கரை ஒதுங்கிய நட்சத்திரங்கள் .....🦀🐡🐠..

 கரை ஒதுங்கிய நட்சத்திரங்கள் .....🦀🐡🐠.. 


இடம்: கடற்கரை

நேரம்: கோடை கால மாலை வேளை....


கடற்கரை காற்று .... 

நான் சீராக வாரிய என் தலைமுடியை கலைத்து கொண்டிருந்தது😝...

என் அழகின் மேல் அதற்கு பொறாமை....😁


கடற்கரை மனதின் சுமைகளை இறக்கி வைக்கும் ஒரு இடமாகத்தான் எனக்கு எப்போதும் இருந்திருக்கிறது.😞


கடலை நெருங்கும்போது ஹோ" என்று பரந்து விரிந்து கிடக்கும் மண்ணை பார்க்கும் போது ....

ஒருவித சந்தோசம் உள்ளுக்குள் விசிலடிக்க தொடங்கிவிடும்.😉


கால்நீட்டி கடற்கரை மணலில் அமர்ந்து கொண்டு.... இரைச்சலாய் கரையை நோக்கி வந்து ...

பிறகு திரும்பும் அலைகளையும்,பரந்து விரிந்த வானத்தையும், அதில் மிதக்கும் மேகங்களையும் பார்த்துக்கொண்டு வெறுமனே அமர்ந்திருத்தல் சுகம்.😘


எந்த எண்ணமுமற்று அந்த சூழலில் கரைந்து கிடப்பது தவம்.🙏🏻


நிறைய பேர் ...ஒவ்வொரு காரணத்திற்காக கடற்கரைக்கு வருகிறார்கள். 

கூட்டம் கூட்டமாய் வந்து அமர்ந்து உணவருந்து கிறார்கள் . 


ஓடிப்பிடித்து விளையாடுகிறார்கள். கடலில் கால் நனைத்து சிலாகித்து போகிறார்கள்.


கடலின் நான் பார்க்கும் போதெல்லாம் அது ஏதோ ஒரு ரகசியத்தை தன்னுள் தேக்கி வைத்து இருப்பதாகவே நினைத்துக் கொள்வேன் .

ஒவ்வொரு முறையும்... அலைகள் கரைக்கு வரும் போதும் ...

அவை என்னிடம் ஏதோ சொல்ல முயல்வதாக உணர்வேன்.


என்ன இது ஒரு அலையும் நமக்கு ஒன்றும் சொல்லவில்லையே என்று யோசித்து கவலைப்பட்ட நான்.... பின்னொருநாள் புரிந்துகொண்டேன்... எல்லா அலைகளும் என்னிடம் மௌனத்தை பகிர்ந்து சென்றன என்று.😉


பின்னொருநாள் என் காதலியை நான் சந்தித்ததும்... பிரிந்ததும் இதே கடற்கரையில் தான்...😢


கடற்கரையில் தியானம் இலகுவாக கைகூடுகிறது....🤝


கடவுள் தேடல் என்பது... எதையும் தேடாதிருத்தல்  என்ற தெளிவினை அடையும்போது... மொத்த பூமி மட்டும் இல்லாது ....பிரபஞ்சமே நமது வசப்பட்டு போகிறது.🤘


காதலும்... காமமும்... கடவுளும்.... இந்த பூமிப்பந்தில் தீர்க்கமுடியாத ரகசியங்கள்...😌 அப்படிதான் கடலும்.


நான் கடலை பார்த்துக்கொண்டிருந்தேன்.... 

கடல் என்னை பார்த்துக் கொண்டிருந்தது....😊


உள்மனது... என்னிடம் ஏதோ சொல்ல....

கண்ணுக்கெட்டிய தூரத்தில்....

ஒரு முதியவர்.... கடற்கரையோரம்

தள்ளாடி நடந்து கொண்டிருந்ததில்

என் கவனத்தை திருப்பினேன்......


அவர் அவ்வப்போது குனிந்து தரையில் இருந்து ஏதோ ஒன்றை எடுத்து கடலில்  எறிந்து கொண்டிருந்தார்....


அவர் நடை....

எப்போது தண்ணிரில் விழுந்து விடுவாரோ என்று அச்சப்படும் வகையில்...

இருந்தது....


அப்படி என்ன அவர் குனிந்து தேடிக் கொண்டிருக்கிறார்...🤔


வாருங்கள் என்று பார்ப்போம்....🏃🏃🏃.

💃🏼💃🏼💃🏼💃🏼💃🏼💃🏼


அறிவாளிகள் எப்போதும் கோபம் கொள்கிறார்கள் ஏனென்றால் அவர்கள் அறிந்து வைத்திருப்பது அவர்களுக்கு பொக்கிஷம் என்று நினைக்கிறார்கள் அதனாலேயே ஒரு கோபமும் எனக்கு கீழ்தான் நீ என்ற மமதையும் வந்து விடுகிறது. ஆனால் புத்திசாலிகள் அமைதியாயிருக்கிறார்கள் ஏனென்றால் அவர்களுக்குத் தெரியும் கற்றதெல்லாம் குப்பை என்று.... சரி இப்போது சூழ் நிலைக்குள் மீண்டும் வருவோம்...


தள்ளாடி நடக்கும் அந்தப் பெரியவர் பின் சிறிது நேரம் நின்று...


எங்கேயோ பார்ப்பது போல் பார்த்துக்கொண்டு....

அவர் என்ன செய்கிறார் என்று கவனித்துக் கொண்டிருந்தேன்....


கஷ்டப்பட்டு குணிந்தவர்...

கறையில்.... கடற்கரையில் ஒதுங்கிய நட்சத்திர மீனை எடுத்து.... மறுபடியும் கடலிலில் நீந்த (செல்ல) உதவி செய்து  கொண்டிருந்தார்....


அவருக்கு வயது என்பது இருக்கும்....

மூன்றாவது கால் இல்லாமலேயே... மனிதன் நிலாவில் நடப்பதுபோல்...

அவர் நடந்து கொண்டிருந்த போதிலும்....

மிகவும் கவனமாக....

கரையில் ஒதுங்கிய நட்சத்திர மீன்களை... ஒவ்வொன்றாக எடுத்து... கடலில் அனுப்பிக் கொண்டிருந்தார்....

அவர் செய்கை எனக்கு விசித்திரமாக இருந்தது...


அவரைப் பார்த்தால் அவர் நடைப்பயிற்சிக்கு வந்தது போல் தெரியவில்லை....


சிறிது நேரம் அவரை கவனித்துவிட்டு.... அவரருகில் சென்று அவரிடம் உரையாட எத்தனித்தேன்....

"குட் ஈவினிங் சார்... ஐ அம் சோனமுத்தன்"


என்று அவரிடம் என்னை அறிமுகம் செய்து கொண்டேன்....


கலையான முகத்தில் ஒரு புன்சிரிப்பு...

அமைதியாய் கைநீட்டி என்னிடம் கைகுலுக்கிக் கொண்டார்...


"Glad to மீட் மை சன்".... 


 அழகாக ஆங்கில உச்சரிப்புடன்  பேசினார். 


அவர் என்னிடம் பேசிக் கொண்டிருந்த போதிலும்....

கண்கள் கடலில் ஒதுங்கிய  நட்சத்திர மீன் கலை தேடிக்கொண்டிருந்தது...


நடக்கவே முடியாமல் கஷ்டப்படும் பொழுது... அவர் செய்யும் செயல்

எனக்கு வியப்பாக இருந்தது...


வெளிச்சம்  தூங்க போகும் நேரம்....

என் மனதில் எழுந்த சந்தேகத்தை அவரிடம் கேட்டுவிட்டேன்...


"சார் ....

ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு ....

குனிந்து அந்த நட்சத்திர மீன்களை எடுத்து கடலில் சேர்க்கிறீர்கள்?"


என்று சாதாரணமாக அவரிடம் நான் கேட்டவுடன்... 


 நழுவும்...

Frame less கண்ணாடியை... ஒற்றை விரலால்...  தூக்கிவிட்டுக்கொண்டு

என்னை பார்த்தார்...


அவர் பார்வை....

என் கண்களை ஊடுருவி சென்றன...


முதல்முறையாக அவர் பார்வையை சந்திக்க மறுத்தது என் கண்கள்...


அவர் கூறிய காரணத்தை கேட்க கேட்க.... எங்கேயோ சூழ்ந்து கொண்டிருந்த மேகங்கள்...

என் கண்களின் வழியாக... வழிந்து...

கடல்நீரை மேலும் உப்பாக்க... முயற்சி செய்து கொண்டிருந்தது....


"கண்ணில் மழை...

 நெஞ்சில் இடி...."


அவர் சொன்ன விஷயங்களை படிப்பதற்கு மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள்.... 🙏🏻


💃🏼💃🏼💃🏼💃🏼💃🏼💃🏼


💃💃💃💃💃💃


சுதந்திரம் என்பது... 

ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் வரை.... சுதந்திரம் ஒரு நல்ல விஷயமே...

கட்டுப்பாடற்ற சுதந்திரம்... என்றும் ஆபத்தை விளைவிக்கும்...😔


புவனா என்ற புவனேஸ்வரி...

தான் புதிதாக வாங்கிய...ZR யமஹா வில்....  காற்றை விட வேகமாக பறந்து கொண்டிருந்தாள்...


புவனாவின் பின் இருக்கையில் அவளுடைய அம்மா....மகளை அணைக்காத குறையாக பிடித்துக்கொண்டு அமர்ந்து கொண்டிருந்தாள்....


ஏன் இந்த வேகம்...

எங்கு செல்கிறார்

புவனா....


பல காரணங்கள் இருக்கின்றன....

அதில் முக்கியமான இரண்டு....


1.புவனா அதிபுத்திசாலி.... பட்டய கணக்காளர்...(chartered acc) தேர்வில்...

முதல் முயற்சியிலேயே... தேர்வில் தேர்ச்சி பெற்ற  மகிழ்ச்சி... 


2. 

அவள் திருமணம் செய்ய விரும்பிய  பையனையே....

அவளுடைய அம்மாவும் அப்பாவும் ஏக மனதோடு ஏற்றுக்கொண்டது... இரண்டாவது காரணம்...


அவள் வேகமாக சென்று கொண்டிருந்தது...

கூவத்தூரில் வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்த... அவளுடைய அன்பான அப்பாவை காண.....


ECR வழிப்பாதை....

இருபுறமும் மரங்களைக் கொண்ட வழிப்பாதை...

கடலை ஒட்டிய செல்லும் வழி பாதை....

எல்லோருக்கும் பிடிக்கும் வழிப்பாதை...

ஆனால் அது ஒருவழிப்பாதை....(single Road)


அடுத்த நிமிடம் நேரப்போகும் பயங்கர விபத்தை அறியாமலே...

புவனா....

தனது எண்ணங்கள் செல்லும் வேகத்தை விட வேகமாக வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தாள்...


ஒரு சிறு தவறு....

ஒருவருடைய வாழ்க்கையையே இழப்பதற்கு காரணமாகிவிடுகிறது...


ஒரு  வளைவில்...

எதிர் திசையில் வந்த கன சக்கர சரக்கு வாகனம் ....(lorry).  கட்டுப்பாட்டை இழக்க...

புவனா சுதாரித்து... வண்டியை வளைத்த போதும்.... எது நடக்கக் கூடாதோ,அது நடந்து விட்டது....


பள்ளத்தில் வழிந்த கன சக்கர வாகனம்  குடை சாய்ந்தது....


புவனாவும்..அவளுடைய அம்மாவும் தார் சாலையில்.... 

தலையில் அடிபட்டு ரத்தம் சொட்ட...

என்ன நடந்தது என்று அவர்கள் அறியும் முன்னே..... நினைவு இழக்க ஆரம்பித்தார்கள்....


சாலையில் வாகனங்கள் ஒன்றிரண்டு தான் சென்று கொண்டிருந்தது....


மக்கள் நடமாட்டமும் குறைந்த நேரம் அது....


பைக்கில் சென்று கொண்டிருந்த ஒருவர்...

புவனாவின் கைப்பையை சோதித்து.... கைபேசியை கண்டுபிடித்து... தெரிந்தவர்களுக்கு தகவல் கொடுத்து விடலாம் என்று எண்ணி கைபேசியை திறக்க முனைந்தார்....


வழக்கம்போல் கைப்பேசி லாக் செய்யப்பட்டிருந்தது....


சிறிது யோசித்த பிறகு...

புவனாவின் வலது கை கட்டை விரலை.... கைப்பேசியில் வைத்து...

முயற்சி செய்து வெற்றியும் கண்டார்...


புவனாவின் அப்பாவுக்கும்  மற்றும் மருத்துவ அவசர 

ஊர்திக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது....


புவனாவின் அப்பா விபத்து நடந்த இடத்துக்கு வந்து சேருவதற்கு முன்...


மருத்துவ அவசர ஊர்தி அந்த இருவரையும் அருகிலிருந்த மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றது....


"இன்னும் சிறிது நேரத்திற்கு முன் இவர்களை கொண்டு வந்திருந்தால்... இவர்களை காப்பாற்றி இருக்கலாம்" என்று மருத்துவர் கூறிக் கொண்டிருக்கும் பொழுது மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார் புவனாவின் அப்பா....


அதுசரி.... நமது கதைக்கும் புவனாவுக்கு என்ன சம்பந்தம்....


சம்மந்தம் இருக்கிறது...


மேலே குறிப்பிட்ட சம்பவம் ஒரு சின்ன பிளாஷ்பேக்....


கடற்கரையில் நமது சோணமுத்து  பேசிக்கொண்டிருந்த  பெரியவர் ....

புவனாவின் அப்பா....    💃💃💃💃💃💃.       எந்த ஒரு விபத்தின் போதும்.... விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை.. "கோல்டன் ஹவர்ஸ்" என்கின்ற நேரத்திற்குள்... மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்காவிட்டால்.... மரணம்தான்....


புவனாவின் அப்பாவாகிய அந்த பெரியவரிடம் நான் பேசிக் கொண்டிருந்த நேரத்தில்..... அவர் கண்கள் என்னையும் தாண்டி.... சிறிது தூரத்திற்கு அப்பால் நடந்து வந்துகொண்டிருந்த இளைஞனிடம் தஞ்சமடைந்தது....


நான் திரும்பி பார்க்கும் பொழுது.... தலையும்... தளபதியும்.... சரிவிகிதத்தில் கலந்த... ஒரு இளைஞன் எங்களை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தான்..... அவர் கையில் ஒரு லேப்டாப் பை... ஒரு பெரிய ஐடி கம்பெனியில்....வேலை செய்யும் இளைஞர்களுக்கு உண்டான எல்லா தகுதியும் அவரிடம் இருந்தது...


"அப்பா நேரமாகிவிட்டது வீட்டுக்கு செல்லலாமா...." என்று அந்த இளைஞன் பெரியவரிடம் கேட்டார்.


இளைஞனின் கேள்விக்கு பதில் சொல்லுமுன்.... அந்தப் பெரியவர்....  இளைஞனைக்  என்னிடம் அறிமுகப்படுத்தினார்....


"இவர்தான் என் மகள் திருமணம் செய்ய இருந்த.... நிச்சயக்கப்பட்ட மாப்பிள்ளை...."....


இளைஞனின் கண்களில் சில கண்ணீர் துளிகள்....


"என் மகள் விபத்தில் இறந்த பிறகு.... இவர் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ளவில்லை.... அவரின் வேலைப்பளுவின் நடுவில் என்னையும் அவர் கவனித்துக் கொண்டிருக்கிறார்..."


அங்கே ஒரு சங்கடமான மவுனம் நிலவியது....அந்த இளைஞனிடம் கைகுலுக்குவது பதிலாக..... என்னை அறியாமலே...இருகரம் கூப்பி வணங்கினேன்.


இன்னும் ஒரு சந்தேகம் மனதில் மேலோங்கி இருந்தது.... பெரியவரிடம் அதைப்பற்றி... கேட்கலாமா.. வேண்டாமா... என்று சிந்திக்கிற நேரத்தில்...


"என்ன பலத்த யோசனை?" என்று பெரியவர் என்னிடம் கேட்டார்....


"நடக்கவே சிரமப்படுகிற நீங்கள்.... இந்தக் கடற்கரையில்.... கரையில் ஒதுங்கி நின்ற நட்சத்திர மீன்களை.... கடலில் திரும்பவும்... செல்ல உதவுகிறீர்கள்....என்ன காரணம்?


மௌனமான நேரம்.... பெரியவர் மனதில் பாரம்....


"என்னுடைய மனைவி.. மேலும்...மகளின் விபத்தின்போது... யாராவது ஒருவர்... அவர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு... தாமதிக்காமல்....காலம் கடத்தாமல் ....அழைத்துச் சென்றிருந்தால் இன்று உயிரோடு இருந்திருப்பார்கள்....


அதேபோல்..... நான் செய்யும் செய்கை சிறிதாக இருந்தாலும்.... என்னுடைய செய்கையால்.... ஒரு நட்சத்திர மீனுக்கு திரும்பவும் உயிர் கிடைக்கிறது என்றால்...

அந்த மீனுக்கு அதன் உயிர் பெரிதல்லவா"... சன்னமான குரலில் அவர் கூறியது என் காதில் பலமாக... அந்தக் கடல் அலை ஓசையில் நடுவே... பலமாக ஒலித்தது.


"காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது"


உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும் அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்....


"எனக்கு எல்லாமே உயிர்தான்... சாமிதான்.. அதுஞ்சாமிதான், நீங்களும் சாமிதான்... இங்கே  எல்லாரும் சாமிதான்..."... அவர் கூறிய வார்த்தைகள் என் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது...


கடற்கரையை விட்டு திருவல்லிக்கேணியை நோக்கி நடந்து வந்தேன்.


பார்த்தசாரதி கோயிலைச் சுற்றி இருந்த மரமும், கோயிலுக்கு எதிரே இருந்த குளமும் மனசை குளிரவைத்திருந்தன. ஏதோ ஒன்று விளங்கியும் விளங்காமலும்... வீடு நோக்கி நடந்து கொண்டிருந்தேன்...


கோயிலில் பூஜைக்காக மணி அடித்துக் கொண்டிருந்தது.


இந்த மணி ஓசை...இங்கு எல்லா உயிர்களும் அந்தப் பரம்பொருள் தான்.. என்பதை உணர்த்தியது..🙏.       💃💃💃💃💃💃

Comments

Popular posts from this blog

யார் அந்த நிலவு

"கோலமாவு கோகிலா".

நன்றி