ஒரு புயல் கரையை கடக்கிறது...

            தொடர் கதை

இளையராஜா மெட்டுக்காக... பாட்டெழுதும் கவிஞனைப் போல்...(ஒரு வேகத்தில் நேற்றிரவு தலைப்பைக் கொடுத்து விட்டேன்) தலைப்புக்கு ஏற்ற படி... ஒரு நிகழ்வை எழுத முற்படுகிறேன்.🤓 .(எழுதி ரொம்ப நாள் ஆச்சு... ஆகையால்... குவாட்டர் அடித்த குடிமகன் போல்... சிந்தனை தள்ளாடுகிறது🥱...still I continue to write 💪)                               

எனது காரில்🚕 இரண்டாவது கியரில்...😳 மலைகளில் இளவரசியாக போற்றப்படும் கொடைக்கானல் மலையில் பயணித்து கொண்டிருந்தேன். இறைவன் தந்த ஏர்கண்டிஷன் வெளியில் இருக்க...🥶 காருக்குள் உள்ளேயிருந்த ஏசி யை அனைத்து விட்டு..🤩கண்கள் தொட்ட இடமெல்லாம் தட்டுப்பட்ட இயற்கையை ரசித்துக்கொண்டே... ஒவ்வொரு  வளைவிலும்... எதிர்வரும் வாகனங்களை கவனமாக கடந்து சென்று கொண்டிருந்தேன்.                   

மழை வர போகுதே... துளிகளும் தூறுதே... நனையாமல் என்ன செய்வேன்... மலர்வனம் மூடுதே... மதுரமும் ஊருதே... தொலையாமல் எங்கே போவேன் you tube வழியாக இன்போடெயின்மென்ட் வாயிலாக... கசிந்த பாட்டைக் கேட்டுக் கொண்டே... பாரியாள் அருகில் அமர்ந்திருக்க... மனம் பாட்டில் மயங்கியது. கடலும்...கடல் சார்ந்த இடத்தையும் மலையும் மலை சார்ந்த இடத்தையும்... எத்தனை முறை அனுபவித்தாலும்... தில் மாங்கே மோர்... 😜. ஒவ்வொரு வருடமும்... இந்த மலை இளவரசியை... மழையில் நனைய விட்டு💃 ரசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக தித்திக்கும்... திகட்டாத அழகு.😍.                  

முகில் போல மென் பஞ்சாய்... 

மிதக்கின்ற என் நெஞ்சை... 

எதை செய்து மீட்பேன்... 

எவர் சொல்லி கேட்பேன்... 

கடல் போன்ற கண்ணாலே... 

என்னை வாரி சென்றாளே... 

இழந்தேனே இன்று... 

இருந்தாலும் நன்று... 

அனல் மேலே கொஞ்சம்... 

புனல் மேலே கொஞ்சம்... 

தடுமாறி நிற்கும் என் நெஞ்சம். 

ஒவ்வொரு பூப்பெய்திய🥰 பூக்களும்... என்னை தலையாட்டி... ஓரக்கண்ணால் கண்சிமிட்டி😉..என்னை வரவேற்றது. எத்தனை சுகம் வைத்தாய் இவ்வுலகில் இறைவா.🙏🏻 நிச்சயமாக  7 பிறவிகள் போதாது.😊 மலைச்சரிவில்... கன்னி கழியாத பூ ஒன்றில்... தேனி ஒன்று... நோகாமல் தேன் சாப்பிட்டுக்😍 கொண்டிருந்தது. பூவும்... பலத்த காற்று அடித்த போதிலும்... ஆடாமல் அசையாமல்... தேனிக்கு ஏதுவாக தேனை அள்ளி வாரி கொடுத்துக் கொண்டிருந்தது. பொது நலத்திலும் பூவுக்கு ஒரு சுயநலமும் கலந்திருந்தது😅. ஆம்... தேனீக்களுக்கும் பூக்களுக்கும் ஒரு உடன்பாடு... அதன் பெயர் மகரந்த சேர்க்கை பூவுக்குள் மறைந்திருக்கும் கனிக்கூட்டம் ஒரு அதிசயமே🧐. பூவுக்குள் தேனையும்... வண்ணத்துப் பூச்சிகளுக்கு வர்ணத்தையும்... கொடுத்த அந்த இறைசக்தி... நமக்கு ஆறாம் அறிவைக் கொடுத்து... அதில் ஆசை என்னும் விதையை தூவி விட்டான். மற்ற உயிரினங்களை பற்றிக் கவலைப்படாமல்...  தான் உயிர்  வாழ வேண்டும் என்ற எண்ணத்தை முன்னிறுத்தி... இயற்கை அன்னையை அழித்து... செயற்கை குடியிருப்பை உருவாக்கிக் கொண்டிருந்தான்.  

உயிர் வாழ்தல் என்றால் என்ன?😎 மூச்சு விடுதலா?👃 உயிரோடு இருப்பதாக உணவு உண்ணுவதா?🍞 இல்லை உணவு உண்பதற்காக உழைப்பதா?🧙‍♂️ இறப்பை எதிர்நோக்கி காத்திருப்பதா😥? எது உயிர் வாழ்தல்?🤔.  ஒரு பூ... உயிர் வாழ்ந்து... முடிவில் ஒரு கனியாக கனிந்து... மனிதனுக்கு உணவாக மாறுவதற்காக உயிர் வாழ்கிறது. ஒரு பசு வாழ்நாள் முழுவதும்... மனிதனுக்கு பால் தந்து தன் வாழ்வை கடக்கிறது. இவை கூறும் பாடங்கள்... உயிர் வாழ்தல் என்பது... சக (மனிதர்களுக்கு) உயிர்களுக்கு உதவியாக இருப்பது.       சரி... ஏன் இந்த முன்னோட்டம்... கிஷோர் எங்கு சென்று கொண்டிருக்கிறார்... என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம்... அந்தக் கேள்விக்குப் பதில்... எனது வரும் தொடரில்.😌.(எப்படியோ சமாளித்து விட்டேன்... நாளைக்கு கதையை நாளைக்கு சமாளித்துவிடலாம்... அப்புறம் புயல் கரை கடக்கிறது... தலைப்புக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம்... கூட்டி கழிச்சு பார்த்தா சம்பந்தம் வரும்😆 நாளைக்கு🤔🤭🤫)

                                                   


தொடர் 2


ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே...

வாழ்வென்றால் போராடும் போர்களமே... 

சில நாட்களே வாழ்ந்து மடியும் பூக்களுக்கே... வாழ்வு போராடும் போர்க்களமே என்றால்... பல வருடங்கள் வாழ்ந்து மடியும் மனிதனுக்கு வாழ்க்கை எப்படி இருக்கும்🤔. அடிமேல் அடி விழுந்து... என்ன செய்வது என்று திக்குமுக்காடிப் போகும் பொழுது... மனிதன் இறைவனை தேடுகிறான். நானும்... கொடைக்கானலில் இருந்து... பூம்பாறையில் அமைந்திருக்கும் குழந்தை வேலப்பர் கோவில் பாலமுருகனை சேவிக்க வேண்டி... பயணித்துக் கொண்டிருந்தேன். வழியெங்கும் மழை. viperin உதவியால்... நானும் ரவுடிதான் தான்டா💪 பாணியில்... கண்ணுக்குத் தெரிந்த பாதையில்...சில  ஹேர்பின் வளைவுகளைக் கடந்து... கோயிலை அடைந்தேன். கோயிலின் நுழைவாயிலில் என்னுடன் பயணித்தவர்களை இறக்கி விட்டு...  சிறிது தூரம் சென்று காரை பார்க் செய்தேன். 

அருகில் ஒரு பிச்சைக்காரன் வந்து நின்றார். கோயில் குளம் பக்கத்தில் பிச்சைக்காரர் இருப்பது சகஜம்தானே.ஆனா அவர் பிச்சைக் கேட்ட விதம் என்னை அதிசயிக்க வைத்தது.       Can you sapre me few bucks for my lunch?            (நான் இந்தியாவில் இருக்கின்றேனா அல்லது அமெரிக்காவில் இருக்கின்றேனா😳 )அவருக்கு நான் பதில் அளிக்கவில்லை. திரும்பவும் என்னிடம் பிச்சை கேட்டார்... ஆனால் இம்முறை தமிழில்...        ஜி... பசிக்குது... பணம் கொடுக்கறீங்களா... பக்கத்துக் கடையில் ஏதாவது வாங்கி சாப்பிடுகிறேன் ஜி...                 எனது 61 வருட வாழ்க்கையில் இப்படி யாரும் என்னிடம் பிச்சை கேட்டதில்லை🤭. இவரிடம் நிறைய பேச வேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டு... கோயிலுக்குப் போய் சாமி கும்பிட்டு வந்த பிறகு உங்களுக்கு பணம் தருகிறேன் என்று கூறிவிட்டு கோயிலுக்குள் பக்தர்களோடு ஐக்கியமாகி விட்டேன். திவ்ய தரிசனம். மழை காரணமாக கோயிலில் கூட்டம் இல்லை.கோவிலில் (ஒதுங்க) கிடைத்த சின்ன இடத்தில் என்னோடு  வந்தவர்களை நிற்க வைத்துவிட்டு... நான் காரை எடுத்துக் கொண்டு வரும் வரை... என்னுடைய காரின் horn கேட்கும் வரை... நுழைவாயிலுக்கு வரவேண்டாம் என்று கூறிவிட்டு... கார் பார்க் செய்த இடத்தில்... சென்ற பொழுது பிச்சைக்காரனை பார்க்க முடியவில்லை.(Let me have a small break😉)

                     

                                                           தொடர் 3


நீங்கள் எப்பொழுதாவது பிச்சை எடுத்து இருக்கிறீர்களா?      

நீங்கள் நினைப்பது மாதிரி... பிச்சை எடுப்பது அவ்வளவு சுலபமல்ல...🤫 உங்கள் அகங்காரம் எல்லாம் தூள் தூளாக நொறுங்கி... அதன் சுவடே இல்லாமல் இருந்தால் தான்... பிச்சை எடுக்க முடியும்...🤥 உங்கள் நாடி நரம்புகளில் இரத்த நாளங்களில்... சூடு.. சொரணை... எள்ளளவு கூட இல்லாமல் இருந்தால் தான்... *பிச்சை எடுக்க முடியும்😒. அதுவும் வாழ்ந்து கெட்டவர்கள் யாசகம் கேட்டு (பிச்சை எடுத்து) வாழ்வது என்பது... கொடுமையிலும் கொடுமை.

ஓகே... நம் கதைக்கு வருவோம்.😎 காரின் கதவை திறக்கும் முன்... என் கண் முன் தோன்றினார் அந்தப் பிச்சைக்காரர். சரவணபவ என்ற வாசகத்தைத் தாங்கி இருந்தது அவர் போர்த்தியிருந்த துணி. அவர் நடந்து கொண்ட விதமும் பேசிய மொழியின் அழகும் ... என்னால் அவருக்கு பிச்சைக்காரன் என்ற அந்தஸ்தைக் கொடுக்க முடியவில்லை🤭.   Who are you?  நான் அவரிடம் கேட்ட இந்தக் கேள்வியைக் கேட்டு... புருவத்தை உயர்த்தி... என்னை பார்த்தார். .             I am a ordinary begger அவர் கூறிய பதில் என்னை திருப்தி அடையச் செய்யவில்லை. ( extraordinary is being ordinary). அவரிடம் சிறிது உரையாட விரும்பி... இருவரும் மழைக்கு ஒதுங்க வேண்டி... ஒரு இடத்தைக் கண்களால் தேடினேன். எனது குறிப்பு அறிந்து... பக்கத்தில் இருந்த காவல் தெய்வத்தின் கூரையின் அடியில் என்னை அழைத்துச் சென்றார். தன்னுடன் வைத்திருந்த ஒரு மினரல் வாட்டர் பாட்டிலை என்னிடம் கொடுத்து...        pl have a drink என்றார். எனக்குத் தாகமாக இல்லை... என்று கூறி... மினரல் வாட்டர் பாட்டிலை அவரிடமிருந்து வாங்கிக்கொள்ள நான் இசையவில்லை.  This is not a ordinary water...This is sacred water and those who are  blessed  only will have a chance to taste it... அவர் இதை கூறிக்கொண்டே... பாட்டிலின் மூடியை திறந்து கொண்டே... அதை என்னிடம் நீட்டினார்.🧂. ஒரு சின்ன தயக்கத்துடன்... பாட்டிலை வாங்கி... ஒரு மடக்கு குடித்தேன். Wow...what a taste.         என்னை அறியாமல்... இந்த வார்த்தைகளை  என் வாய் உதிர்த்தது. அந்தக் குளிர்ந்த ஆசிர்வதிக்கப்பட்ட sacred water... என் தொண்டைக்குழியில் பயணம் செய்து... நெஞ்சுக்குள் இறங்கி... வயிற்றில் அடைக்கலம் புகுந்தது வரை... நன்றாக உணர்ந்தேன்.😊. 

மறுமுறை குடிக்கும் முன்... என் மௌன மொழி அறிந்து..அந்தத் தண்ணீரைப் பற்றி கூறத் தொடங்கினார். குழந்தை வேலப்பர் முருகர் சிலை... (பழனி மலையில் இருக்கும் நவபாஷாண முருகர் சிலை போல்...   )           தசபாஷாணங்கலால்... போகர் சித்தரால் நிறுவப்பட்ட சிலை என்றும்... காலையில் முதல் முதலில்... அந்த முருகர் சிலையை அபிஷேகம் செய்த நீர்தான் இந்த புனிதநீர் என்று கூறினார். (Yes...I am blessed🙏🏻).                  நான் அவரிடம் அடுத்த கேள்வியாக... நீங்கள் எப்படி பிச்சைக்காரன் ஆனீர்கள்? என்று கேட்ட பொழுது...        என் கதையை கேட்க உங்களுக்கு போதுமான நேரம் கிடையாது so...I will tell you in my next meet. அவருடைய பதில் என்னை அதிசயிக்க வைத்தது. திரும்பவும் அவரை நான் சந்திக்கப்  போகிறேனா😳. Yes...you are being watched by us my friend😃. அவர் கூறிய பதிலைக் கேட்டு எனக்கு சற்றே தலை சுற்றியது.😇. .                          Why? and what for?...  என்னை அறியாமல்... என் வார்த்தைகளில் கோபம் தடித்தது. We have been directed by the almighty to do so🤣🤣🤣🤣🤣🤣 இடி போன்ற அவர் சிரிப்பொலி என்  காதில் எதிரொலித்தது.(என்னடா நடக்குது இங்கே...🤔🤭🤫) More and more in store for you...follow me and stay in tune with me.🙃.


                                                                          தொடர் 4


மழித்தலும் நீட்டலும் வேண்டா... உலகம்

பழித்தது ஒழித்து விடின்.           

ஒரு ஜீவனுக்கு மனித உடல் கிடைப்பது அபூர்வம். பல ஆயிரம் வருஷங்கள் மிருக ஜென்மங்களுக்கு பிறகு மானிட ஜென்மம் கொடுக்கப்படுகிறது. வேற எந்த ஒரு உடலிலும் ஒரு ஜீவன் முக்தி  அடைய இயலாது. இந்த மனித உடலில்தான் ஆன்மாவிற்கு விடுதலை கிடைக்க ஆதரவாக இருக்கும். 👌🏻


 பல ஜென்மத்தில் செய்த சாதனைகளால் ஒருவர் சிறுவயதிலேயே சன்னியாசத்தை மேற்கொள்ளும் பாவமும் பாக்கியமும் ஏற்படலாம்.👍


ஒரு உண்மையான சன்யாசி உலக ஈர்ப்புகளிலிருந்தும், அந்த உலகத்தின் இன்பங்களிலிருந்தும் விலகிச் செல்கிறார், அவர்களுக்கு குடும்பம் அல்லது இடத்துடன் எந்த தொடர்பும் இருக்காது. ஆத்மா அல்லது பிரம்மாவின் சிந்தனையில் வாழ்வை கழிப்பார்கள். அத்தகைய சன்யாசி அனைத்து உடல் சுகங்களையும் தியாகம் செய்வார். மற்றும் மனதின் ஆசைகளை கைவிடுவார். காமமும் பேராசையும் அவர்களின் பயங்கரமான எதிரிகள். அவர்களுடன் எந்த தொடர்பும் இருக்கக்கூடாது. மற்றோர் அளிக்கும் சிறிய உணவு எதுவாக இருந்தாலும், அதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களிடம் ஆசை இருக்க முடியாது.  அவர்களுக்கும் பணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு ஆசிரமம் கூட அவர்களுக்கு ஒரு சுமையே.


அத்தகய சன்யாசிக்கு சாதி அடையாளம் இல்லை.


 ஆத்மாவுடன் தொடர்பில்லாத விஷயங்களைப் பற்றிய எல்லா எண்ணங்களையும் அவர் உடைக்கிறார், ஏனென்றால் அவர் எப்போதும் உண்மையான யதார்த்தத்தைப் பற்றி சிந்திப்பதில் மூழ்கி இருக்கிறார், அவர்  ஆத்மா என்ற விழிப்புணர்வில் நிலையானவர்.


வறுமை அவர்களின் உடல் அடையாளத்தில் இருக்கும்.


 துறவறம் மேற்கொண்டால் தான் சிறப்பென்று இல்லை. உள்ளத்தில் தீயவற்றைப் புகவிடாமல் தவிர்த்தலே துறவறம் ஆகும்.🙏🏻. This is general information...Now my story starts.  எனக்குள் ஓர் ஆராய்ச்சி...🤔 நான் சந்தித்துக் கொண்டிருக்கும் நபர்... ஒரு சாதாரண பிச்சைக்காரனா... துறவியா...  ஞானியா...  சாமியாரா... அல்லது சித்தரா?... இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரிந்துகொள்ள....நான் முயற்சிக்க... நான் அவரிடம் கேள்விக் கணைகளைத் தொடுக்க ஆரம்பித்தேன். நீங்கள் எங்கே தங்கி இருக்கிறீர்கள்? புன்சிரிப்புடன் அவர் கூறிய பதில்.         சித்தன் போக்கு சிவன் போக்கு       அவர் கூறிய பதில் எனக்கு புரியவில்லை.😇 சிவம்... அதாவது தெய்வம் சித்தத்தில் இருந்தால் அதன் போக்கும் தெய்வ வழிகாட்டுதலோடு கூடியதாய் இருக்கும்.   புன் சிரிப்பு மாறாமல்.. அவர் விளக்கியது (கோனார் உரை போல்) என்னை மீண்டும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.   

May I know your name? என்னுடைய கேள்விக்கு எப்படிப்பட்ட பதில் வரும் என்று நான் அறியும் முன்...   சவம் ஆகும் வரை நான் சிவம்  என்று பதிலாய் வந்தது. நிச்சயமாக he is not a ordinary person. கடைசியாக என் மனதில் உறுத்திக் கொண்டிருந்த கேள்வியை அவரிடம் கேட்டேன். உங்களுக்கோ தங்கும் இடமும் நிரந்தரமாக இல்லை... அடுத்த வேளை உணவுக்கு உத்தரவாதம் இல்லை... இந்த நிலையில்... சிவம் என்ற  இந்த சவத்துக்கு... உடம்புக்கு ஏதாவது வந்து விட்டது என்றால்... என்ன செய்வீர்கள்? யார் உதவியை  நாடுவீர்கள்? என்னுடைய இந்த நீண்ட கேள்விக்கு...  சில நிமிட மௌனத்திற்குப் பிறகு... அவருடைய பையில் தேடி... ஒரு சின்ன  குப்பியை (Box)... எடுத்துக் காண்பித்தார். வழக்கம்போல்😥 எனக்கு ஒன்றும் புரியவில்லை. This is poison. சர்வலோக நிவாரணி. This will help me for a great escape. இந்தப் பதிலோடு... அந்த இடத்தைவிட்டு... அவர் புறப்படுவதற்கு தயாரானார்.👨‍🦯 அவசர அவசரமாக என் பர்சில் இருந்து ஒரு நூறு ரூபாயை அவரிடம்  நீட்டினேன். வாங்க மறுத்தார்.🙂 காரணம் கேட்ட பொழுது...  நான் உங்களிடம் யாசகம் கேட்ட போது பசியோடு இருந்தேன்... நீங்கள் கோயிலுக்குச் சென்று... குழந்தை வேலப்பர் (முருகனை) தரிசித்து வருவதற்குள்... எனக்கு அவர் உணவு கொடுத்துவிட்டார்.🤘 நான்பசியாறி விட்டேன். 😊 நான் சற்றும் எதிர்பார்க்காத பதில். பரவாயில்லை இரவு உணவுக்காக இதை வைத்துக் கொள்ளுங்கள்... என்னை அறியாமல் என் வார்த்தைகளுக்குள்... குற்ற உணர்ச்சியுடன் கூடிய... ஒரு கெஞ்சல்😟 மேலோங்கியிருந்தது.              

நான் வருங்காலத்திற்காக சேமித்து வைப்பதும் இல்லை.😆😆 மறுபடியும் இடி போன்ற ஒரு  சிரிப்புடன் கூடிய பதில். இயற்கையும் சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. மழை நின்று விட்டது. உங்களோடு வந்தவர்கள் உங்களுக்காக நெடுநேரம் கோயிலில் உங்கள் வரவுக்காக... பொறுமையுடன் காத்திருக்கிறார்கள்... சென்று வாருங்கள்... கிஷோர்... நீர் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்            அவர் கைகள் இரண்டையும்  தூக்கி... என்னை ஆசீர்வதித்து...🙋‍♂️ கைகளை ஆட்டி என்னை வழி அனுப்பினார். என்னுடைய பெயர் அவருக்கு எப்படி தெரிந்தது🤔 நானும் காருக்குள்🚕 அமர்ந்து... வண்டியை ஸ்டார்ட் செய்து... வைப்பரை ஆன் செய்து... மனதுக்குள் எழுந்த கேள்விக்கு பதில் அறிய... அவர் நின்று கொண்டு இருந்த இடத்தை நோக்கி என் பார்வையை🧐 செலுத்தினேன். அவர் அங்கே காணவில்லை.😳.                    அவரை சந்திக்கவும்... அவரைப்பற்றி அறிந்து கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தா...yes..Please wait a minute for a day😅👍


                                                                        தொடர் 5

உன்னுள்ளும் இருப்பான் என்னுள்ளும் இருப்பான்

உருவம் இல்லா உண்மை அவன்.

இதை உணர்ந்தார் இங்கே உலவுவதில்லை

தானும் அடைவார் அந்நிலை தன்னை. குழந்தை வேலப்பர் முருகனுக்கு நன்றி சொல்லி விட்டு கிடைத்த அனுபவத்தை மனதில் அசை போட்டுக்கொண் டே...  மலை இளவரசியின் வளைவுகளை ரசித்துக்கொண்டே... குற்றாலக்குறவஞ்சிதனை நினைவூட்டும்  வானரங்களையும்  மந்திகளை... ரசித்துக்கொண்டே... (வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்...😘

மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்)...🥰 holiday home வந்து சேர்ந்தோம். பிச்சைக்காரரோடு நடந்த உரையாடல்... என் மனதில் திரைப்படம் போல் மறுபடியும்... 

மறுபடியும்...ஓடிக் கொண்டிருந்தது. ஹாலோ.. கிஷோர் sir..🙋‍♂️ எப்ப கொடைக்கானலுக்கு வந்தீங்க?. இப்ப எங்க போயிட்டு வர்றீங்க?😊 என்ன ஒரே சிந்தனையோடு இருக்கிறீங்க?😉 மூன்று கேள்விகளுடன் என்னை வரவேற்றார் Mr.Nathan...The Holiday Home maintenance engineer.நல்ல நண்பர்👌🏻. கோயிலில் நடந்த 

நிகழ்வுகளை அவரிடம் விவரித்தேன்.    Oh god.. நீங்கள் சங்கர் மகராஜ் சந்தித்தீர்களா?... என்று ஆச்சரியத்தோடு என்னைக் கேட்டதோடு நில்லாமல்... என்னை வணங்கினார்.🙏🏻.              என்ன🤨...? உங்களுக்கு அவரைத் தெரியுமா?😒 அவர் பெயர் சங்கர் மகாராஜா வா🤔...ஒரு பிச்சைக்காரர் தோற்றத்திலே அல்லவா அவர் இருந்தார்😳 என்று கூறிவிட்டு அவர் பதிலுக்காகக் காத்திருந்தேன். He is not a begger...Many people are willing to give money to him...but he will not accept. அவரா விருப்பப்பட்டு யாரிடம் தானம் கேட்கிறாரோ... அவர்கள் அதிர்ஷ்டசாலிகள். நாதன் என்னிடம் அவரைப் பற்றிச் சொல்லச் சொல்ல... என் மனதில் அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆவல் மிகுந்தது.   இருவரும் பக்கத்தில் உள்ள ரோஜா மலர் கூட்டத்தின் நடுவே அமர்ந்து கொண்டோம்.         He is from north. Born with a silver spoon. நன்கு படித்தவர். ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்டவர். கல்யாணம் செய்து ஒரு குழந்தைக்குத் தகப்பன் ஆனவர். தனது சொத்துக்களை வைத்து வங்கியில் கடன் 

வாங்கி நண்பனோடு சேர்ந்து மும்பையில் வியாபாரத்தை ஆரம்பித்தவர்.ஆன்மீகத்தில் இருந்த ஆர்வத்தால்... பல கோயில் குளங்களுக்கு சென்று வந்ததால்... வியாபாரத்தில் கவனம் சற்று குறைந்தபோது  நண்பனால் ஏமாற்றப்பட்டவ ர். வாங்கிய வங்கிக் கடனை (வியாபாரத்தில் லாபம் இருந்தும்) நண்பன் திருப்பிக் கட்டாத காரணத்தினால்... அவருடைய சொத்துக்கள் எல்லாம் வங்கியால்....          ஏலத்தில் விற்கப்பட்டது. சொத்துக்களை இழந்தவர். அதே காரணத்தினால்... சொந்த மனைவியால் புறக்கணிக்கப்பட்டவர். சில மாதங்களுக்கு முன்பிருந்து கொடைக்கானலில் வாசம். அவர் கொடுக்கும் புனிதநீர் தீராத வியாதிகளைத் தீர்க்கும் மருந்து என்று கூறினார். பிச்சைக்காரர் மீது எனக்கு  தனி ஒரு மரியாதை ஏற்பட்டது. அவரை எப்படி மறுபடியும் சந்திக்கலாம் என்று அவரிடம்  நான் கேட்ட பொழுது...    அவர் விருப்பப்பட்டால் நீங்கள் அவரைக் காணலாம் என்ற பதில் அவரிடமிருந்து கிடைத்தது. குளிர் மிகுந்த🥶 காரணத்தினால் நாதனிடம் விடைப்பெற்று...தங்கும் அறையில் அடைக்கலம் புகுந்தேன். மனதில் இனம் தெரியாத மகிழ்ச்சி.      அந்த மகிழ்ச்சி குறையா வண்ணம்... யாரிடமும் அதிகம் பேசாமல்... நாளை கொடைக்கானல் மலையை விட்டு இறங்கும் முன் அவரை எப்படியாவது சந்தித்து விட வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக் கொண்டு... இரவின் மடியில் உறங்கி போனேன். என்னுடைய வேண்டுதலை இறைவன்  ஏற்றுக்கொண்டாதின் பயனாக...               I met him...but when?...where?... and how? Relax bro 😉😊.

                                                                    தொடர் 6

பகலும் இரவும் கைகுழுக்கி சந்தோஷமாய் பிரிகிற நேரம், கை தேர்ந்த ஒருவரால்🤫 தயாரித்த ஒரு காஃபியின்  நறுமணம் என் சுவாசத்தில் கலந்ததை உணர்ந்தேன்.  ஆழமான அமைதி, அதிகாலை வேளை தான்.

இவ்வேளை எனக்கு மிகவும் பிடித்தமான நேரம்.

சூரியன் வரும் முன் எழுந்தாலே சுறுசுறுப்பு தானாய் வந்து விடுகிறது. அன்று முழுவதும் அந்த சுறுசுறுப்பு தொடர்ந்து இருக்கும். ஏதோ ஒரு சக்தி அந்த நேரத்திற்கு  உண்டு என்பதில் எனக்கு ஒரு ஆழ்ந்த நம்பிக்கை. ஏன் என்றால் நான் எப்போது எல்லாம் அப்படி எழுகிறேனோ… அன்றைக்கு எல்லாம் நான் சுறு சுறுப்பாக சக்தியோடு இருப்பேன். 

சூரியபகவானுக்கு என்  வணக்கங்கள்🙏🏻.   காலை பிரேக்பாஸ்ட் முடித்தவுடன்...  கொடைக்கானல் விட்டு இறங்குவதற்கு தயாரானோம். சங்கர் மகாராஜா வை எங்கே... எப்படி... தேடுவது... சந்திப்பது🤔. அவர் நினைவுகள் புயலாய் என் மனதில் இருந்து விட்டு அகல மறுத்தன. சங்கர் மகாராஜாவை நிச்சயமாக சந்திக்க வேண்டும்.💪 சிந்தனையுடன்😒 எனது காரை மெதுவாக  இயக்கி  கொண்டிருந்தேன். உடன் பயணித்தவர்கள்  இயற்கை இளவரசியை பல கோணங்களில் புகைப்படம் எடுத்தவாறு என்னோடு பயணித்துக் கொண்டிருந்தார்கள். 😎 மூஞ்சி கல் என்ற இடத்தை கடக்கும் பொழுது வலதுபுற ரோட்டோரத்தில் ஒரு சிறு கூட்டம். கூட்டத்தின் நடுவே சில போலீஸ்காரர்கள். என் கண்  கேமராக்களை குவித்து....🧐 நான் கண்ட காட்சி என்னை திடுக்கிட வைத்தது. அங்கே ஒரு சவத்தை... தலை முதல் கால் வரை..,( முகம் தெரியா வண்ணம்) துணியால் போர்த்தி இருந்தார்கள். சரவணபவ என்ற வாசகத்தை தாங்கி இருந்தது... அந்த சவத்தை போர்த்தியிருந்த துணி. அந்தத் துணி சங்கர் மகாராஜாவை நான் சந்தித்த பொழுது அவர் அணிந்திருந்த  துணி😳. 

மெதுவாக  பக்கத்தில் இருந்தவரிடம் என்ன விஷயம்  என்று கேட்டேன். ஏதோ ஒரு பிச்சைக்காரன் இரவின் குளிர் தாங்காமல் இறந்து விட்டார் என்ற பதில் கிடைத்தது. அவரருகே மினரல் வாட்டர் பாட்டிலில் இருந்து... தண்ணீர் சொட்டுச் சொட்டாக வழிந்துகொண்டிருந்தது. 😥என்னை அறியாமல் என் கண்களிலிருந்து ம் கண்ணீர் சொட்டுச் சொட்டாக வழிந்தது. 😰 சாலையில் டிராபிக் ஜாம்.  வண்டிகளை டிராபிக் போலீஸ் வேகமாக நகர்ந்து செல்லுமாறு வலியுறுத்திக் கொண்டிருந்தார். நின்று அவர் முகத்தைப் பார்க்க அவகாசம் இல்லை.            Oh my god...இது நிச்சயமாக சங்கர் மகாராஜாவாக இருக்கக்கூடாது. கனத்த மனதோடு... மவுனமாக... மதுரையில் அண்ணன் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். நடந்த நிகழ்வுகள் என் மனதை பாதித்த தால்... என் உடலையும் பாதித்தது. உணவை ஏற்காமல்... உடல் மௌன அஞ்சலி செலுத்தியது.😷. எனது இனிய நண்பர்களே... உங்கள நோக்கி வரும் எந்த பிச்சைக்காரரையும்... பணம் கொடுத்து உதவாவிட்டாலும்... உதாசீனப்படுத்தாதீர்கள்... அவர்கள் மனம் நோக பேசி விடாதீர்கள்...கொடுப்பதற்கு ஒன்றும்   இல்லாவிட்டாலும்... ஒரு புன்னகையை கொடுத்து... அவரை வணங்கி விட்டு... அந்த இடத்தை விட்டு அகன்று விடுங்கள். என்னுடைய மனதுக்கினிய வாசகர்களே... கதை இன்னும் முடியவில்லை.. Tomorrow is the கிளைமாக்ஸ்...🤣🤣🤣🤣🤣🤣 சிறப்பான செய்திகளுடனும்..😌 சம்பவங்களுடனும்😜... நாளை தொடர்கிறேன்🙌. நாளை நிச்சயமாக மனதில் ஏற்பட்ட புயல் கரையை கடந்து விடும்👍


                                                                         தொடர் 7 


ஆடு நாடு தேடினும் ஆனை சேனை தேடினும்

கோடி வாசி தேடினும் குறுக்கே வந்து நிற்குமோ😳

ஓடி இட்ட பிச்சையும் உகந்து செய்த தர்மமும்

சாடி விட்ட குதிரை போல் தர்மம் வந்து நிற்குமே🙏🏻      by சித்தர் சிவவாக்கியர்.

( எங்கய்யா இருந்தே இவ்வளவு நாளா...🧐    உன்னை மாதிரி ஒருத்தனை தான் நான் இவ்வளவு நாளா தேடிக்கிட்டு இருந்தேன்🧐🤪)


நமக்கு ஏற்படும் உறவுகள்...🤝 தொடர்புகள்...🙌 நட்புகள்...👍 எல்லாம் தற்செயலாக நடப்பதில்லை..🙂 எல்லாம் காரணமாகவும்... திட்டமிட்டேயும் தான் நடத்தப்படுது.🤘


நம் அறிவு நிலையில் மேலேறுவதுக்காக இதெல்லாம் நடக்குது 🤘. தத்துவம்👌🏻... அது எப்படிடா உன்னால மட்டும்  இப்படி தத்துவம் பேச முடியுது... அப்படின்னு நீங்க மனசுல நினைக்கலாம்.🤨 அதுக்கு காரணம் இருக்கு... follow me closely 😂.      இறைவன் அருளால் இரண்டு நாட்களுக்குள்... உடலும்💪 உள்ளமும்🤩  செம்மை ஆனது. மதுரையிலிருந்து சென்னைக்கு சென்று விடலாம் என்று மனைவி சொன்னது என் மனதுக்கும் சரி என்று பட்டது. ( அவன்..அவன் எடுக்கிற முடிவு நமக்கு  சாதகமா தான்யா இருக்குது😆)

16.09.2020... அன்னைக்கு காலைல ஆறு மணி இருக்கும்... சேவல் கொக்கரக்கோன்னு கூவி    சிறப்பா தூக்கத்தை கலைத்தது. ( டேய் சோனமுத்தா தூக்கம் போச்சா..😅).உடம்பும் மனசும் சரியா இல்லாததுனால... ரெண்டு நாளா சரியா சாப்பிடாததுனால... நல்ல பசி. ( நல்ல சாப்பிட்டேன்னு சொல்றதுக்கு இவ்வளவு காரணம் தேவையா தம்பி... இது அண்ணனுடைய மைண்ட் வாய்ஸ்😊) காலையில 7.30 மணிக்கு இட்லியும் கத்தரிக்காய் கொத்சுவையும் சுடச்சுட சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே... இது என்ன பிரமாதம்... இத விட ஸ்பெஷல் ஐட்டம் ஒன்னு இருக்கு... அப்படின்னு ஒரு முட்டை தோசை ரெடி பண்ணினாங்க அண்ணி. அன்புத் தொல்லை தாங்க முடியாமல் இருந்த போதும்...I said a big NO. (இதுக்கு மேல சாப்பிட முடியாதுடா சாமி)😷. 

பிறகென்ன... எட்டு மணிக்கு... சென்னையை நோக்கி பயணம். திருச்சியைத் தாண்டிய பொழுது... மணி 10.30. திரும்பவும் பசி வயிற்றைக் கிள்ளியது. என்ன பொழப்பு இது... நம்ம வாழ்க்கை எதை நோக்கிப் போயிட்டு இருக்குன்னு தெரியல... எட்டு மணிக்கு தானே வயிறு முட்ட இட்லி கொடுத்தேன்... திரும்பவும் கேட்கிறியே... என்று என் தொப்பையை பார்த்துக் கேள்வி கேட்டுகொண்டிருக்கும்போதே.. ஆதித்யா ஹோட்டல் கண்ணில்பட்டது ஒரு ஊத்தப்பம் சாப்பிடுறியா...😋 அப்படின்னு என் பொண்டாட்டி கிட்ட கேட்ட உடனே... அவ ஏதோ முணுமுணுத்த மாதிரி இருந்தது. பேசிக்கிட்டு இருக்கும்போது, என்னைய வாடா போடான்னு சொன்னியா... அப்படின்னு பொண்டாட்டி கிட்ட கேட்டதுக்கு... பேசும்போது flowil  ஏதாவது வந்து இருக்கும் என்று... கோபத்தோடு😡 சொன்னா. ஆதித்யா கிட்டே...as usual ஒரு பொங்கல் வடை சாம்பார் சாப்பிட்டுட்டு... டீ சாப்பிடும் போது... பக்கத்துல ஒரு பெரிய board... அக்கரைப்பட்டி சாய்பாபா கோயில் 3 கிலோ மீட்டர் (தொலைவில்) அருகில். என்ற செய்தியை தாங்கி நின்றது. Why don't we visit this sai baba temple?...    மனதில் எழுந்த கேள்விக்கு... மனைவியிடம் பதில் கேட்டேன். சரி என்றால் சகி. மனைவியிடம் இருந்து Green signal கிடைத்தவுடன்...NH 45 யில் இருந்து இடதுபுறம் அக்கரைப்பட்டிக்கு பயணம் தொடர்ந்தது. Single road... குறுகிய பாதை..  சிறிது நேரத்திற்குள்... *சாய்பாபா எங்களை வரவேற்றார்.  வண்டியை பார்க் செய்தேன். செருப்பை வண்டியிலே வச்சு விடட்டுமா?(a thousand dollar question) அப்படின்னு மனைவி கேட்தற்கு.... வழக்கம்போல் நான் yes என்று பதில் சொன்னேன். (இந்தக் கேள்விக்கு நான் எப்பொழுதும்      yes  என்றுதான் பதில் சொல்வேன். Don't ask me why.😆). மனைவி வண்டியை விட்டு இறங்கி கோயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். நான் கார் கதவையும் ஜன்னல்களையும்... சரியாக மூடிவிட்டு...              செருப்பைக் கழட்ட மறந்து...( மறந்தது நான் தான்.. வேறு யார்...  ஆனால் மறக்க வைத்தது யார்🤔) மனைவியைப் பின் தொடர்ந்தேன். நுழைவாயில் ஒரு அறிவிப்பு. காலணிகளை இங்கே விட வேண்டாம்... அருகிலுள்ள காலனி பாதுகாப்பு பெட்டகத்தில்   விடவும் மனைவி  கோயிலில் உள்ளே சென்று விட்டாள். 

காலணிகளை விடும் இடம் கோயிலின் எதிர்ப் புறத்தில்.  காலணிகளை வைத்துவிட்டு... அதற்கான டோக்கனை வாங்கிக் கொண்டு கோயிலுக்கு சென்றேன். நல்ல தரிசனம். சாய்பாபாவை பார்த்தவுடன்... கொடைக்கானலில் தரிசனம் தந்த சங்கர் மகாராஜ் ஞாபகம் வந்தது. அவரை தரிசிக்க வேண்டும் என்ற வேண்டுதலை  சாய்பாபாவிடம் முறையிட்டேன். (ஐயோ... ஆரம்பிச்சுட்டான் டா... இவன் இம்சை இனிமே தாங்க முடியாத ப்பா... இது சாய்பாபா மைண்ட் வாய்ஸ்)😆.     சிறிது நேரத்திற்குள்... கோயிலை நன்றாக படம் பிடித்துக் கொண்டு... நானும் மனைவியும் வெளியே வந்தோம். மனைவி வண்டியை நோக்கி... நான் காலணியை வைத்த இடத்தை நோக்கி... நடந்தோம். டோக்கணும் பணமும் கைமாறியது. காலணிகளை காலில் மாட்டிக் கொண்டிருக்கும் பொழுது... என்னை யாரோ உற்றுப்  பார்க்கும் 🧐 feeling. Yes 🥰 ... Miracle happened... திரும்பிப் பார்த்த இடத்தில் சங்கர் மகராஜ் இறந்தவர் மீண்டும் எப்படி வரமுடியும். கடவுள் இருக்காண்டா குமாரு🤫. (இன்னைக்கு ரொம்ப எழுதிட்டேன்... மிச்சத்த நாளைக்கு எழுதுறேன்😀😃😄😁😆😅😂🤣)

                                                                    தொடர் 8 

 கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்!  🤘       சங்கர் மகாராஜவை நான் மறுபடியும்  நேரில் கண்டவுடன் மெய்சிலிர்த்தது. 🙂. நான் உங்களை திரும்பவும் தரிசிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை.  என்று நான் அவரைப் பார்த்து கூறிக் கொண்டிருக்கும் பொழுது... என்னை பற்றி அனைத்தையும் தெரிந்து கொண்டு விட்டீர்கள் போலிருக்கிறதே என்று வியப்புடன் என்னை பார்த்தார். அவர் கேட்ட கேள்விக்கு ஆம்... நண்பர் நாதனிடம் இருந்து அவரை பற்றி தெரிந்து கொண்டேன் என்று பதிலளித்து விட்டு... கொடைக்கானல் மலையில் இருந்து கீழே இறங்கும் பொழுது... மூஞ்சி கல்லில்... சரவணபவ என்று எழுதப்பட்ட துணியால் மூடப்பட்ட               சடலத்தை கண்டு...  மகராஜ் இறந்து விட்டதாக நான் தவராக எண்ணியதையு ம்... அவரிடம் கூறினேன். 

பலத்த சிரிப்புடன் நடுவே... அந்த இரவு  மூஞ்சி கல்லில் அவர் தங்கியதாகவும்... இரவில் பக்கத்தில் தூங்கிய ஒருவர் குளிர் தாங்க முடியாமல் கஷ்டப்பட்டது கண்டு... தனது துணியை அவருக்கு கொடுத்து விட்டதாகவும்... அதை மீறி அவர் இறந்து விட்டதாகவும் கூறினார். மற்றொரு கேள்வியும் என் மனதில் உறுத்திக் கொண்டிருந்தது. நான் கூறாமல் என் பெயரை அவர் எப்படித் தெரிந்து கொண்டார்😳. அதை அவரிடம் கேட்கலாமா... வேண்டாமா... என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது...🤔 என்ன பலத்த யோசனை நண்பரே? எதுவாக இருந்தாலும் கேளுங்கள்... என்று சிரித்த முகத்துடன் கூறினார்.      நான் உங்களிடம் கூறாமல் என்னுடைய பெயரை நீங்கள் எப்படி அறிந்து கொண்டீர்கள்?  என்று அவரிடம் ஆச்சரியத்துடன் கேட்ட பொழுது..😒 இதற்கு நான் சித்தனாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை... கண்பார்வை நன்றாக தெரிந்த.. படிக்கத் தெரிந்தவராக மட்டும் இருந்தால் போதும் என்று கூறினார். அவர் பதிலைக் கேட்டு குழப்பமாக இருந்த என்னை கனிவுடன் பார்த்தார்.😌 புரியவில்லையா....😉 உங்களிடம் அன்று உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது... உங்கள் கார் டேஷ் போர்டில் இருந்த ஐடி கார்டில் மற்றும் ஆதார் கார்டில்... இருந்த உங்களுடைய புகைப்படத்தையும்... பெயரையும் பார்த்தேன் என்ற பதிலை கூறினார். 

எனக்கு அவரை விட்டு பிரிய மனம் இல்லை. உங்கள் ஞாபகார்த்தமாக... நினைவாக... ஏதாவது ஒன்றைக் கொடுங்கள் என்று கெஞ்சி கேட்டேன். அவர் பார்வை தூரத்தில் சென்றது. அவர் பார்வையை நான் பின் தொடர்ந்த போது ... அங்கு என் மனைவி... எனக்காக காத்துக் கொண்டிருக்கும் நேரத்தில்... சில  செடிகளை வாங்கிக் கொண்டிருந்தார். நண்பரே... இதோ உங்கள் மனைவி வாங்கும் பூச்செடிகளுக்கு நீங்கள் தண்ணீர் ஊற்றும் பொழுது எல்லாம்... என்னை நினையுங்கள்... நான் உங்கள் நினைவில் என்றும் இருப்பேன் என்றார். பிறகு அவரிடம் இருந்து பிரியா விடை பெற்று கொண்டு... அவருடைய ஆசீர்வாதத்தை  பெறுவதற்காக அவரை வணங்கினேன். சாய்பாபாவிடம் நீங்களே வேண்டியது.. வேண்டியபடி நடக்கும் என்று ஆசிர்வதித்தார்.  அவரிடம் நான் விடை பெற்றுக்  கொண்டவுடன்... அவர் வேகமாக கோயிலுக்குல் சென்றுவிட்டார். என் மனைவி வாங்கிய 4 செடிகளுக்கு கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டு... அவருடைய நினைவோடு... மனதில் ஏற்பட்ட புயல் (பல சிந்தனைகளால்) கரையை கடந்த  அமைதியுடன் சென்னை வந்து சேர்ந்தேன். அடுத்த நாளே... 4 பூ தொட்டிகளை வாங்கி... அதில் அக்கரைப்பட்டி சாய்பாபா கோவிலில் வாங்கிய செடிகளை நட்டு... அவைகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்றி... சீராட்டி வளர்த்து கொண்டு இருக்கிறேன். என் மனைவிக்கு சாய்பாபா கோவிலில் வேண்டிய பணியிட மாற்றம் உடனடியாக  கிடைத்தது.🙏🏻 புதைந்த பிறகே விதையும்... சிதைந்த பிறகே மனமும்... புதிய கோணம் காண்கிறது. மாற்றம் என்ற ஒன்று உங்களிடம் இருந்து ஏற்படாத வரை... உலகில் உங்களால் ஒரு துரும்பைக் கூட மாற்ற முடியாது. விளக்கிற்கு வெளிச்சம் கொடுக்க மட்டுமே தெரியும்... வெளிச்சம் எங்கு தேவை என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். இறைவனுடைய அருளும்... சித்தர்களுடைய அருளும் அவ்வாறு இவ்வுலகில் பரவி இருக்கின்றது. நாமும் 

அதை உணர்ந்து கொண்டு... அவர் அருளைப் பெறுவதற்கு.... நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.🙏🏻 கட்டுரையில் என்னோடு பயணித்த அனைத்து நண்பர்களுக்கு... நோயில்லா பெரு வாழ்வு வாழ்வதற்கு... சங்கர் மகராஜ் ஆசீர்வாதத்தை வேண்டிக் கொண்டு... விரைவில் அடுத்த பயணத்தில் சந்திப்போம் என்ற உறுதி மொழியுடன் விடைபெறுகிறேன் வணக்கம்.🙏🏻

Comments

  1. நல்லதொரு ஆரம்பம் தொடர்ந்து எழுதவும் எங்களை மகிழ்விக்கவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி... என்னுடைய எழுத்துக்களை படித்தது மட்டுமன்றி
      என்னை பாராட்டியதற்கு நன்றி. நீங்கள் விரும்பிய வண்ணம்... உங்கள் ஆசிகளுடன் எழுத முயல்கிறேன்.

      Delete

Post a Comment

Popular posts from this blog

என்னுள் எழுந்த முதல் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்....

யார் அந்த நிலவு