"கோலமாவு கோகிலா".

        "மாலையில்... சில பழங்களை வாங்குவதற்காக... வெளியில் இருசக்கர வண்டியில் சென்றேன்.... எதிர்பாராத விதமாக... முன் சக்கரம் ஒரு கல்லில் மோதி வலது புறம் சரிந்து விழுந்தேன்... சடாரென்று வேகமாக வந்த கார் என்னை உரசிக் கொண்டு நிற்காமல் சென்றது.  "கிரேட் எஸ்கேப் uncle" பைக்கில் பாலோ செய்த இளைஞன் சொன்ன கமெண்ட்.  "ஏதோ புண்ணியம் செஞ்சிருக்கீங்க.. இல்லாட்டினா உங்களுக்கு நாளைக்கு பால்தான்"வழியில் சென்ற ஒருத்தர் சொன்ன வார்த்தை என் காதில் விழுந்தது. காலையில் நடந்த ஒரு சம்பவம் என் கண்முன்னே திரைப் படம் போல் ஓடியது.😌😌😌😌         இன்று ஞாயிற்றுக்கிழமை.. துயில் எழுந்தவுடன் (தூங்கி எழுந்தவுடன்)..... காலண்டரை பார்த்தேன்.... பொதுவாக வாரத்துக்கு இரண்டு நாட்கள் (கடா வாங்குவதற்கு முன்) நாள் குறிப்பை பார்ப்பது வழக்கம்.... புதன்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை.. அம்மா சொல்லிக்கொடுத்த வழக்கம்.... இன்றைக்கு சங்கடஹர சதுர்த்தி... மாமிசம் சாப்பிடக் கூடாது.... அம்மா படத்தை வணங்கி.. நன்றி  கூறிவிட்டு.... வீட்டின் முன் கதவை திறந்தேன்..                "கோலமாவு வாங்கலையோ கோலமாவு"........ தலையில் சுமையுடன்.....40 வயதுப் பெண்மணி...  "கோலமாவு காலி ஆயிடுச்சு.... கோலமாவு வாங்குங்க".... சமையலறையில் இருந்து மனைவியின் குரல்... கோலமாவு கோகிலாவுக்கு குரல் கொடுத்தேன்...(கோகிலா.. கதைக்காக நான் வைத்த பெயர்)... கோகிலாவின் நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன்..  மாதத்துக்கு ஒரு முறையோ.. இரு முறையோ... அவளிடம் கோலமாவு வாங்குவது வழக்கம். கால் படி பத்து ரூபாய்... நாலு கால் படி வாங்குவது வழக்கம்... என்னுடைய உதவி இல்லாமலே தலைச் சுமையை கீழே  இறக்கினாள் கோகிலா.... பொருளுக்கு பணம் பண்டமாற்றம் செய் தேன்.... அவள் முகத்தில் வேர்வை வழிந்து கொண்டிருந்தது... சுமையை ஏற்றும் முன்.... முந்தானையால் முகத்தை துடைத்துக் கொண்டாள்.           "ஏம்மா.... இப்படி வெயிலில்  அலையறீங்க.... வெயில் தணிந்த பிறகு வியாபாரம் பார்க்க கூடாதா?"   நான் கேட்ட கேள்விக்கு பதில் கூறுவதற்கு முன்.... எதிர் வீட்டில் இருந்து அவளுக்கு அழைப்பு...    "கையில காசு இல்லை அண்ணா.... உடம்புக்கு முடியல... நாலு தெரு சுற்றினால் தான் சாப்பாட்டுக்கு வழி." முகக் கவசம் இல்லை.... கைக்கு உறை  இல்லை..corona பற்றிக் கவலையில்லை. அவளுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று என் மனதில் தோன்றிய எண்ணத்தை அறிந்த என் மனைவி...""அவளுக்கு கொஞ்சம் பணம் கொடுங்கள்" என்று கூறினாள். அதற்குள் அவள் எதிர் வீட்டுக்கு சென்றிருந்தாள்... பர்சில் இருந்த 400 ரூபாயை கையில் எடுத்துக்கொண்டு... அவளை மீண்டும் அழைத்தேன்....    

        "இந்தாங்கம்மா..."..பணத்தை அவளிடம் நீட்டினேன். பணத்தைப் பெற்றுக் கொள்ளாமல் என்னை பார்த்தாள்... பார்வையிலே இந்தப் பணம் எதற்கு என்று கேட்பது போல் இருந்தது.... "ஏற்பது இகழ்ச்சி"... என்று அவ்வையார் கூறியதை அவள்  அறிந்திருப்பாள் போல. அவளை பிச்சைக்காரியாக்க நான் விரும்பவில்லை... அதே சமயம் அவளுக்கு உதவ எண்ணினேன்.        "வருகின்ற 5 மாதத்திற்கு நான் வாங்கப்போற கோலமாவு உண்டான பணம் இப்பவே கொடுத்துடறேன்... வாங்கிக்கோ" என்று பணத்தை அவள் கையில் திணித்தேன். பெற்றுக்கொண்டள்"ரொம்ப தேங்க்ஸ் அண்ணா.. நீங்க நல்லா இருக்கணும்". இப்பவும் அவள் முகத்தில் நீர் வழிந்தது. ஆனால்... அது வியர்வை இல்லை... 

அவள் கண்களில் வழிந்த ஆனந்தக் கண்ணீர்.  "கொடையிலிருந்து வேறுபட்டது ஈகை. திருவள்ளுவர் ஈகைக்கு இலக்கணம் வகுத்துள்ளார். வறியார்க்குஒன்று ஈவதேஈகை; மற்று எல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து என்னும் குறளில் பதில் உதவி செய்ய முடியாத ஏழைகளுக்குக் கொடுப்பதே ஈகையாகும்; பிற கொடைகள் யாவும் பயன் எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மையை உடையது என்கிறார். காலையில் செய்த சிறு புண்ணியமே மாலையில் என்னை காப்பாற்றியதோ. கோலமாவு கோகிலா என்னை காப்பாற்றி விட்டார்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💃💃💃💃💃💃

Comments

  1. தலைப்பும் நிகழ்வும் பொருத்தமாகிவிட்டது!!! இதற்கு முன்னும் நீங்கள் ஏழைக் குழந்தைகளுக்கு நோட்புக் வாங்கி கொடுத்த பதிவும் வாசித்தேன். இதுவும் அப்படியே. நல்ல விஷயம் செய்கிறீர்கள் சகோ.

    நான் உங்கள் தளம் ஓரிருமுறை வந்திருக்கிறேன் கருத்து இடாமல் சென்றுவிட்டேன். இன்று நண்பர் வெங்கட்ஜி அவர்கள் உங்கள் தளத்தை அவர் தன் தளத்தில் அறிமுகப்படுத்தியதும் நினைவுக்கு வந்தது.

    கீதா

    ReplyDelete
  2. https://venkatnagaraj.blogspot.com/2022/02/141-g.html

    இந்தத் தளத்தில்தான் உங்கள் தளம் அறிமுகமாகியிருக்கிறது

    கீதா

    ReplyDelete
  3. நன்றாக எழுதியிருக்கின்றீர்கள்...
    அன்பின் நல்வாழ்த்துகளுடன்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஒரு புயல் கரையை கடக்கிறது...

என்னுள் எழுந்த முதல் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்....

யார் அந்த நிலவு