மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
Just for a relaxation 👍
ஐயா தர்மம் போடுங்கய்யா...
corona பாதிப்பு வந்த பிறகு இந்த மாதிரியான குரல்கள் கேட்டு காதுகள் பழகிவிட்டன. தினமும் யாரோ ஒருவர்...
இல்லை இரண்டு பேர் யாசகம் கேட்டு வருவது வழக்கமாகி விட்டது. யாசகம் கேட்பவர்கள் வறுமை நிலையைப் பார்த்து இல்லை என்று சொல்ல மனது வரவில்லை. நானும் சளைக்காமல் என்னால் முடிந்தவரை அஞ்சோ பத்தோ இருபதோ... கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றேன். இம்முறை கொடுக்கும் போது பக்கத்தில் நண்பர் பார்த்துக்கொண்டிருந்தார்.
Don't encourage these peple அப்படின்னு எனக்கு அட்வைஸ் பண்ணினார். இவங்களெல்லாம் பகல்ல வேவு பார்க்க வராங்க... நைட்ல திருடுவதற்கு பிளான் போடுவாங்க. நண்பர் கூறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. பசின்னு கேக்குறாங்க ஒரு பத்து ரூபாய் நம்ம கொடுத்தா நம்ம ரொம்ப ஒண்ணும் குறைஞ்சு போகப் போவதில்லை கடவுள் எனக்கு மூன்று நேரம் சாப்பிடுவதற்கு கொடுத்திருக்கிறார்... அவருக்கு நன்றி சொல்ற மாதிரி பசி என்று வர்றவங்களுக்கு ஒரு பத்து ரூபா கொடுப்பதில் தப்பில்லை. கொடுக்கணும்னு மனசு இருந்தா போதும்... கைல காசு இல்லாட்டியும்... நாம சாப்பிடுகிற சாப்பாட்டில் பாதி கொடுப்போம் அப்படின்னு தோணும். எனக்கு தேவைப்படும் போதெல்லாம் சாமி கொடுத்திருக்கிறார். நண்பருக்கு சாமிகளின் மேல நம்பிக்கை இல்லை. பேசிக்கிட்டு இருக்கும்போது செல் போன் சினுங்கியது. எடுத்துப் பேசினேன். மறுமுனையில் ராசி சில்க் கடையில் இருந்து போன்.
சார் நீங்க கிஷோர் தானே பேசுறது என்றது குரல்.
ஆமாங்க... என்ன விஷயம் சொல்லுங்க? இது நான்.
நீங்க மாதந்தோறும் கட்டிட்டு வந்த 1000 ரூபாய் சீட்டுக்கு.. நாலாவது மாதம் குலுக்கலில் பரிசு விழுந்திருக்கிறது. இனிமே நீங்க பணம் கட்ட வேண்டாம். என்றது குரல்.
நாலு மாசம் நாலாயிரம் தான் கட்டியிருக்கேன்..
இப்போ 12 ஆயிரம் ரூபாய்க்கு நான் ராசி சில்க்கில் எதுவானாலும் வாங்கிக்கலாம். இந்த விஷயத்தை பாரியாள் இடம் சொன்னவுடன்... அவள் கண்கள் 70mm.. சினிமா ஸ்கிரீன் மாதிரி... விரிந்தது.
கடவுள் கொடுப்பது எல்லாம்... உங்களுக்காக மட்டுமல்ல.... உங்கள் மூலமாக பிறருக்கும்தான்...🙏🏻
( கடவுள் இருக்காண்டா குமாரு) R kishore kumar S/o T.R.Raja
Comments
Post a Comment