின் அருகில் வந்து.... தனது கையால்... பாலாவின் தலைமுடியை கோதினாள்....
பாலா மெதுவாக தன்னிலை இழக்க ஆரம்பித்தான்.
"Bala dear...have you taken your pills today?"🤨
கையில் வைத்திருந்த மாத்திரைகளை பாலாவிடம் கொடுத்து கொண்டே.... நிஷா கேட்டாள்.
பாலா... அவள் கேள்விக்கு பதில் ஏதும் கூறாமல்.... நிஷா கொடுத்த எல்லா மாத்திரையையும்... விழுங்கினான்.
நிஷா... பாலாவின் தோளில் சாய்ந்து கொண்டே... அருகிலுள்ள... பால்கனிக்கு... அழைத்துச் சென்றாள்.
அவன் எடுத்துக் கொண்ட மாத்திரை... அதனுடைய வேலையை தொடர்ந்து....
ஆம்.... அந்த மாத்திரைகள்....
டிப்ரஷன் குறைவதற்காக... பாலா தினமும் சாப்பிடும் மாத்திரை அல்ல.😢...
அந்த மாத்திரைகள்.... மனதில் டிப்ரசன் ஏற்படுத்தும் மாத்திரைகள்....😲🤭...
சில நிமிடங்களில்... பாலாவின் மனதில்.... Suicidal tendencies... தோன்ற ஆரம்பித்தன...
கால்கள் தடுமாறின...
நிஷா.... பாலாவின் உணர்ச்சிகளை தூண்டி விட்டு.... அந்த அறையை விட்டு வெளியேறினாள்...
வேகமாக... லிப்டில் கீழே இறங்கி வந்து... தன் காரை எடுத்துக்கொண்டு ... Exit gate... நெருங்குவதற்கு முன்... அவள் எதிர்பார்த்தது நடந்தேறியது....
ஆம்.... பாலா.... ஐந்தாவது மாடியிலிருந்து... அவன் தங்கியிருந்த அறையின் பால்கனியில் இருந்து... கீழே... தலைகீழாக.... தரையில்... விழுந்து ரத்த வெள்ளத்தில்....😟... ஒரு கொலை... தற்கொலையாக.... யாருக்கும் தெரியாமல் அங்கு நடந்தேறியது....
Flash back ends...🤫(பீ கேர் ஃபுல்.... நான் என்னையவே சொல்லிகிட்டேன்😢)
தொடர் -9
🥶 டாக்டர் நிஷா..... கூறியதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார் சங்கர்.🕵️♂️
"இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்?".... குற்ற உணர்வுடன்...
நிஷா கேட்ட கேள்விக்கு.... சங்கரர் ஒன்றும் பதில் சொல்லவில்லை.
டாக்டர் சுமன் எப்படி இறந்தார்?...🤔
சிவாவுக்கு எப்படி சுனிதாவின் கால் கொலுசு பற்றி தெரிந்தது?🤥
என்ற கேள்விகளுக்கு இன்னும் சங்கருக்கு பதில் கிடைக்கவில்லை.
சிந்தனையுடன்.... இருவரும்.... அறையை விட்டு.... அவரவர் இல்லத்திற்கு... சென்றார்கள்.
சங்கர்.... தன்னுடைய காரில்... வேகமாக.. மவுண்ட் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்...
அந்த இரவில்.... கார்களின் எண்ணிக்கை... மிகவும் குறைவாக இருந்தது.
அவருடைய கார்.... கண்ணகி சிலையை... கடக்கும் பொழுது.... அவருடைய காரின்... ரியர் வியூ மிரரில்.... பின் இருக்கையில்...
சுனிதாவின் முகம்...🙈....
(அப்படியே சஸ்பென்சாக இருக்கட்டும்..🤪 நிஷாவுக்கு என்ன நடக்குதுன்னு பாப்போம்)
நிஷா வீட்டுக்குச் செல்லாமல் நேராக.... ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
சிவாவை சந்தித்து.... சில விஷயங்களை நேரடியாகக் கேட்க வேண்டும்.... என்ற எண்ணத்தோடு.... லிப்டில் செல்ல... எத்தனிக்கும்போது... லிப்டில் உள்ளே சிவா...🙄
லிப்ட் கதவை சாத்திக் கொண்டது.... நிஷா.... எந்த நம்பரை.... அழுத்தினாலும்... லிப்ட் நகரவில்லை...😟...
நிஷாவுக்கு பயம் தொற்றிக்கொண்டது....😰
" சிவா.... இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்?"... என்ற கேள்விக்கு... சிவா மெதுவாக சிரித்தான். 😊
"நான் உங்களை காணத்தான் வந்து கொண்டிருக்கிறேன்... நான் உங்கள் காதில் ஒரு ரகசியம் சொல்ல வேண்டும்...."
கிசுகிசுப்பான குரலில் சிவா கூறியதை கேட்டு நிஷாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
நிஷா குனிந்து சிவாவின் அருகில் சென்றார்.
"மரணம் என்பது ஒரு சுவையான அனுபவம்.... நான் அதை அனுபவித்து இருக்கிறேன்... நீங்களும் ஒருமுறை முயற்சிக்கலாமே.🤣🤣🤣🤣🤣"
பலத்த சிரிப்புடன் சிவா கூறியதைக் கேட்டு நிஷா.... பயந்து....🙉 லிப்டை விட்டு வெளியேறி....
(பேய்கள் பராக்....)🤫🙄👀🥶
தொடர் -10
🥶 பேய்கள் பராக்...💀
சங்கரின் 🚗 காரின்... பின் சீட்டில்.... சுனிதா உட்கார்ந்திருப்பது போல்.... தெரிவது... உண்மையா.... பிரம்மையா....😇.
உடனடியாக காரை நிறுத்திவிட்டு.... தலையை முழுவதுமாக திரும்பிப் பார்த்தான்..🙃. பின் சீட்டில் யாரும் இல்லை.
இருந்தாலும் அவன் மனதில் பயம்.... 😔சங்கருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை...
உடனடியாக பாண்டியன் பூஜாரியை கைபேசில் அழைத்து நடந்ததை கூறினான்....
மௌனமாய் சில நிமிடங்கள்... கடந்த பிறகு....
"வந்திருப்பது சுனிதாவின் ஆவி... உன்னை கொல்ல துடிக்கிறது... அதற்கு உதவியாக பாலாவின் ஆவி..... ஆகையால்.... அதிலிருந்து தப்பிக்க.... சிவாவை கொன்றுவிடு".🧐
பூஜாரியின் பதிலைக் கேட்டு... என்ன செய்வது என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது...
"டீ ரிங்.... டீ ரிங்..."
மறுபடியும் சங்கரின் கைத்தொலைபேசி சினுங்கியது....
இம்முறை அழைத்தது... டாக்டர் நிஷா... லிப்டில் நடந்ததை... விவரித்தார். தனக்கு பயமாய் இருக்கிறது என்றும்... சங்கரை உடனடியாக சந்திக்க வேண்டும் என்றும் நிஷா கூற.... சங்கர் தான் இருக்கும் இடத்தை... நிஷாவிடம் கூறினான்.
சந்திப்பு நடந்தது... சங்கர் முடிவு எடுத்தான்.
சங்கர் தான் எடுத்த முடிவை நிஷாவிடம்... நிறைவேற்ற சொன்னான்.
"நிஷா..... சிவாவை கொன்றுவிடுங்கள்... சிவாவை கொல்வதற்கு நீங்கள் தான் தகுந்த ஆள்... நோயாளியை மருத்துவம்... செய்கிறேன்... என்ற பெயரில்... அவர்களைக் கொல்வது.... உங்களுக்கு கைவந்த கலை தானே"🙄
சங்கர் கூறியதை கேட்டு நிஷாவுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை... மறுபடியும் ஒரு கொலையா...😳 பலவித யோசனைக்கு இடையில்... சரி என்று ஒப்புதல் கொடுத்தார்.🤷♀️
அடுத்த நிகழப்போவது.... சிவாவின் மரணம்... எங்கே....🤔 எப்படி..😳.. யார்...🤨 எப்பொழுது...🤥 பொறுத்திருந்து பார்ப்போம்.🤫
தொடர் -11
பேய்கள் பராக்🥶
நிஷா 👩🎤..... சங்கரிடம் 🕵️♂️சரி என்று ஒப்புதல் கொடுத்தாலும்.... மனதில் சில சந்தேகங்கள்..🤔 சிவாவின் உடலில் பழிவாங்கும் எண்ணத்துடன் பேய் வாழ்ந்து கொண்டிருக்கிறது... அதை எப்படி கொலை செய்வது... பேய் அதை அறிந்து கொண்டால்... அந்தப் பேயை எப்படி கையாள்வது...😒...... தன்னை எப்படி தற்காத்துக் கொள்வது...
பலவித சிந்தனைக்கு நடுவில்... அவளுக்கு தோன்றியதை.... சங்கரிடம் விளக்கம் அளித்து.... சங்கரிடம் இருந்து..... பாண்டியன் பூஜாரி சங்கருக்கு கொடுத்த தாயத்தை....(மேலே எழுதிய வரிகளை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்... க்ளைமாக்ஸுக்கு பயன்படும்😳) சங்கரிடம் இருந்து பெற்றுக்கொண்டு... சங்கரிடம் இருந்து விடைபெற்றார்.
மறுநாள்.....
நிஷா.... டாக்டர் ரவியை அழைத்து....
"ரவி.... சிவாவின்... உடல்நிலையில்... இதுவரை எந்த மாற்றமும் காண முடியவில்லை... அவனுக்கு.... அடிக்கடி வலிப்பு வருகிறது... அதன் காரணத்தை அறிய முடியவில்லை.... ஆகையால்... சிவாவுக்கு.... எந்த அறையில் தங்கும்போது... அவனுக்கு வலிப்பு ஏற்பட்டதோ.... அதே அறையில் வைத்து... அவனுக்கு வைத்தியம் செய்ய வேண்டும்.... ஆகையால்.... சிவா அவனுடைய பெற்றோர்களுடன் முன்னாள் தங்கியிருந்த குவாலிட்டி இன் விடுதியில் உள்ள அறை எண் 13ல்... வைத்து... வைத்தியம் செய்ய வேண்டும்... உடனடியாக அவனை அங்கே மாற்றுங்கள்.இந்த விஷயமாக அவனுடைய பெற்றோரை என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள்" என்று கட்டளை இட்டு விட்டு... சிவாவின் பெற்றோர் வருகைக்காக காத்திருந்தாள்.
சிறுது நேரத்தில் சிவாவின் பெற்றோரும் நிஷாவின் அறைக்குள்... வருகை தந்தார்கள். அவர்களிடம்... சில படிவங்களை கொடுத்து... அதை கையெழுத்திடும்படி... நிஷா கூறினார்.
சிவாவின் பெற்றோர்... படிவத்தில் இருப்பது என்ன என்று தெரிந்து கொள்வதற்காக நிஷாவிடம் கேட்க....
"இன்று முதல்... சிவாவுக்கு புதிய சைக்காலஜிக்கல் டிரீட்மென்ட்... கொடுக்கப் போகிறேன்.
அதற்கு அவனுக்கு மயக்க மருந்து கொடுக்க வேண்டும்... அதற்கான சம்மதம்.. இந்தப் படிவத்தில் இருக்கிறது." என்று கூறினார்.
"டாக்டர்.... உங்களை நான் முழுவதுமாக நம்புகிறேன்.... உங்களால் தான் என் குழந்தையை குணமாக்க முடியும்....நீங்கள் என்னிடம் எந்தப் படிவத்திலும் கையெழுத்து கேட்டாலும் ... நான் தயார். எனக்கு வேண்டியதெல்லாம் எனது மகன் சிவா கூடிய விரைவில் குணமாக வேண்டும் ".... கண்ணீர் மல்க சிவாவின் அப்பா நிஷாவிடம் கூறினார்.
நிஷாவின் வேலை சுலபமாகி விட்டது. உடனடியாக சிவா... குவாலிட்டி இன் விடுதியில்.... அறை எண் 13க்கு மாற்றப்பட்டார்.
மருந்து மாத்திரைகளுக்கு நடுவில்... விஷத்தையும்... யாருக்கும் தெரியாமல்... கையில் எடுத்துக்கொண்டு... தன்னுடைய திட்டத்தை நிறைவேற்ற... குவாலிட்டி இன்... விடுதிக்கு.... அவசர அவசரமாக சென்றார்.
அறை எண் 13 நடந்தது என்ன...?🤫
தொடர் -12
பேய்கள் பராக்🥶 அறை எண் 13....
அறைக்கு வெளியே.... கவலையுடன் சிவாவின் பெற்றோர்.👩🏫👨🏫
நிஷா அறைக்குள் சென்றார்....
அங்கு சிவா.... படுக்கையில்... மயக்க மருந்து காரணமாக... மயக்கத்தில்....
அடுத்து என்ன நடக்கப் போவது என்று அறியாமல்.... படுக்கையில் கிடந்தான்.
நிஷா.... தன் கையில் விஷத்துடன்.... சிவாவின் படுக்கையருகே... சென்றாள்...
தன் கையிலிருந்த... தொலைபேசியில்காவல் நிலையத்தை அழைத்து...
"குவாலிட்டி இன் விடுதியில்....13 நம்பர் அறையில்.... ஒரு தற்கொலை...." என்று கூறிவிட்டு.... பதிலுக்கு காத்திருக்காமல்... தொலைபேசியை வைத்துவிட்டார் நிஷா.
பிறகு....
மெல்ல குனிந்து.... சிவாவின் காதில்... மெல்லிய குரலில்.... சிவாவுக்கு மட்டுமே கேட்கும் விதமாக... (சிவா உடலிலிருக்கும் பாலா ஆவியோடு)
"பாலா.... காதல் என்பது... உடம்பில் ஏற்படும் கெமிக்கல் ரியாக்ஷன்.... என்று.... அன்று உன்னிடம் கூறியது தவறு.... என்னால்.... உன்னை மறக்க முடியவில்லை..... விரைவில் உன்னிடம் வந்து சேருகிறேன்.... தயவுசெய்து.... நீ... சிவாவின் உடலை விட்டு வெளியேறு.... பாவம் இந்தச் சிறுவன்"... என்று... சிவாவின் உடலில் இருக்கும் பாலாவிடம் கெஞ்சினாள்...
சிவாவின் உடலில்
ஒரு சிறு அசைவு...
நிஷா.... மெதுவாக.... தன் கையில் இருந்த விஷத்தை... ருசித்து அருந்த தொடங்கினாள்....
அவள் கண்களில்.... பாலாவின் முகம்...
பாலா இருகரம் நீட்டி... நிஷாவை..... அவனுடைய உலகத்துக்கு.... அழைத்தான்.
சிறிது நேரத்தில்.... காவல் நிலையத்தில் இருந்து வந்த.... காவலாளர்கள்.... அறை என் 13... கதவைத் தட்டினார்கள்..... அது உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது.....
கதவை உடைத்து உள்ளே சென்றார்கள்....
அங்கே...
பினமாக...
டாக்டர் நிஷா....
சிவா.... சத்தத்தைக் கேட்டு... கண்விழித்தான். அவனுடைய பெற்றோர்.... என்ன நடந்தது என்று தெரியாமல்.... சிவாவிடம் ஏற்பட்டிருந்த... மாற்றத்தை கண்டு.... மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆம்...
பாலா சிவாவின் உடம்பில் இல்லை...
விஷயத்தை அறிந்த சங்கருக்கு..... ஒன்றும் புரியவில்லை....
நிஷா ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்...
சிவா எப்படி குணமடைந்தான்....
சிவா உடம்பில் இருந்த பேய் எங்கே?
அனைத்து கேள்விகளுக்கும்..சங்கருக்கு..🕵️♂️ அடுத்து நிகழவிருக்கும் கிளைமாக்ஸில் பதில் கிடைக்கும்...🤫(சங்கருக்கு மட்டுமா உங்களுக்கும் தான்🤷♀️).........
தொடர் -13
பேய் கதை🥶 கிளைமாக்ஸுக்கு வருவோம்...
நடந்தது என்ன... நடக்கப் போவது என்ன?
சங்கருக்கு ஒன்றுமே புரியவில்லை...
டாக்டர் நிஷா எப்படி இறந்தார்....
அது கொலையா? தற்கொலையா?.
கொலை என்றால்... எப்படி கொலை செய்தார்கள்..... கொலை செய்தது யார்?....
பாலாவின் ஆவியா... சுனிதாவின் ஆவியா....
பலவித சிந்தனைகளுடன்.... வீட்டில் இருந்த சங்கருக்கு....
பிரிட்ஜில்.... இருந்த ஸ்காட்ச் விஸ்கி 🥃புகலிடம் கொடுத்தது...
கண்ணாடி கிளாசில்... ஊற்றிய பிறகு.... Ice box இல் ஐஸ் இல்லாததை கவனித்தான்....
சங்கர்.... உரத்த குரலில்.... கிச்சனில் இருந்த அவனுடைய மனைவியிடம்.... கொஞ்சம் ஐஸ் கொண்டு வரும்படி கூறினார்.
ஐஸும் வந்தது....
ஆனால் கொண்டு வந்தது.... அவனுடைய மனைவி அல்ல.... கொலுசு சத்தத்துடன் நடந்து வந்த சுனிதா....🤫
உடனே சங்கர்...
பூஜாரி கொடுத்த.... தாயத்தை... தேடினான்....
அப்பொழுது தான் அவனுக்கு நினைவுக்கு வந்தது.... அதை டாக்டர் நிஷாவிடம் கொடுத்தது பற்றி...
அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று அறியும் முன்...
பெரும் சத்தத்துடன் கீழே சரிந்தான் சங்கர்.... சுற்றி ரத்த வெள்ளம்...
ஓ... என்று .... பலத்த.. குரலில் சங்கரின் மனைவி அழுகிற சத்தம் கேட்டு.... ஊர் கூடி விட்டது.
அடுத்த நாள்...
பிரேக்கிங் நியூஸ் இல்...
"சங்கர்... மது அருந்துகையில்....
ஹார்ட் அட்டாக் வந்து.... இறந்து விட்டார்".
அது முதல் அந்த வீட்டில் கொலுசு சத்தம் யாருக்கும் கேட்கவில்லை....
சுனிதா.... சங்கரை பழிவாங்கிய மகிழ்ச்சியில்... வானுலகம் சென்றடைந்தாள்.
கதை நன்றாகத்தான் முடிந்தது.... ஆனால் டாக்டர் சுமன் இறந்தது எப்படி?...
உங்களுக்கு மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்கிறது....
எல்லாத்தையும் நான் தான் யோசிச்சு சொல்லனும்னா.... நீங்களும் உங்கள் கற்பனை குதிரையை தட்டி விடுங்கள்.... உங்களுக்கும் பதில் கிடைக்கும்🤣🤣🤣🤣🤣🤣
Comments
Post a Comment