ஒரு பக்க உ(க)தை

 Episode 1

சோணமுத்துக்கு தூக்கம் வரவில்லை...🙄

மெத்தையில் புரண்டு புரண்டு படுத்தான்...


மருந்துக்குக்கூட கொசு இல்லாத அறை....

குளிரூட்டப்பட்ட ஏசி அறை...

இருந்தாலும் தூக்கம் வரவில்லை....🤨


சிலருக்கு...

ஆண்டவன்  அனைத்தையும் வேண்டும் அளவுக்கு கொடுத்துவிட்டு....

உறக்கத்தை தர மறந்துவிடுகிறான்....

காரணம்...🤔 இறைவனுக்கே வெளிச்சம்....😳


நண்பர்களோடு ஒரு full அடித்த பிறகு வருவது அல்ல ஒரு நல்ல உறக்கம்....🤭


பிறகு...🤔


நமக்குப் பிடித்த... கருத்து ஒருமித்த... பெண்ணோடு சந்தோஷமாக அனுபவித்த கலவிக்கு பிறகு வருவதுதான் ஆழ்த   உறக்கம்....🤫


இதை நான் கூறவில்லை....😒


நல்ல கலவி..

ஒரு ஆழ்நிலை தியானத்திற்கு ஒப்பாகும் என்று

ஓஷோ கூறுகிறார்....🤥


அது சரி...


நம் கதையின் நாயகன்....

சோனமுத்தனுக்கு தூக்கம் வராததற்கு காரணம்.... மாலையில் அவனுக்கு வந்த phone call....


யாரிடம் இருந்து வந்த phone call...


சொல்லலாமா வேண்டாமா....🤔


சோனமுத்தன் என்னைப்பார்த்து முறைக்கிறான்😡


அவனை சமாதானப்படுத்தி விட்டு பிறகு அவன் கதையை தொடர்கிறேன்....😴


EPISODE 2


🤘🤘🤘


தூக்கம் என்பது...

இரவின் அதிசயம்.


அமாவாசையின் கும்மிருட்டு… 

பெளர்ணமியின் வெளிச்சம்… 

தனிமையின் ஆழம்… 

காதலின் மென்மை… 


இப்படி இரவின் சூழலை எப்போதாவது ரசிப்பதில் தவறில்லை. 


தூக்கத்துக்காக வடிவமைக்கப்பட்ட இரவு எனும் கொடையை எந்த ஒரு காரணத்திற்காகவும் வீணாக்குவது தவறு!... 



தூக்கம் என்பது பல்வேறு கட்டங்கள் அடங்கியது.


 N-REM Sleep, REM Sleep (Rapid Eye Movement) என்று பிரிக்கலாம். இவை உறக்கத்தின்போது சுழற்சி முறையில் நடைபெறும் நிகழ்வுகள். சுழற்சிக்கு அனுமதியே அளிக்காமல், விழிப்பு நிலையிலேயே இருப்பது உடலுக்குள் குழப்ப நிலையினை உருவாக்கும். மூளை செல்கள் தன்னை புதுப்பித்துக் கொள்வதற்கு உறக்கம் மிக முக்கியம். அனைத்து உறுப்புகளும் தங்களுக்கு இருக்கும் சில பிரச்னைகளை சரி செய்துகொள்ளவும் தூக்கம் அவசியம்.


அமெரிக்காவின் சுகாதாரம் மற்றும் மனித சேவைத் துறை 2007 ஆம் ஆண்டில் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, ஏறத்தாழ ஒவ்வொரு ஆண்டும் 64 மில்லியன் அமெரிக்கர்கள் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவதாக தெரிவித்தது.


 தூக்கமின்மை, ஆண்களைவிட பெண்களிடத்தில் 41% அதிகம் காணப்படுகின்றது.


ஓகே.... 


சோனமுத்தாவின் பிரச்சினைக்கு வருவோம்....


சோனமுத்தாவிற்கு வந்த போன் கால் எங்கிருந்து வந்தது என்று உங்களுக்குத் தெரிந்தால் உங்களுக்கும் தூக்கம் போய்விடும்....🤣🤣🤣


அது..... 

பல வருடங்களுக்கு பிறகு....


முன்னாள் காதலியிடம் இருந்து வந்த போன் கால்...


போன் கால் தாங்கி வந்த செய்தி....


"உங்களை...

நாளை காலையில் சந்திக்க விரும்புகிறேன்"....


சோனமுத்தாவின் உறக்கம் போனதற்கு இதுதான் காரணம்....


"என் காதலே.... 

என் காதலே.... 

என்னை என்ன செய்ய போகிறாய்....😇


(அவனை அறியாமலே.. மனத்திரையில் ஓடிய பாட்டு)


நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரண்டை கேட்கிறாய்....


சிலுவைகள் ....

சிறகுகள்.....

ரெண்டில் என்ன தர போகிறாய்...🤒


கிள்ளுவதை கிள்ளிவிட்டு ....

ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்.


காதலே நீ பூவெறிந்தால் .....

எந்த மலையும் கொஞ்சம் குழையும்...😭


காதலே நீ கல்லெறிந்தால்....

எந்த கடலும் கொஞ்சம் கலங்கும்...


இனி மீள்வதா... இல்லை வீழ்வதா...

உயிர் வாழ்வதா.... இல்லை போவதா.....

அமுதென்பதா... விஷமென்பதா.... உனை அமுதவிஷமென்பதா...🙄


காதலே உன் காலடியில் நான் விழுந்து விழுந்து தொழுதேன்....🙏🏻


கண்களை நீ மூடிகொண்டாய்....👀

 நான் குலுங்கி குலுங்கி அழுதேன்.....😭


இது மாற்றமா... தடுமாற்றமா....


என் நெஞ்சிலே பனிமூட்டமா....


நீ தோழியா இல்லை எதிரியா என்று தினமும் போராட்டமா ...🤔"


பாட்டு முடியும் தருணத்தில்.....

நித்திரை தேவி.... சோனமுத்தனை ஆரத் தழுவிக் கொண்டது....


சோனமுத்தனுக்கு காலையில் நடந்தது என்ன....?


விடியும் வரை காத்திருங்கள்....🤔🤫🤭


EPISODE 3


🤘🤘🤘


சூரியன்....

இருள் எனும் 

மாயையை விலக்கி

வெளியே வரும் முன்பே...

 கனவு உலகம் கலைந்து... பணிப் போர்வையை விலக்கி...

சுறுசுறுப்பாய் விழித்துக்கொண்டான் நமது சோனமுத்தன்...😊😊


அந்த அதிகாலையிலும் வைரமுத்துவின் முத்தான வரிகள் அவன் நினைவலைகளில் கலந்தது.


"காதலித்து  பார்,


உன்னை  சுற்றி  ஒளிவட்டம் தோன்றும் ,

உலகம்  அர்த்தப்படும்   ,

ராத்திரியில் நீளம் விளங்கும் ,

உனக்கும்  கவிதை  வரும் ,

கையெழுத்து    அழகாகும்  ,

உன்பிம்பம்  விழுந்தே கண்ணாடி  உடையும் ,

கண் இரண்டும் ஒளிகொள்ளும் ,👀



காதலித்து  பார் ...


காத்திருந்தால் நிமிஷங்கள்  வருஷம்  என்பாய்,

வந்துவிட்டால்  வருஷங்கள்  நிமிஷம்  என்பாய் ,

காக்கை  கூட உன்னை  கவனிக்காது ,

ஆனால்  இந்த  உலகமே  உன்னையே  கவனிப்பதாய் உணருவாய் ,

வைற்றுகும் தொண்டைக்கும் உருவமில்லா  உருண்டை ஒன்று உருள காண்பாய்,

இந்த  வானம் ,

இந்த அந்தி ,

இந்த பூமி ,

இந்த பூக்கள்  எல்லாம்  காதலை கௌரவிக்கும் ஏற்பாடு என்பாய்,🤭


காதலித்து  பார் ...


வானத்தில் கைவிரல்களால் கவிதை எழுதி மேகத்திடம் கொடுத்து தூது விடுவாய்...🤫🤫🤫


(கடைசி வரிகளுக்கு வைரமுத்து பொறுப்பல்ல🤣🤣🤣)


சோன முத்தன்..


தனக்குப் பிடித்த உடை அணிந்து கொண்டான்....


காதலியின் முகவரியை குறித்துக்கொண்டு....

ஓலாவில் செடான் கார் புக் செய்து...

காதலியின் வீட்டை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விட்டான்...


சோணமுத்துவின் காதலி...💃🏼

நயன்தாராவின் ஜீரோ சைஸ்...

குஷ்புவின் கன்னங்கள்....

தமன்னாவின் நிறம்...

மீனாவின் கண்கள்...

இந்தியாவின் பெண்களின் சராசரி உயரத்தை விட ....ஒரு அடி கூடுதலான உயரம்...


மொத்தத்தில் அவள்...

போதை தரக்கூடிய... விஸ்கி ...பிராந்தி.... ரம்... எல்லாவற்றையும் சரிவிகிதத்தில் கலந்த 🍸 காக்டெய்ல்💃🏼...


அவன் சிந்தனை கேட்ப காரில் கசிந்த பாடல்....


"விழியில் விழுந்து இதயம் நுழைந்து

உயிரில் கலந்த உறவே....


இரவும் பகலும் உரசி கொள்ளும்

அந்தி பொழுதில் வந்து விடு...

அலைகள் உரசும் கரையில் இருப்பேன்

உயிரை திருப்பி தந்து விடு....


உன் வெள்ளி கொலுசொலி வீதியில் கேட்டால் 

அத்தனை ஜன்னலும் திறக்கும்....


நீ சிரிக்கும் போது பௌர்ணமி நிலவு அத்தனை திசையும் உதிக்கும்....


நீ மல்லிகை பூவை சூடிக்கொண்டால் ரோஜாவிற்கு காய்ச்சல் வரும்....

நீ பட்டு புடவை கட்டிக்கொண்டால் பட்டுப்பூச்சிகள் மோட்சம் பெறும்....


விழியில் விழுந்து இதயம் நுழைந்து

உயிரில் கலந்த உறவே..

 

இரவும் பகலும் உரசி கொள்ளும்

அந்தி பொழுதின் போது

அலையின் கரையில் காத்திருப்பேன்

அழுத விழிகளோடு

எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்

உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம்..."


பாட்டு முடியும் தருவாயில் காதலியின் வீட்டை அடைந்தான் சோனமுத்தான்...


அழகான வீடு....

நல்ல ரசனை உள்ளவர்களுக்கு மட்டும்தான்... இந்த விதமான அழகான வீட்டை கட்ட முடியும்...


"நாய்கள் ஜாக்கிரதை"

என்று எழுதி இருந்த போர்டை அலட்சியம் செய்து ....

கதவருகே நின்று... மூச்சுக்காற்றை நிதானமாக ஆக்கிக்கொண்டு...

காலிங் பெல்லை அழுத்தினான்....


Who is this?"....

நுனி நாக்கில்.... உள்ளிருந்து ஒரு குரல்...


நான்தான்... சோனமுத்தான்..."


(கதை ஆசிரியரே... எனக்கு ஒரு நல்ல பெயர் வைத்திருக்கக் கூடாதா )🤘🤘🤘


 

 


அவன் எதிர்பார்த்தது போல் கதவு திறக்கப்படவில்லை....


Wow....Just a minute முத்து....I am brushing my teeth"


அந்தக் காந்தக் குரல் இன்னும் மாறவே இல்லை....


சோன முத்தன்....

 தன் கைகளை விரித்து... வாயின் முன்னே வைத்து... காற்றை ஊதி... தன் வாயிலிருந்து நறுமணம் வருகிறதா என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டான்....😉


சோனமுத்தனக்கு பொறுமை இல்லை....


சற்றுத்தள்ளி இருந்த ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தான்....


நிலவுக்கு ஒப்பான வட்டமான முகம்...

இருந்தும் இல்லாதது போல் தோன்றும் ஒரு சின்ன பொட்டு...

காதலின் முகம் கண்ணில் தட்டுப்பட்டது...


அதே நேரத்தில்...

ட்ரிங் ட்ரிங்"... காதில் விழுந்தது அலைபேசியின் குரல்...


யாரது....

சிவ பூஜையில் கரடி...


அவனது வீட்டின் land லைனில் இருந்து அழைப்பு...


அலைபேசியை காதில் வைத்து" ஹலோ " என்றான் சோனமுத்தன்....


ஹலோ...

தாத்தா எங்க இருக்கே?...

வெளிய போற அவசரத்துல பல் செட்டை மாட்டிக்காம போயிட்ட..." 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 மறுபக்கம்

மழலை மாறாத பேத்தியின் குரல்....


90 வயது கிழட்டு சோணமுத்தனக்கு... அப்பொழுதுதான் கண்ணில் பட்டது.... காதலி...அவளுடைய கையில் .....அவளுடைய பல் செட்டை வைத்து.... பல் துலக்கிக் கொண்டிருந்தது......


(ஓ...🤔 இதுதான் brushing my teeth இன் அர்த்தமோ)...


இதற்கு மேல் கதை நீடிக்க வேண்டுமா?


ஒரு பக்க உ(க)தை

இதுதான் ஒரு பக்க க (உ)தை.

Comments

Popular posts from this blog

"கோலமாவு கோகிலா".

நன்றி

என்னுள் எழுந்த முதல் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்....