நன்றி

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று.🙏🏻

சொல்லாமல் விட்ட

நன்றியொன்று

பல்லிடுக்கில் சிக்கிக்கொண்ட

எடுக்கவியலா

உணவுத்துணுக்கென

பாடாய்ப்படுத்துகிறது😪

மனசுக்குள் மலர்ந்து

உரியவரிடம் வெளிப்படுத்தாத நன்றியொன்று

அமைதியான இரவில்

தகரத்தில் உராய்ந்து சப்தமெழுப்பும்

ஆணியென

உராய்ந்துகொண்டேயிருக்கிறது😭

நெஞ்சுக்குள் பூத்து

நெஞ்சுக்குள்ளேயே நின்றுவிட்ட நன்றி

ஒரு முள்ளென மாறி

சுருக் சுருக் எனக்

குத்திக்கொண்டேயிருக்கிறது😲

சொல்லியிருக்கவேண்டிய நன்றிதான்😌

நாக்கை அசைத்து சொல்லென மாற்றி

வெளிப்படுத்தியிருக்க வேண்டிய

நன்றிதான்😘

உரியவரிடம் சேர்ப்பிக்காமல்

உள்ளுக்குள்ளேயே

வைத்துக்கொண்டதில்

ஊதிப்பெருத்து கனக்கிறது🙆‍♀️

சுமக்கமுடியாமல்

நன்றியை

அவ்வப்போது தெரிவித்துவிடுங்கள்😚

சொல்ல வந்த நன்றியை

சொல்லாமல் வந்து

சுமந்துகிடப்பது பேரவஸ்தை😩

தூக்கம் வராமல்

சன்னல் திறந்து

வானத்தைப் பார்க்கிறேன்🥱

அத்தனை நட்சத்திரங்களும்

கேள்விக்குறிகளாகி

கேள்வி கேட்கின்றன😳

சொல்லாத நன்றியை.... சிறு தவணைகளாக இன்று சொல்ல ஆரம்பிக்கிறேன்.... என்றும் எங்கும் வியாபித்திருக்கும் பரம் பொருளே...நன்றி🤘

Comments

Popular posts from this blog

"கோலமாவு கோகிலா".

என்னுள் எழுந்த முதல் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்....