சிறு ரயில் பயணம்..

என்ன வெயில்...

என்ன வெயில்....

இப்பவே கண்ணக் கட்டுது டா சாமி....🤧

என்று புலம்பிக்கொண்டே...

கூட்டமாக இருந்த (என்னைக்கு காலியாயிருந்தது) எலெக்ட்ரிக் ட்ரெயினில் ஏறினேன்.


எங்கும் வேர்வை நாற்றம்....😷

உட்கார இடம் கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில்.... ஒரு

மத்திய வயதுக்காரர்.... என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்🤨... நான்  எம் ஏ... சோசியல் வொர்க்கில்.... சைக்காலஜி... ஸ்பெஷலைசேஷன் செய்து இருந்ததனால்.... மனிதர்களின் முகத்தைப் பார்த்தே.... என்னால் அவர்களுடைய மன ஓட்டத்தை படிக்க முடியும்...😉


(எனக்கு Eric Berne நின் transaction analysis அறிமுகப்படுத்திய... எனது குருநாதர் ரமண ஐயாவுக்கு நன்றி)


அடுத்து வரும் ஸ்டேஷனில் அவர் இறங்கப் போகிறார்...

அவர் பார்வை சொன்னது...🤪


அவரை நோக்கி.... மெதுவாக நகர்ந்து.... அவருடைய பக்கத்தில் நின்று கொண்டேன்...


என்னடா வாழ்க்கை இது.... வெளியே பயங்கர வெயில்.... உள்ளே பயங்கரக் கூட்டம்....

கையில வெயிட்டான பை...

எவ்வளவு நேரம் இப்படியே நிக்கிறது.... போறாத குறைக்கு காலையில பொங்கல், வடை , இட்லி சாம்பார்... ஒரு பிடி பிடிச்சாச்சு.... ரொம்ப நேரம் நிக்க முடியல....


நான் நினைச்ச மாதிரியே அவர் சீட்டை விட்டு எந்திரிக்கும் போது திரும்பி என்னையை பார்த்தார்....


நானும் சுதாரித்துக்கொண்டு அவரு எழுந்திருக்கும் முன்... அவர் சீட்டில் சட்டென உட்கார்ந்தேன்...

என் பார்வையாலே அவருக்கு நன்றி கூறினேன்....


அவர்

" சிரித்துக்கொண்டே....

நீங்க எல்லாம் ஏன் சார் ட்ரெயின்ல வர்றீங்க.... பேசாம காரில் வர வேண்டியதுதானே..."

எனக் கூறியதைக் கேட்டு எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.


நான் கார் வைத்திருப்பது அவருக்கு எப்படி தெரியும்... என்று யோசித்துக்கொண்டே... "வண்டியை சர்வீசுக்கு கொடுத்து இருக்கேன்" என்று கூறினேன்.


பக்கத்து சீட்டில் உட்கார்ந்து இருக்கும் இளம் வயதுக்காரர்.... புலம்பிக் கொண்டே இருந்தார்...


"எப்பவுமே இந்த எலக்ட்ரிக் ட்ரெயின் லேட்டு தாங்க....ஒரு நாளைக் கூட இதை நம்பி ஆபீஸுக்கு நேரத்துக்கு போக முடியல... " என்று சலித்துக் கொண்டார்.


எதிரில் இருக்கும் பெண்... தன் காதலனுடன் போனில் சத்தமாக சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.


"You are always like that... I am fed up with you..."


மறுமுனையில் இருந்து என்ன பதில் வந்ததோ... அந்த அழகிய கண்ணிலிருந்து கண்ணீர்த்துளி... புறப்பட்டு... கன்னங்கள் வழியாக... பயணித்தது.


ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை.... ஒவ்வொரு குறை....


"குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா...".... 


ஒரு சிறு குழந்தையின் குரலில் இந்த பாடல் கேட்டு.... அந்தக் குரலின் சொந்தக்காரரை தேடினேன்....


கண்ணில்லாத தன் அம்மாவை அழைத்துக்கொண்டு.... கையில் ஒரு குழந்தையுடன்.... ஒரு எட்டு வயது சிறுமி.... பாடும் பாட்டு...


"குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை.."


அப்பா இல்லை...

அம்மாவுக்கு கண்ணில்லை.... கையில் குழந்தை.... யாருக்கும் உண்ண உணவு இல்லை.... பிச்சை எடுத்து உண்ண வேண்டும்...


ஆனால் அந்த குழந்தை பாடும் பாட்டு ...


"குறை ஒன்றும் இல்லை...

மறைமூர்த்தி கண்ணா... குறை ஒன்றும் இல்லை... கோவிந்தா...


"கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா...

கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா"


குழந்தை பாடிக் கொண்டே என்னருகில் வந்தது....

என்னை அறியாமல் என் கண்கள் கண்ணீர் கசிந்தது...


எழுந்து நின்றேன்... கையில் துழாவிய போது கிடைத்த... நூறு ரூபாய் நோட்டை... அந்த குழந்தையின் கையில் கொடுத்தேன்.... 


"வேண்டுவதை தந்திட வெங்கடேசன் நீ இருக்க.. 

வேண்டுவது வேறில்லை...

 மறை மூர்த்தி கண்ணா"* 


உண்ண உணவு... உடுக்க உடை ...

இருக்க இடம்....

 இந்த மூன்றையும் கொடுத்த இறைவனுக்கு நன்றி கூறிவிட்டு.... 

நான் இறங்க வேண்டியது மாம்பழம் ஸ்டேஷனில் இறங்கினேன்.


வெயில் தெரியவில்லை....

கையிலிருந்த பை கணம் தெரியவில்லை...💪


படி ஏற.... சிரமப்பட்டுக் கொண்டிருந்த...

ஒரு மூதாட்டியின் பையை வாங்கி அவருக்கு  உதவி செய்தேன்...😊


 மனம் குறைகள் அற்று... நிறைகள் நிரம்பி வழிந்தது...🙏

Comments

Popular posts from this blog

"கோலமாவு கோகிலா".

நன்றி

என்னுள் எழுந்த முதல் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்....