Posts

ஒரு பக்க உ(க)தை

 Episode 1 சோணமுத்துக்கு தூக்கம் வரவில்லை...🙄 மெத்தையில் புரண்டு புரண்டு படுத்தான்... மருந்துக்குக்கூட கொசு இல்லாத அறை.... குளிரூட்டப்பட்ட ஏசி அறை... இருந்தாலும் தூக்கம் வரவில்லை....🤨 சிலருக்கு... ஆண்டவன்  அனைத்தையும் வேண்டும் அளவுக்கு கொடுத்துவிட்டு.... உறக்கத்தை தர மறந்துவிடுகிறான்.... காரணம்...🤔 இறைவனுக்கே வெளிச்சம்....😳 நண்பர்களோடு ஒரு full அடித்த பிறகு வருவது அல்ல ஒரு நல்ல உறக்கம்....🤭 பிறகு...🤔 நமக்குப் பிடித்த... கருத்து ஒருமித்த... பெண்ணோடு சந்தோஷமாக அனுபவித்த கலவிக்கு பிறகு வருவதுதான் ஆழ்த   உறக்கம்....🤫 இதை நான் கூறவில்லை....😒 நல்ல கலவி.. ஒரு ஆழ்நிலை தியானத்திற்கு ஒப்பாகும் என்று ஓஷோ கூறுகிறார்....🤥 அது சரி... நம் கதையின் நாயகன்.... சோனமுத்தனுக்கு தூக்கம் வராததற்கு காரணம்.... மாலையில் அவனுக்கு வந்த phone call.... யாரிடம் இருந்து வந்த phone call... சொல்லலாமா வேண்டாமா....🤔 சோனமுத்தன் என்னைப்பார்த்து முறைக்கிறான்😡 அவனை சமாதானப்படுத்தி விட்டு பிறகு அவன் கதையை தொடர்கிறேன்....😴 EPISODE 2 🤘🤘🤘 தூக்கம் என்பது... இரவின் அதிசயம். அமாவாசையின் கும்மிருட்ட...

பயணிகள் கவனத்திற்கு

 "பயணிகள் கவனத்திற்கு" தொடர்-1 எனது அடுத்த படைப்பின் தலைப்பு....... நண்பர்களின் வேண்டுதலுக்கு இணங்கி..... ஏதாவது ஒன்றை பற்றி... எழுத வேண்டும் என்ற எண்ணம் தலைதூக்க...ஒரு ரயில் பயணத்தைப் பற்றி... எழுத முற்படுகிறேன். என்னோடு பயணிக்க விரும்புகிறவர்கள்... இன்றைக்கே முன்பதிவு செய்து கொள்ளலாம்....  🤪                 பயணிகள் கவனத்திற்கு, வண்டி எண் 6669, சென்னையிலிருந்து பாம்பே வரை செல்லும் பாம்பே எக்ஸ்பிரஸ், தடம் எண் 6 ல் இருந்து 10 மணி 40 நிமிடத்திற்கு புறப்படும். யாத்ரிகா க்ருபயா ஜாயங்கே, காடி நம்பர்….”..... இம்முறை நான் பயணிக்க இருப்பது.... சென்னை டு புனே.. ஜன்னலோரத்தில் இருப்பிடம்... என்னுடைய இருப்பிடத்தின் எதிரில்..... இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க... சற்றும் யாரையும் கண்டுகொள்ளாமல்... தான் கையில் வைத்திருக்கும் புத்தகத்திலே புதைந்து இருக்கும்.. ஓர் இளைஞன்....(ம்.. இளம் பெண்ணாக இருந்திருந்தால்.. பயணம் சிறப்பாக  இருந்திருக்கும்😉.... இது சோணமுத்தனின் மைண்ட் வாய்ஸ்😁).... அவர் வைத்திருந்த புத்தகத்தின் தலைப்பு.....    ...

பயணம் and பொங்கல்

பயணம் and  பொங்கல் தொடர்-1 என் மனதுக்கு இனிய 😍 நண்பர்களே...🙏🏻 வெகு நாட்களுக்குப் பிறகு இதோ உங்களிடம் அளவளாகா வந்திருக்கிறேன்....😊. எனது அம்மாவின் மறைவுக்குப் பிறகு😭... மதுரைக்கு எனது முதலாவது பயணம்.... அம்மாவின் 45 வது நாள் காரியத்திற்காக...🙏🏻. எனது பயணத்தின் நேரலை உங்கள் கவனத்திற்கு... பயணங்கள் என்பது ஒரு நிகழ்வு.... அந்த நிகழ்வு சிறு சிறு சம்பவங்கள்... நல்லதும் கெட்டதும் நிறைந்தது... அந்த சிறுசிறு நிகழ்வினை உள்வாங்கி... அது நமக்குள் உண்டாக்கிய பாதிப்புகளை... நிகழ்வுகளை... எழுத்துக்களைக் கொண்டு ஆவணமாக்கி.... இதோ அவை உங்களுக்காக....🤘 "காரோன" காலத்தில்... ஒரு மாநிலத்தில்  இருந்து மற்றொரு மாநிலத்துக்குச் செல்ல... E பாஸ் அவசியமாகிறது. May 29 தேதி.... மதுரை பயணம் நிச்சயம் ஆகிய வுடன்.....28 ஆம் தேதி E pass  ஆன்லைனில் விண்ணப்பித்தேன். என் முயற்சி பலமுறை மறுதலிக்கப் பட்டது... காரணம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்🤘. முயற்சி திருவினையாக்கும்... என்பதை மனதில் கொண்டு... பலமுறை பல காரணங்கள் முறையிட்டு.... கடைசியில் E பாஸ் வாங்குவதில் வெற்றி பெற்றேன். மதுரை கார்ப்பரேஷனுக்கு என் ந...

பூக்களே சற்று ஓய்வெடுங்கள்....

 பூக்களே சற்று ஓய்வெடுங்கள்.... 💃🏼💃🏼💃🏼💃🏼💃🏼💃🏼 மணப்பெண்ணின் தலையில் நேர் வகிடு எடுத்தது போல்.... அந்த சாலை நேர்த்தியாக இருந்தது. பெருவிரலால்... ஆக்சிலரேட்டரில் சிறிய அழுத்தம் கண்டவுடன்... சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது புத்தம் புது VENU கார்.... அதை அனாவசியமாக.... ஒற்றை விரலால்.... அதன் ஸ்டேரிங்கை... ரஜினி ஸ்டைலில்.😁 பிடித்து  கொண்டிருந்தேன் எனக்கு பயணம் என்றால் ரொம்ப பிடிக்கும்...😍 அதுவும் காரில் பயணம் என்றால் மிகவும் பிடிக்கும்....😁 குடும்பத்தோடு காரில் பயணம் செய்யும்பொழுது மகிழ்ச்சி தருவது....😋 தொடங்கும் இடத்திலிருந்து செல்லும் இடம் வரை.... ஒருவரோடு ஒருவர் அரட்டை அடித்துக் கொண்டு செல்வது....(நோ great escape for anyone )..🤣  படிக்கும் மகளுக்கு கல்லூரிக்கு செல்லத் தேவையில்லை....🙇‍♀ மனைவிக்கு சமைக்கத் தேவையில்லை...😘 எனக்கு ஆபீஸ் போக தேவையில்லை....😉 ஆகையால் பயணங்கள்  எனக்கு என்றுமே பிடிக்கும் செயல்...  அதுவும் இம்முறை புத்தம் புதிதாக வாங்கிய VENU  காரில் பயணம்..... Venu காரில் ... சித் ஸ்ரீராம் குரலில் கசிந்த... "கண்ணில் மழை... நெஞ்சில் இடி....

மழைக்கு ஒதுங்கிய இடத்தில்....

 மழைக்கு ஒதுங்கிய இடத்தில்.... தொடர்-1 அது ஒரு மழைக்காலம்..🐧⛅.. கள்ளுண்ட கிழவன்,🎅👨‍🦯 கால்பரப்பி தள்ளாடி நடப்பது போல், வான் மேகங்கள், அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தது...குடை இல்லாமல் நான் வெளியே... மதுரை ரயில் ஆர் நகர் இரண்டாவது தெருவில் நடந்து கொண்டிருந்தேன். அன்று காலையில்தான் புனே நகரில் இருந்து ரயிலில் வந்திருந்ததால் எனக்கு களைப்பாக இருந்தது.😥😓😴🥱 ரயில் பயணங்கள், விமானப் பயணங்களை போல், வசதியாக இருப்பதில்லை. ஆனால் அது எனக்கு வழக்கமான ஒன்றாகும். பணி நிமித்தமாக அங்கு (புனே) நான்கு வருடங்கள் இருந்தபடியால்.... இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சென்னை, மதுரை வந்து போவது வழக்கமாகி விட்டது. அன்றைக்கு மதுரைக்கு விஜயம் செய்ததும் ஒரு காரணமாகத்தான். பொருளாதார நெருக்கடியில்... அசோக் நகர் (மதுரை) முதல் தெருவில் ஒரு மனை வாங்கி அதில் வீடு கட்டிக் கொண்டிருந்தேன். அதன் மேற்பார்வைக்காக தான் இந்த விசிட்.🤨 "என் மேல் விழுந்த மழைத்துளியே...  இத்தனை நாளாய் எங்கிருந்தாய்..." காதலனின் கன்னத்தில் விழுந்த,காதலியின் முதல் முத்தத்தை போல்... என்  கன்னத்தில் விழுந்த முதல் மழைத்துளி... கவிஞரி...

பேயுடன் பேச என் 9 அழுத்தவும்.

பேயுடன் பேச என் 9 அழுத்தவும். தொடர் -1 காலை.... ☀️ சூரிய ஒளி பட்டு ... எல்லா ஜீவராசிகளும்🦆🦅🦉🦇🐛🕷️🐘🦧 தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கும்  நேரம்.... சென்னை கடற்கரைக்கு... கால்நடைக்காக வந்த மனித கூட்டங்கள் அங்கங்கே...🚶🏻‍♀️🚶‍♂️👩‍🦯🏃‍♂️🚶‍♂️. அந்த கடல் கரையின் ஓரத்தில் உள்ள... பிரம்மாண்டமான பங்களாவின்..🏣 வரவேற்பரையில்... டேபிள் மேல்.... பிரிக்கப்படாத அன்றைய செய்தித்தாள்... அதற்குப் பக்கத்தில் ஆவி பறக்கும் தேநீர் கோப்பை....☕ யாருக்காகவே காத்துக்கொண்டிருந்தது.... சில மணித்துளிகளுக்கு பிறகு.... ஒரு அழகான கை.... அந்த தேனீர் கோப்பையை.... கையில் எடுத்துக் கொண்டே.... கண்களால் அந்த  செய்தித்தாளின் தலைப்புச் செய்தியை... பார்வையிடுகிறது... (இவள் தான் நம் கதையின் கதாநாயகி... நிஷா.... வயது 35... அழகான உடல்வாகு... பொலிவான கம்பீரமான தோற்றம்... இரண்டாம் முறை  பார்க்க ஏங்க வைக்கும் முகம்...🙍‍♀️ தொழில்... மனோதத்துவ டாக்டர்...) தலைப்புச் செய்தி.. "டாக்டர் சுமன் காணவில்லை. 11 நாட்களாக , DCP சங்கர் தலைமையில்...போலீஸ் வலை வீச்சு"🧐 (டாக்டர் சுமன்... நிஷாவின் கணவர்.... வயது 55...😳. இ...