பயணிகள் கவனத்திற்கு

 "பயணிகள் கவனத்திற்கு"

தொடர்-1


எனது அடுத்த படைப்பின் தலைப்பு....... நண்பர்களின் வேண்டுதலுக்கு இணங்கி..... ஏதாவது ஒன்றை பற்றி... எழுத வேண்டும் என்ற எண்ணம் தலைதூக்க...ஒரு ரயில் பயணத்தைப் பற்றி... எழுத முற்படுகிறேன். என்னோடு பயணிக்க விரும்புகிறவர்கள்... இன்றைக்கே முன்பதிவு செய்து கொள்ளலாம்....  🤪                 பயணிகள் கவனத்திற்கு, வண்டி எண் 6669, சென்னையிலிருந்து பாம்பே வரை செல்லும் பாம்பே எக்ஸ்பிரஸ், தடம் எண் 6 ல் இருந்து 10 மணி 40 நிமிடத்திற்கு புறப்படும். யாத்ரிகா க்ருபயா ஜாயங்கே, காடி நம்பர்….”.....

இம்முறை நான் பயணிக்க இருப்பது.... சென்னை டு புனே.. ஜன்னலோரத்தில் இருப்பிடம்... என்னுடைய இருப்பிடத்தின் எதிரில்..... இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க... சற்றும் யாரையும் கண்டுகொள்ளாமல்... தான் கையில் வைத்திருக்கும் புத்தகத்திலே புதைந்து இருக்கும்.. ஓர் இளைஞன்....(ம்.. இளம் பெண்ணாக இருந்திருந்தால்.. பயணம் சிறப்பாக  இருந்திருக்கும்😉.... இது சோணமுத்தனின் மைண்ட் வாய்ஸ்😁).... அவர் வைத்திருந்த புத்தகத்தின் தலைப்பு.....         "WHO AM I"....by தயானந்த சரஸ்வதி.... இவர் தான் நம் கதையின் ஹீரோ.... ஹீரோவுக்கு ஒரு நல்ல பெயரை நீங்கள் சொல்லுங்கள்.... கதையை நாளை தொடங்குகிறேன்🤣🤣🤣🤣🤣🤣....💃💃💃💃💃💃



தொடர்-2

“வாழ்க்கையில் பொருட்களை சேமிக்காதீர்கள்நினைவுகளை சேமியுங்கள்.. 💃💃💃💃💃💃பயணங்களால் மட்டுமே இவை சாத்தியம் ஆகும்.  சிறிய வயது முதல் சலிக்காத விஷயங்கள் ஏராளமாக உள்ளன, அதில் இந்த ரயில் பயணங்களும் ஒன்று.                        வாழ்க்கையில் எல்லோருக்குமே பயணம் மேற்கொள்வது பிடித்தமான ஒன்று தான். ஆனால் நம்முடைய பெரும்பாலான பயணங்கள் கோவில், பார்க், விலங்குகள் சரணாலயம், போன்றவற்றை ஓட்டியே தான் அமைந்திருக்கும். மலைவசஸ்தளங்களுக்கு சென்றாலும் ஒரு விடுதிக்குள் தங்கி காலை முதல்,மாலை வரை ஊர் சுற்றி விட்டு ஷாப்பிங் முடித்து தூங்குவதை தான்🥱 வழக்கமாகவே வைத்திருப்போம். இது தான் பயணம் என்கிற எண்ணத்தை மாற்றி இயற்கையை அதன் போக்கிலே போய் ரசித்தால் எப்படி இருக்கும் ?😆


நடுக்காட்டில் டெண்ட் அமைத்து, தங்கும் வசதி,

பரந்து விரிந்த மலைத்தொடர்கள், எங்கு நோக்கினாலும் பச்சை பசேலென்று தேயிலை தோட்டங்கள், முகத்தை தழுவிச்செல்லும் ஜில்லென்ற காற்று, காலுக்கு கீழே சரிந்த பள்ளத்தாக்கு, கையில் சூடான தேனீர்,☕  துணைக்கு நண்பர்கள்👩‍🦰👨‍🦰 இவையெல்லாம் இணைந்த பகல் மற்றும் இரவு பொழுது வாய்த்தால் எப்படி இருக்கும்? 🤔.... இப்படிப்பட்ட ஒரு பயணத்தை பற்றி நான் எழுதப்போகிறேன் என்று நீங்கள் எதிர்பார்த்தால்.... உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்...😛.              நாம் பயணம் செய்வது வெறும் பொழுது போக்காக மட்டுமே இருக்க முடியும் என்று இதுவரை நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தீர்கள் என்றால் அந்த எண்ணத்தை மாற்றி விடுங்கள். ஆம் பயணங்கள் உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் நமக்கு பெரிதும் உதவுகிறது என்கின்றன ஆய்வுகள்.                  ஒரே இடத்தில் தேங்கி நிற்கும் நீர் துர்நாற்றம் வீசும். ஓடி கொண்டிருக்கும் நீர் தூய்மையாய் இருக்கும். அதுபோல அறிவைத் தேடி ஓடுவோரின் பயணம் மணம் வீசும்; குணத்தைப் பெறும்.👌🏻..... என்னுடைய வாழ்க்கையில் "ஆன்மீக தேடல்கள் போல" பயணங்களும் எனக்கு முடிவதில்லை... அது ஒரு தொடர்கதை... அப்படிப்பட்ட ஒரு பயணத்தை பற்றி.... நான் எழுத முற்படுகிறேன்.... நான் எழுதுவது கடிதமோ கட்டுரையோ அல்ல... என் எண்ணம்...... சிறுசிறு உணர்வுகளையும்... பயணத்தின் போது கண்ணில் பட்ட காட்சிகளினால் ஏற்பட்ட தாக்கத்தையும்.... மறக்க முடியாத நிகழ்வுகளை பற்றியும்.... எழுத்து வடிவில் உங்களுக்காக....("சோணமுத்தா..... முன்னுரை போதும் டா.... கதையை ஆரம்பிடா....." உங்கள் மைண்ட் வாய்ஸ் என் காதில் கேட்கிறது...) சித்தார்த் alias சிபி.... என் கதாநாயகனின் பெயர்..😉............ பச்சை விளக்கு காட்டியாகிவிட்டது நம்ம குரூப் பிரண்ட்ஸ் எல்லாரும்  ட்ரெயின்ல ஏறி அமர்ந்து விட்டார்களா 😆  ரயில் பெட்டிகளின் சக்கரங்கள் சுழல ஆரம்பிக்கின்றன.... "டமால்"....😲😫😢😭                        💃💃💃💃💃💃(கதை இன்னும் ஆரம்பிக்கவில்லை அதுக்குள்ள சஸ்பென்ஸ்சா🤔 சொந்தக்கதை எழுதனும்னா😆 அடிக்கடி பிரேக் வேணும்...   பிரியதர்ஷினி Mam🤪)

தொடர்-3

                 டமால் என்ற சத்தத்துடன்... கீழே விழுந்தது...  அப்பர் பெர்த்தில் வைத்திருந்த... நம்முடைய ஹீரோ சிபியின் சூட்கேஸ்.🙆‍♂️. நல்ல வேளை அது யாருடைய  தலையிலும் விழவில்லை..🤭.( பார்டரில் தப்பித்தேன்...a great narrow escape)😁... ஆனால் விழுந்த வேகத்தில் பெட்டி... வெகுநாட்களாக பசியோடு இருக்கும் முதலை போல் வாயை திறந்தது.😴.. திறந்த பெட்டியிலிருந்து வெளியே சிதறி விழுந்தன பிரவுன் சுகர்... (சாரி...🤭 பிரவுன் சுகர் என்று தவறுதலாக சொல்லிவிட்டேன்)... வெளியில் வந்து விழுந்தது எண்ணிக்கை அடங்காத... பிரவுன் கவர்கள்...🙄 ஒவ்வொரு கவரில் மேலே... சில நபர்களின் பெயர்கள்... மற்றும் ஊர் பெயர்கள் எழுதப்பட்டு இருந்ததை என் கண்கள் படம் எடுத்துக் கொண்டது👀சிபி... அவசர அவசரமாக... எல்லோரிடம் பொது மன்னிப்பு கேட்டுவிட்டு... வெளியில் வந்து விழுந்த  கவர்களை... மறுபடியும் பெட்டியில் வைத்து... தான் உட்கார்ந்து இருந்த இருப்பிடத்தின் கீழே... தள்ளிவிட்டார். பிறகு மறுபடியும் அவர் கையில் இருந்த who am I புத்தகத்தில் மூழ்கி விட்டார்.🙇‍♀️ போதி அடைந்த புத்தனை போல் அமைதியான அவருடைய போக்கு... எனக்கு அவரைப் பற்றி அறிந்து கொள்ள ஆசை... சந்தர்ப்பத்திற்காக நானும் காத்திருந்தேன்🙄.நானும்  நண்பரும் (அருகே அமர்ந்திருந்தவர்) வாழ்க்கைக்கு  பல   உதவிகரமான விஷயங்களை பேசிக்கொண்டே சென்றதனால் சென்னையை கடந்து சென்றதே தெரியவில்லை.


பேசி கொண்டே வந்த நண்பர் சில நிமிட இடைவெளியில் தூங்கி போனார். அவர் தூக்கம் வரவில்லை என்பதற்காக என்னிடம் பேசினாரா? பேசுவதற்காக சிறிதுநேரம் தூக்கத்தை ஒத்தி வைத்தாரா? இது அவருக்கே தெரிந்த உண்மை. அனேகமாக நானும், நமது ஹீரோ சிபியும்  தவிர அனைவரும் முகமும் தூக்கத்தால் நிரம்பி இருந்தது.


அரக்கோணம் தாண்டி டிரெயின் இன்னும் வேகம்மெடுத்தது. அந்த வேகமான நேரத்தில் சின்ன சின்னதாய் மழை  தூரல்கள் ஜன்னல் தாண்டி என் கைகளில் பட்டு அப்படியே காணமல் போயின… எனக்கு அது சுகமான அனுபவமாக தோன்றியது. இன்னும் சிறுது நேர பயணத்திற்கு பிறகு டிரெயின் வேகத்தை போல மழையின் வேகமும் அதிகமாயின. அடுத்த சில நிமிடங்களில் ஜன்னல் கதுவுகள் சாத்தும் கிர்ச் கிர்ச் சப்தகளுக்கிடையே அனைத்து கதவுகளும் மூடப்பட்டன…என் ஜன்னலை தவிர.


 தன்னை மறந்து தூங்கும் மனிதன் எப்படி விழித்து கொள்கிறான்…மேலும் அடுத்த சில நிமிடங்களில் ஜன்னல் கதவுகளை சாத்தி விட்டு மறுபடியும் தூங்க போவது புரியாத ஒன்றுதான். அதை விட ஆச்ரியம் எப்போதாவது பெய்யும் மழையை ரசிக்கவும் அதன் துளிகள் ஜன்னல் தாண்டி உள்ளே வந்து அவர்களின் மடி மீது விழ அனுமதி மறுக்கும் மனிதர்கள் எனக்கு எப்போதும் ஆச்சரியமான மனிதர்கள்தான். மனிதர்களின் பயணம் இப்படி தூக்கத்திலே கடந்து போவது வருத்தம்தான்.


 மழை இன்னும் வேகமாய் பெய்ய ஆரம்பித்தது. வேறு வழியில்லாமல் நானும் கண்ணாடி ஜன்னல் கதுவுகளை மூடி  விட்டு வெளியே விழும் மழையை வேடிக்கை பார்த்தேன். மழை இப்போது ஜன்னலுக்கு வெளியே …ஜன்னல் அருகே என் முகம் வைத்து பார்கிறேன். என்னை நனைத்து விடும் தூரத்தில் மழை. என்னை நனைத்து விட முடியாமல் ஜன்னலுக்கு வெளியே விழுகின்றன… அந்த ஆனந்தம் என் தூக்கத்தை மழை  தூக்கி வெளியே போட்டுவிட்டது…


சிறிது நேரத்துக்குப் பிறகு.... மழை வேகம் குறைந்து சின்ன துரல்கள் மட்டுமே விழுந்தன… மறுபடியும் என் ஜன்னல் கதவு மட்டுமே திறந்தது…


எல்லா நிறுத்தங்களிலும், நமது கதாநாயகன் சிபி... அவசர அவசரமாக பெட்டியைத் திறப்பதும்... அதில் சில பிரவுன் கவார்களை கையில் எடுத்துக்கொண்டு... கீழே இறங்குவதும்... அந்தக் கவர்களை சில மனிதர்களிடம் கொடுப்பதுமாக இருந்தார். இரவு நேரத்தில் சுறுசுறுப்பாக அவர் இயங்கிக் கொண்டிருப்பது எனக்கு விசித்திரமாக இருந்தது.       சில நிறுத்தங்களை தாண்டிய பிறகு... மழை இல்லை. வறண்ட காற்று மட்டுமே முகத்தில் வந்து அடித்தது… மழை இல்லாத அந்த நேரம்  எனக்கு தூக்கத்தை வரவழைத்தது… கடிகார நேரம் அதிகாலை 3.20 am  காட்டியது. அடுத்த சில நிமிடங்களில் நானும் எல்லா மனிதர்கள் போல தூங்க கண்களை மூடினேன். அப்படியே தூங்கி போனேன்.🥱

What is in store for me tomorrow..wait and see my friends.🧐🤓😎


தொடர்-4

 "ஆடுகிற ஆட்டமும் ஓடுகிற ஓட்டமும் ஒருநாள் ஓயும் போது கூடுகிற கூட்டம் தான் சொல்லும் நீ யார் என்பதை...". பயணங்கள் முடிவதில்லை...                 💃💃💃💃💃💃.        நான் கண்விழிக்க👀 முயற்சிக்கிறேன்... முடியவில்லை....😫 மறுபடியும் சிரமப்பட்டு முயற்சிக்கிறேன்... கண்களின் முன்னே சில பிம்பங்கள்..👩‍⚕️👨🏻‍🍳👨‍💼👨‍🏭. நான் எங்கே இருக்கிறேன்...🤕 இங்கு எப்படி வந்தேன்.😨... என் கண்முன்னே ஓடிக் கொண்டும்... என்னைச் சுற்றி நிற்பதும் யார்...🚶🏻‍♀️🚶‍♂️🕴️👩‍🦯.... "எல்லோரும் வாங்கோ... ஜாக் கண் திறந்துவிட்டார்".....  யாரோ .... யாரையோ.... கூப்பிடுவது என் காதில் விழுந்தது.👂 எனக்கு... என்னையே யார் என்று தெரியவில்லை.😢 சுற்றியிருப்பவர்கள் பேசியதன் மூலம்.... என் பெயர் ஜாக் என்பது தெரிந்தது.  ஜாக் என்பது ஆணின் பெயர்...🤔 ஆகையால் நான் ஒரு ஆண் என்று உணர்ந்தேன்.... என் உடல் உறுப்புக்களை என்னால் உணர முடியவில்லை... எனக்கு கைகால் இருக்கிறதா.... கழுத்தைக் கூட  திருப்பிப் பார்க்க முடியாத நிலை🙄....யாரோ வெளியில் இருந்து விட்டெறிந்த கல் என் நெற்றிப் பொட்டில் பட்டு எனக்கு இந்த நிலைமை ஆனதாக...என்னை விசாரிக்க வந்த உறவினர்கள் இடம் கூறிக் கொண்டிருந்தார் ஒரு பெண்👩‍⚕️. அவள் என் மகளா?                 என் மனைவியா? அல்லது என் தாயா?   எனக்கு என்ன வயது ? ஒன்றுமே புரியவில்லை. (சோனமுத்தா😉 போச்சா 😁)     "ஹொவ் டு ஃபீல் ஜாக்?".. டாக்டர் கேட்ட கேள்வி காதில் விழுகிறது.... நான் பதில் கூற விளைகிறேன்... "கர்...மூர்..."... என்ற சத்தம் தான் எழுகிறது... யாராவது கண்ணாடியை காட்டுங்கள்.... நான் என்னை யார் என்று தெரிந்து கொள்கிறேன்.... இதோ அந்த அழகான பெண்.😘.. என் அருகில் வந்து... செல்பி போட்டோ எடுக்க முனைகிறாள்... கேமராவில் என் முகம்.... ஒஹ்... நோ.... என்ன.... நான் ஒரு நாயா...?🙀 அந்தப் பெண் என்னை அன்பாக தடவிக் கொடுக்கிறாள்... "who am I?... என்னுள் அந்தக் கேள்வி எழுகிறது. "யூ are that consciousness...  which makes you aware of everything".... யாரோ படிப்பது என் காதில் விழுகிறது.... "சாய்........(chai☕🍵...)சாய்..." பிளாட்பார்மில் டி விற்கும் குரல்... மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தேன்... வெயில் சுள்ளென்று முகத்தில் அடித்தது... நமது கதாநாயகன்.... காலை எழுந்து... காலைக் கடன்களை முடித்துவிட்டு.... புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தார்....🙇‍♂️ இம்முறை அவர் வாய் விட்டு படித்துக் கொண்டிருந்தார்..நல்லவேளை நான் கண்டது கனவு.... நான் நாய் இல்லை மனிதன்....சிபி புத்தகத்தை பார்த்து படித்த வரிகள் தான்..."you are that consciousness...  which makes you aware of everything".     ஜன்னல் வழியே வெளியே பார்க்கும் போது டிரெயின் Dound ரயில்வே ஸ்டேஷனில் நின்றுகொண்டிருந்தது. ராம் சார் கீழிறங்கி எல்லோருக்கும் ப்ரேக் ஃபர்ஸ்ட் வாங்குவதற்காக சென்றிருந்தார். "இங்கே காப்பி நன்னா இருக்கு... 🙂" இன்று அம்புஜம் மாமி கூட..."எனக்கு😟" என்று  புயல் Mam கேட்பது என் காதில்  விழுந்தது.... நான் எழுந்து முகத்தை கழுவி கொண்டு வருவதற்குள்... நம் கதாநாயகன் அவருடைய ஜன்னலோர  இருக்கையில் இல்லை.....     அவர் எங்கே? Who is he?     follow me..to know         🤣🤣🤣🤣🤣....       💃💃💃💃💃💃


தொடர்-5

பயணங்கள் முடிவதில்லை தொடர்கிறது. 

 ஐயம் இட்டு உண்                

Where is he?         Who is he?....         நடு இரவில்... சரியாக மூடாமல் விடப்பட்ட குழாயில் இருந்து சொட்டும் நீர்... இரவில் digital  சௌண்டில்... நம்மை தொந்தரவு செய்யுமே... அது போல... நமது ஹீரோ...அவருடைய ஜன்னல் சீட்டில் இல்லாதது என்னை தொந்தரவு செய்தது.🙆‍♂️.. எனது முகத்தில் படர்ந்த கலவரத்தை கண்டு.... புயல் Mam..."நீங்கள் யாரைத் தேடுகிறீர்கள் என்று எனக்குத் தெரியும்.... அதோ அவர்".👉.. என்று அவர் சுட்டு விரலால் சுட்டிக் காட்டிய வழியே என் கண் பார்வையைச் செலுத்தி... சிபி.. நின்றிருந்த இடத்தை கண்டு கொண்டேன்.🧍‍♂️ வழக்கம்போல் அவர் கையில் ஒரு பிரவுன் கவர்.அந்தக் கவரை எதிரில் நின்ற ஒரு பெண்ணிடம் கொடுத்துக் கொண்டிருந்தார். அவர்களுடைய முக அசைவையும் கை அசைவுகளையும் கண்டு அவர்கள் என்ன பரிமாறிக் கொண்டார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் மனதுக்குள் ஒரு சந்தேகம் எழுந்தது. சிபி  drugs வியாபாரத்தின் தலைவனாக இருப்பானோ...🤔. நான் ஒரு சிபிஐ ஆபீஸர் மனத்தோடு ரயில் விட்டு இறங்கினேன்.🧐."Train இங்கே இன்னும் பத்து நிமிடங்கள் தான் நிற்கும்" என்று சுதா மேடம் கூறியது என் காதில் விழுந்தது.சுதா  மேடம் கூறியதை காதில் வாங்கிக் கொண்டதன் அடையாளமாக அவர்களைப் பார்த்து தலையை ஆட்டிவிட்டு சிபியை நோக்கி நடக்கத் தொடங்கினேன். "சீரடி கோயில் செல்பவர்கள் இங்கு இறங்கி வேறு ஒரு ட்ரெயின் ஏறி போவார்கள்" என்று சுதா Mam... கணபதி சார் கிட்ட சொல்லி அதைக் காதில் வாங்கிக் கொண்டே  கீழிறங்கி  .....   சிபி நிற்கும் இடத்திற்கு அருகாமையில்... செல்லும்பொழுது... பிளாட்பாரத்தில் வாங்கிய இட்லியுடன் ஒரு நாயின் முன்னே நின்று கொண்டிருந்தார் சிபி.                    "ஜாக் எப்படி இருக்கீங்க?😏 இட்லி சாப்பிடுறீங்களா?😠.. என்று  சிபி நாய் (சாரிடம்)🙀 பேசிக்கொண்டே..he was feeding the dog.               "ஜாக்".... என் கனவில் வந்த நாயின் பெயர். எனக்கு ஒன்றும் புரியவில்லை... சிபி நல்லவரா? கெட்டவரா?... டிரெயின் புனே சென்றடைவதற்குள்... கண்டுபிடிக்க வேண்டும். புயல் Mam... சுதா Mam... Kanchana Mam... லலிதா Mam... அனைவரும் நான் யோசனையில் ஆழ்ந்து இருப்பதை உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.                "அடுத்த நிறுத்தம் புனே ஸ்டேஷன்... நாம் அனைவரும் அங்கே இறங்கவேண்டும்....pl pack your belongings and be ready " என்று சுதா Mam... நம் நண்பர்கள் அனைவருக்கும் கூறி கொண்டிருந்தார். புனே ஸ்டேஷனில் நான் நினைத்தது ஒன்று ....நடந்தது ஒன்று...😇...நடந்தது என்ன.  😳(இப்படியே எவ்வளவு நாள் தான் நான் சஸ்பென்சை மெயின்டெய்ன் பண்ணுவது😉😩)

தொடர்-6

 திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்... திருட்டை ஒழிக்க முடியாது.  பயணங்கள் முடிவதில்லை... 💃💃💃💃💃💃 

ரயில் DOUND ஸ்டேஷனில் இருந்து... முழு ஆட்டை 🐐முழுங்கிய மலைப்பாம்பு போல்... ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது. எல்லோரும் அவரவர் இருக்கையில் அமர்ந்தார்கள்.🙈🙉🙊. சுதா Mam... புனே நகரை பற்றி... அவருக்கு தெரிந்தவற்றை... அவருடைய பாணியில்... நல்ல அபிநயப் தோடு.. வர்ணித்துக் கொண்டிருந்தார். நம் நண்பர்கள் எல்லோருடைய கவனமும் சுதா மேடத்திடம் இருந்தது. என்னுடைய கவனம் சிபியின் பெட்டியின் மேல்  இருந்தது.           சிபி பெட்டியில் வைத்திருப்பது பிரவுன் சுகர் நிரப்பப்பட்ட பிரவுன் கவரா? ரயில் புனே நகரை அடைந்து விட்டால் நிச்சயமாக இவரை போலீசில் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்று மனதில் கங்கணம் கட்டிக் கொண்டேன்.  என் மன ஓட்டத்தை அறிந்த... என்னருகில் அமர்ந்திருந்த புயல் மேடம். ..........         . "It cannot be a drug...I mean ..it cannot be brown sugar"... என்று  உறுதியாக கூறினார். நான் மேடத்தை வியப்புடன் பார்த்தேன்.     "Yes...I know how it smells.. நான் போதை தடுப்புப் பிரிவில் வேலை செய்யும் பொழுது...I have smelt it". புயல் மேடத்தின் வார்த்தையில் உறுதி இருந்தது.       சிபி... தான் படித்துக்கொண்டிருந்த Who am I புத்தகத்தின்🤡 கடைசிப் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தார். நான் சிபியிடம் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டேன். "சார் இந்த புத்தகத்தை படித்து முடித்து விட்டீர்களா ?... இதுல தயனந்த சரஸ்வதி என்ன சொல்கிறார்?" என்று நான் கேட்ட கேள்விக்கு ஒரு புன்முறுவலை பரிசாக கொடுத்தார். நான் அவருடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். பதில் கிடைக்காமல் விடமாட்டேன் என்று அறிந்த அவர் பேச ஆரம்பித்தார்.            *Where there is a creation...there is a creator...there cannot be any creation without a creator..and the creator knows the purpose of his creation and this jagat is created by God...the creator            இந்த பதிலைக் கேட்டு... ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனிடம்... பூலியன் அல்ஜிப்ரா வை பற்றி பேசினால் எப்படி முழிக்குமோ... அப்படி முழித்தேன்.🙄   நான் அடுத்த கேள்வி கேட்பதற்கு முன்... ரயில்... புனே ஸ்டேஷனை அடைந்ததற்கு அடையாளமாக... தன் வேகத்தைக் குறைத்து... சிறு குழந்தை நடை பயின்றது போல்🕺.. சிறிது ஆட்டம் கட்டிவிட்டு நின்றது.            அதே நேரத்தில்... நாங்கள் இருக்கும் கம்பார்ட்மெண்டை நோக்கி... சில காக்கி தொப்பிகள்... வந்து கொண்டு இருப்பதை என்னால் தெளிவாக பார்க்க முடிந்தது👀. சிபி தன்னுடைய பெட்டியை திறந்து பார்த்து அதில் ஒன்றும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு... மற்ற பைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்..(போலீஸ்💂‍♂️ நம் கதாநாயகனை கைது செய்தார்களா?🧐 எனக்கும் அறிய ஆசை...😳)... பின்குறிப்பு: ரொம்ப கஷ்டப்பட்டு ரொம்ப நேரம் கண்விழித்து எழுதி இருக்கேன்... தவறு இருந்தால் மன்னிக்கவும்)

தொடர்-7

 பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்

சாமிக்கு🙏🏻 நிகர் இல்லையா

பிறர் தேவை அறிந்து கொண்டுவாரிக்கொடுப்பவர்கள்

தெய்வத்தின் பிள்ளை இல்லையா💪💃💃💃💃💃💃

பயணங்கள் முடிவதில்லை தொடர்கிறது... காக்கிச் சட்டைகள் 💂‍♂️💂‍♂️💂‍♂️💂‍♂️💂‍♂️ஐந்து பேர்... எல்லா கம்பார்ட்மெண்ட் களையும் கடந்து... நாங்கள் இருக்கும் கம்பார்ட்மெண்டில் வந்து நின்றார்கள்... அந்த 5 ஜோடி கழுகுக் கண்களும்...  யாரையோ தேடிக்கொண்டு இருந்தது.... ஐந்தில் ஒருவர்💂‍♂️பயணிகள் ரயிலை விட்டு இறங்கும் முன்... எதிர்நீச்சல் போட்டு.. நேராக சிபியிடம் வந்தார்... என்னுடைய மனதில் மகிழ்ச்சி..😆. (மாட்டிக்கொண்டான் மகாதேவன்).. "சபாஷ் கிஷோர்" . என்னுடைய தோள்களை நானே தட்டிக்கொண்டேன்...          கிஷோர் சார்... நீங்க சொன்ன மாதிரி...இவர் ஏதோ ஒன்றை கடத்தி இருக்கிறார் போல" என்று என் காதில் கிசுகிசுத்தார் காஞ்சனா Mam👂.   மழை வரும் நேரத்தில்... பலத்த காற்று அடித்து... மேகங்கள் கலைந்து சென்றது போல்... என்னுடைய மகிழ்ச்சியும்... சிறிது நேரத்திற்குள் தொலைந்து போனது.😩.    Glad to meet you and happy to welcome you to Pune Sir... வந்த காக்கிச்சட்டை சிபியிடம் கை குலுக்கிக் கொண்டார்🤝.  Who is he ?...why the police is welcoming him?...Thousand dollar question என் மனதில் தோன்றி மறைந்தது.😢😳🤔.             வரவேற்ற காக்கிச்சட்டை... சிபியின் எல்லாப் பைகளையும் பெட்டிகளையும் எடுத்து கொண்டு முன்னே செல்ல... சிபி அவரை பின்தொடர்ந்தார்.🚶‍♂️. சிபியின் தோள்பட்டையில் தொங்கிய பையில்... தலை தூக்கி என்னை பார்த்து சிரித்தது. "Who Am I" புஸ்தகம்.எனக்கு சஸ்பென்ஸ் தாங்க முடியலை..(உங்களுக்கும் தானே).   "Sir நீங்கள் யாரென்று நான் தெரிந்து கொள்ளலாமா?... என்று மெதுவாக சிபியிடம் கேட்டேன். என்னைப் பார்த்து இரண்டாவது முறையாக புன்முறுவல் பூத்தார் சிபி.🙂 தெய்வீகச் சிரிப்பையா உனது சிரிப்பு என்று மனதில் நினைத்துக் கொண்டு... மறுபடியும் அவர் முகத்தைப் பார்த்தேன்.              I am சிபி...the new collector posted to Pune City" என்று அமைதியாக என்னிடம் அறிமுகப்படுத்திக்கொண்டார். நான் என்னை அவரிடம் அறிமுகப்படுத்திக் கொள்ளும் முன்.. " you are Kishore kumar ... traveling to Pune from Chennai ... with your friends and you are leading them " என்று  எனக்கு மட்டுமே கேட்கும் விதத்தில் கூறினார்.     எனக்கு உங்களிடம் கேட்க ஆயிரம் கேள்விகள் இருக்கின்றன... என்று  நான் அவரிடம் கூற... "நீங்கள்  என்னோடு காரில் வாருங்கள். நீங்கள் தங்கும் இடத்தில் உங்களை அழைத்துச் செல்கிறேன். பேசிக்கொண்டே செல்லலாம்... மற்றவருக்கு நான் ஒரு டெம்போ ட்ராவலர் வண்டி ஏற்பாடு செய்கிறேன்... அவர்கள் நம்மைத் தொடரட்டும்"... என்றும் ஒரு ஆளுமையுடன் கூறினார். கட்டளைகள் பறந்தன... சிறுது நேரத்தில் நான் அவருடன் காரிலும்... மற்றவர்கள் டெம்போ ட்ராவலர் வண்டியிலும்... நாம் தங்கும் இடம் நோக்கி பயணிக்க ஆரம்பித்தோம். நான் தருமியாக மாறி...  கேள்விக்கணைகளை அவரை நோக்கி செலுத்த ஆரம்பித்தேன். Why you got down in every station and what you handed over to the people you met ? என்னுடைய முதல் கேள்வி அவருடைய காதில் விழுந்தவுடன்... அவர் கண்கள் என்னை தவிர்த்து ஜன்னல் வழியே வெளி உலகத்தில் பதிந்தது..    அவர் கண்களில் கசிந்த நீர் துளி ஒன்று... ஜன்னல் வழியே அடித்த காற்றின் வேகத்தில்.... என் முகத்தில்... என்னுடைய அனுமதி இல்லாமல் விழுந்து தெறித்தது.   சில மணித் துளிகளுக்கு பிறகு.. அவர்  கூறிய காரணத்தை கேட்டு  என் கண்களில்   "குற்றால அருவி. ."... (நண்பர்களே உங்கள் மனதில் எழுந்த அனைத்து கேள்விகளுக்கும்........ எனது அடுத்த தொடரில் பதில் கிடைக்கும்).   * *  மாபெரும் சபையினில் நீ நடந்தால்-

உனக்கு மாலைகள் விழவேண்டும் -

ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று

போற்றிப் புகழ வேண்டும்   🤘

தொடர்-8

  பயணிகள் கவனத்திற்கு...   💃💃💃💃💃💃.     பிறக்கின்ற போதே...

 இறக்கின்ற தேதி

இருக்கின்றது என்பது மெய்தானே.

ஆசைகள் என்ன...  ஆணவம் என்ன

உறவுகள் என்பதும் பொய்தானே....

உடம்பு என்பது...    உண்மையில் என்ன🤔

கனவுகள் வாங்கும் பை தானே🙏🏻. எங்களை தாங்கி சென்ற கார்...🚕 மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து சிபியின் கண்கள் என்னை நோக்கும் பொழுது... அவர் கண்கள் கலங்கி இருந்தது. வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டை... அவருடைய எண்ணத்தை வாய் வார்த்தைகளாக வருவதைத் தடுத்துக் கொண்டிருந்தது.  மவுன போராட்டத்திற்குப் பிறகு  சில நிமிடங்கள் கடந்தது.              சிபி IAS.....தான்  கடந்து வந்த வாழ்க்கை பயணத்தை சொல்ல ஆரம்பித்தார்.       (a small ஃபிளாஷ் பேக்)                     சிபி பிறக்கும்போது... அவருடைய தந்தை அவருடைய அம்மாவை...  கடன் பாரம் தாங்காமல்... ஊரை விட்டே  போய்விட்டார். சிபியின் அம்மா இறந்த பிறகு...அவரை யாரோ பக்கத்து வீட்டுக்காரர்  ராமகிருஷ்ணா மடத்தில் சேர்த்துவிட்டார்கள். ராமகிருஷ்ணா மடத்தில் படித்து வளர்ந்து civil service exam எழுதி இப்பொழுது... posted to Pune.    சம்பாதித்த பணத்தை... தன்னைப் போல் அனாதையாக இருக்கும் குழந்தைகளின் படிப்புச் செலவுக்கு... வங்கியின் மூலமாக அனுப்புவது வழக்கம். இம்முறை முதல்முறையாக... நேரில் சந்தித்து.. பேசி... அவர்களுக்குத் தேவையான பணத்தை.... பிரவுன்  கவருக்குள் வைத்துக் கொடுத்திருக்கிறார்.                  அவர் கதையை சொல்லி முடிப்பதற்கும்....நாம் இறங்க வேண்டிய இடம் வருவதற்கும் நேரம் சரியாக இருந்தது.ஒரு நல்ல மனிதநேயமிக்க மனிதரை பிரிய மனதில்லாமல்...         when we can meet again?... என்று நான் கேட்க...  நெற்றியை தடவியபடியே......        I invite all of you for a dinner tonight at my place.. என்றார். அவருடைய அழைப்பில்  நிச்சயமாக நான் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு அழுத்தம் இருந்தது. கரும்பு தின்ன கூலியா... என்று மனதில் நினைத்துக்கொண்டு...                 Sure we will join என்று பதிலளித்து விட்டு (corona வுக்கு பயந்து கை கொடுக்காமல்) என் வணக்கத்தை கூறிக்கொண்டு.. நம் நண்பர்களோடு ஜோதியில் ஐக்கியமானேன்😌.அன்று முழுவதும்... புனே நகரை சுற்றிப் பார்த்தோம்... என் மனது எதிலேயும் லயிக்கவில்லை. சிபியின் கதையினை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன். All Madams including புயல்...ரமா... லலிதா..காஞ்சனா.. அம்புஜம்.. பிரியதர்ஷினி... சுதா..  அண்ட் all sirs including ராம், கார்த்தி.. கணபதி sir.. அனைவரும் ஒருமனதோடு     Rs.100000/= நன்கொடை சேகரித்து... குழுவின் சார்பாக (அவர் மூலமாக ஏழை எளிய மக்களின் படிப்புச் செலவிற்கு உதவ) சிபியிடம் கொடுக்கும்போது.. சிபி நம் எல்லா நண்பர்களை வணங்கிய நேரத்தில்...... என் காதில் ஒலித்த பாடல்...         பதவி வரும்போது பணிவு வரவேண்டும்..

துணிவும் வரவேண்டும் தோழா..”


நாளை உயிர்போகும்.. இன்று போனாலும்


கொள்கை நிறைவேற்று தோழா..”.... படிப்பினை தரும் எந்தப் பயணமும் ஒரு ஆன்மீகத் தேடல்  பயணம்தான். மனிதநேயம் மிக்க மனிதர்களை எங்கு கண்டாலும் கொண்டாடுவோம். மீண்டும் அடுத்த பயணத்தில் உங்களை சந்திக்கிறேன்... அதுவரை...MILES  TO GO BEFORE I SLEEP🙏🏻

Comments

Popular posts from this blog

"கோலமாவு கோகிலா".

நன்றி

என்னுள் எழுந்த முதல் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்....